உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அண்ணா பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
          தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,. எம்.பிளான்., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் இந்த டான்செட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே சேர்ககை வழங்கப்படுகிறது. 
 
          தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பத்துடன் நுழைவுத் தேர்வுக் கட்டணமாக ரூ.500ஐ (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் ரூ.250) செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செலுத்தும் மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.500 அல்லது 250ஐ ஒரே டிடியாக எடுத்தும் அனுப்பலாம். மாணவர்கள் டிடி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையின் மையங்களில் நேரடியாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
         அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பலாம். இந்த மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 
 
          எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,
 
      எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் மாதம் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
 
       எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 
 
 
 
 
 இணையதளம் 
 
 
 

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

கடலூர்:
              
          கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, புதன்கிழமை நடந்தது.  

               அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகவும், நேரடியாகவும் தேர்வு செய்யப்பட்ட, பி.இ., பி.டெக். மற்றும் எம்.சி.ஏ. மாணவர்களுக்கு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப் பட்டன. தொடக்க விழாவுக்கு பொறியியல் கல்லூரித் தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கடலூர் நாகர்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.எஸ். மனேகரன் கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்தினார். 

               கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அவர், மடிக் கணினிகளை வழங்கினார்.  கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்.விஜயகுமார், பொறியியல் கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் ஆனந்த் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, கல்லூரி இயக்குநர் டாக்டர் கே.எத்திராஜுலு, முதல்வர் டாக்டர் பி. சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.




Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தொலைதூரக் கல்வி முதுகலை பட்டம் ஆராய்ச்சிப் படிப்பிற்கு (Ph.d) செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

            "தொலை தூரக் கல்வி மூலம் படித்த முதுகலை படிப்பை, பி.எச்.டி., படிப்புக்கு தகுதியாக அனுமதிக்க முடியாது என, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவு செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலையில், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜன் என்பவர் பி.எச்.டி., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

             ஆனால், தொலைதூரக் கல்வி மூலம், முதுகலை பட்டம் பெற்றுள்ளதால், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜனுக்கு தகுதியில்லை என, ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் நடராஜன் மனுத் தாக்கல் செய்தார். பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். 

மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:

              கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த சுற்றறிக்கையில், தொலை தூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், முதுகலை பட்டங்கள், பட்டயங்களை அங்கீகரிக்கக் கூடாது என, கொள்கை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே நிலையை உறுதி செய்து, மார்ச்சில் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த முடிவு, அண்ணா பல்கலையை கட்டுப்படுத்தும். மனுதாரரை பி.எச்.டி., படிப்புக்கு அவரை சேர்க்காதது நியாயமானது. எனவே, ஆய்வு மையத்தின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முகாந்திரமில்லை. அந்த உத்தரவு செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.



Read more »

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

அண்ணா பல்கலைக்கழகத்தில் 'டெக்னோ 2011' போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரிக்கு 5ம் பரிசு

 கடலூர் : 

            கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த "டெக்னோ 2011' போட்டியில் 5ம் பரிசு வென்றனர்.

           சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 16 தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அளவில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களின் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் "டெக்னோ 2011' போட்டி நடந்தது. இந்திய உற்பத்தியாளர் சம்மேளனம், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இப்போட்டியில் இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வடிவமைப்பினை சமர்பித்தனர். 

            பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8 படைப்புகளில் கடலூர் சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இயந்திரவியல் மற்றும் மின்னறிவியல் 3ம் ஆண்டு மாணவர்கள் சமீத் அர்பாஸ் அஞ்சும், ஜெகதீஷ், கணேஷ்பாபு, பிரவீன்குமார் படைப்பு 5ம் பரிசை வென்றது.மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் மற்றும் இந்திய உற்பத்தியாளர் சம்மேளன தலைவர் ஹரீஸ், மேத்தா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினர்.

             கல்லூரிக்கான சிறப்பு சான்றிதழை கல்லூரி முதல்வர் குமார், பேராசிரியர்கள் மல்லிஸ்வரன், ஈஸ்வரன் பெற்று கொண்டனர். நிறுவன தலைவர் ரங்கநாதன், இயக்குனர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் ராஜா மாணவர்களை பாராட்டினர்.






Read more »

வியாழன், ஏப்ரல் 28, 2011

எம்.சி.ஏ, எம்.பி.ஏ.படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

           எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., - எம்.டெக்., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்க்கை நடத்துவதற்கான போட்டித் தேர்வு, வரும் மே மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று மாலையுடன் விண்ணப்பம் வழங்கப்படுவது முடிந்துள்ள நிலையில், இதுவரை இப்படிப்புகளில் சேர, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Read more »

வெள்ளி, மார்ச் 04, 2011

பொறியியல் படிப்பு கவுன்சிலிங்: மே 16 முதல் விண்ணப்பம் வழங்க முடிவு

            பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குக்கு மே 16ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

            தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 478 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. இன்னும் புதிய கல்லூரிகள் வர உள்ளன. எனவே இடங்கள் மேலும் கூட உள்ளன. அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்குக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

               சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் வழக்கம் போல இந்த ஆண்டும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து செயல்பாடுகளும் நடைபெற உள்ளன. கவுன்சிலிங்கும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற மே மாதம் 16ந் தேதி முதல் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் அனைத்து அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும். மேலும் பல வங்கிகளிலும் கொடுக்கப்பட உள்ளது.

               விண்ணப்பம் மே மாதம் 31 ந் தேதி வரை கொடுக்கவும் அன்றே சமர்ப்பிக்க கடைசி நாளாகவும் தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல இந்த வருடம் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கின் முதல் கட்டம் முடிந்த உடன் அதாவது அதற்கு அடுத்த வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

             என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜுலை மாதம் 1 ந்தேதி முதல் ஆகஸ்டு 14 ந்தேதிவரை நடத்தவும் அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான முன் ஏற்பாடுகளை துணை வேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர், மாணவர்சேர்க்கை தலைவர் பேராசிரியர் ரைமண்ட், பேராசிரியர்கள் நாகராஜன், ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior