உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில்அன்னதான திட்டம் துவக்கம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. இந்து அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். 

               அதன்படி  முதல் தமிழக கோவில்களில் விரிவாக்கப்பட்ட அன்னதான திட்டம் துவங்கியது. 

கடலூர் மாவட்டத்தில் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமி கோவில், 

சிதம்பரம் தில்லை காளி கோவில், 

நெய்வேலி வேலுடையான்பட்டு சுப்ரமணியசுவாமி கோவில், 

பெண்ணாடம் பிரளய காளேஸ்வரி கோவில், 

திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவில் 

            என 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலர் குமார், ஜெ.,பேரவை நகர செயலர் கந்தன், ஒன்றிய செயலர் பழனிச்சாமி, கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். 

               அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் இதுவரை 64 ஆயிரத்து 300 ரூபாய் நன்கொடை வழங்கியுள்னர். இதில் கடலூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா 5,000 ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம்: தில்லை காளி கோவிலில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அலுவலர் சிவக்குமார், திருவந்திபுரம் கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி: வேலுடையான்பட்டு கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தனர். என்.எல்.சி., செயல் இயக்குனர் சிவஞானம், அ.தி.மு.க., தொழிற் சங்க பிரமுகர்கள், ஜெ., பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.

                   பின்னர் இத்திட்டம் மாநில அளவில் 306 கோயில்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது, தற்போது மேலும் 106 கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழகத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது,   கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கிவைத்தார், இந்து அறநிலைய இணை ஆணையர் ஜகநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மருதவாணன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், உள்ளீட்டோர் பங்கேற்றனர்.

             இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பெருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தில்லைக் காளியம்மன் கோயிலில் தினந்தோறும் திங்கள்கிழமை முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், ஜனவரி 24, 2011

நெல்லிக்குப்பம் 300 ஆண்டுக்கு பின் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச விழா



           நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

           இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. 300 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச விழா, அன்னதானம் நிகழ்ச்சியும், நெல்லிக்குப்பம் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது.

            இதை முன்னிட்டு கைலாச நாதர், அகிலாண்டேஸ்வரி, சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகம் ஆகிய சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்து சாமிகளுக்கு அலங் காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வடை-பாயாசத்துடன் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் குப்புசாமி, துளசிதாஸ், பொருளாளர் தனசேகரன், நகரமன்ற உறுப்பினர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                 தொண்டர்படை அமைப்பாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். நகரசபை தலைவர் கெய்க்வாட்பாபு, அன்ன தானம் வழங்கி தொடங்கி வைத்தார். ஊறுகாய் வெங்காய தயிர் பச்சடி, பொறியல், கூட்டு, அப்பளம், மசால்வடை, பாயாசம், கேசரி, சாம்பார் சாதம், வெஜிடேபிள் பிரியாணி, புதினா சாதம் ஆகிய அன்ன தானம் வழங்கப்பட்டது.

               மாநில தொண்டர்படை துணை தளபதி புஷ்பநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர இணைச்செயலாளர் வைத்தியநாதன், நாராயண மூர்த்தி, கோவிந்தராஜ், செந்தில்குமார், கண்ணன், முருகன், வேலு, தண்டபாணி, ஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் பாக்கியராஜ் செய்து இருந்தார்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு : பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழு முடிவு

பண்ருட்டி : 

                 மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
                 பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பொருளாளர் பொன்னம்பலம் முன் னிலை வகித்தனர்.  கூட்டத்தில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி (இன்று) துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  பண்ருட்டி ஒன்றியத்தில் கிளைகள்  தோறும் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கி கொண்டாடுவது, வரும் 6ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் துணைமுதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம் மொழி மாநாட்டை விளக்கி தெருமுனை பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பாரிவள்ளல், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஞானமணி, துணை அமைப் பாளர் சிவக்குமார், கோவிந்தராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், பிப்ரவரி 25, 2010

ஜெ., பிறந்த நாள் விழாவையொட்டி 600க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

கடலூர் : 

                ஜெ., பிறந்த நாளையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
                  கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாளையொட்டி கடலூர்  பாடலீஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், தேவநாத சுவாமி கோவில் களில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் செய்தனர். கடலூர் டவுன்ஹால், ரோட்டரி ஹால், அரசு மருத்துவமனை, விருத்தாசலம் மற்றும் நெய்வேலியில் நடந்த ரத்ததான முகாமை மாவட்ட செயலாளர் சம்பத் துவக்கி வைத்தார். இதில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிகளில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமரசாமி, நகர செயலாளர் குமரன், இளைஞரணி தலைவர் மாதவன், இலக்கிய அணி செயலாளர் நத்தம் கோபு, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன், சரவணன், ரவீந்திரன், முருகுமணி மற்றும் ஜெகன் லெட்சுமி நாராயணன், தமிழ்ச்செல்வன், ஜெ., பேரவை சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சிவசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior