உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 22, 2010

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 25ம் தேதி நேர்காணல்

கடலூர் :

             அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்  காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இது குறித்து விருத்தாசலம் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப் பாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
 

            அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத் தில் பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் வயது சான்றுகளுடன் பங்கேற்கலாம். வயது 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் ஊரில் மக்கள் தொகை 5000க்குள் இருந்தால்  பத்தாம் வகுப்பு கல்வி தகுதி சான்றும், மக்கள் தொகை 5000 மேல்  இருந்தால் பிளஸ் 2  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                     முன்னாள் இதர காப்பீடு முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஓய்வு பெற்ற  ஆசிரியர்கள்,  சுய வேலை வாய்ப்பில் இருக்கும் இளைஞர்களும் இத்திட்டத்தில் சேரலாம். கம்ப்யூட்டர் இயக்கும் திறமை உடையவர்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளை முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

வியாழன், மார்ச் 18, 2010

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு கடலூரில் 22ம் தேதி முகவர்கள் தேர்வு

கடலூர்:

            அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூரில் நடக்கிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில் முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூர் பீச்ரோட்டில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 புகைப்படம், கல்விச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று ஆகியவற்றுடன் அணுகவும். மேலும் 5,000 மக்கள் தொகைக்கு குறைவான பகுதியில் உள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சியும், 5,000க்கும் அதிமுள்ள மக்கள் தொகை பகுதியில் உள்ளவர்கள் 12ம் வகுப்பும் தேர்ச்சியும், அடிப் படை கணிதத்திறனும் பெற்றிருக்க வேண்டும். மற்ற காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனுமதிக்கப் படமாட்டாது. இத்தகவலை கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior