உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அருண்மொழித்தேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருண்மொழித்தேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 17, 2010

நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: குடும்பத்துடன் பங்கேற்க வேண்டுகோள்


சிதம்பரம் : 

                      நெய்வேலியில் நாளை 18ம் தேதி ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க அ.தி.மு.க., வினருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அருண் மொழித்தேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

                      'தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் மின் வெட்டை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை (18ம் தேதி) மாலை 3 மணிக்கு நெய்வேலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி , எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெ., பேரவை, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் பொதுமக் கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார். 

அண்ணா தொழிற் சங்கம்: 

                      நெய்வேலியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பேரவை மாநில செயலா ளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

download this page as pdf

Read more »

சனி, ஏப்ரல் 10, 2010

தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் தூக்கியெறிவார்கள் : செங்கோட்டையன் 'ஆரூடம்'

 சிதம்பரம்: 

               தி.மு.க.,வை வரும் தேர்தலில் மக்கள் தூக்கியெறிவார்கள் என மாஜி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
 
                  நெய்வேலிக்கு ஜெயலலிதா வரும் 18ம் தேதி வருவது தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட அ.தி. மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடந் தது. மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலை வகித்தனர். நகர செயலா ளர் சுந்தர் வரவேற்றார்.  

தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் சிறப்பாளராக பங்கேற்று பேசியதாவது: 

              நெய்வேலியில் ஜெயலலிதா பங்கேற்கும் விழா தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியிலும் அ.தி.மு.க., விற்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். ஜெயலலிதாவையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி உடைந்துவிடும். மக்கள் தி.மு.க.,வை தூக்கியெறிந்து விடுவார்கள். 2001- 2005 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டே இல்லை. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மின்தட் டுப்பாடு ஏற்பட்டு தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள், சிறு தொழில் நடத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜவுளி ஏற்றுமதியில் 4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள், ஜெ., பேரவை மாரிமுத்து, முன் னாள் நகர மன்ற தலைவர் குமார், முன்னாள் சேர்மன்கள் தேன்மொழி காத்தவராயசாமி, செஞ்சிலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

வியாழன், ஏப்ரல் 08, 2010

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு, 'சஸ்பெண்ட்': சட்டசபையில் அமளி, கூச்சல்


Latest indian and world political news information


              தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகில் திரண்டு சென்று கோஷம் போட்டு, தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றி, நாளை வரை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், 

தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, 

                    'கடந்த ஆட்சியாளர்கள், என்னை மக்கள் மன்றத்தில் இருந்து ஒதுக்குவதற்காக என்னை விரட்டினர். அப்போது, ஒரு உன்னதமான தலைவர், தொண்டரை எப்படி அரவணைப்பாரோ, அதேபோல் என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கருணாநிதி அரவணைத்தார்' என்றார். உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். செங்கோட்டையன் எழுந்து, ஒரு கருத்தை தெரிவித்ததும், அதை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

                              அருண்மொழித்தேவனும், அரியும் கடும் கூச்சலிட்டு கோஷம் போட்டதும், அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக் காவலர்கள், சபைக்குள் நுழைந்து இருவரையும் வெளியேற்ற முயற்சித்தனர். அதற்குள், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று தரையில் உட்கார்ந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்துக்கொண்டே, 'அமைதியாக உட்காருவதாக இருந்தால் உட்காருங்கள்' என்றார். இப்படிக் கூறியதும்,'ஒழிக' என்றும், 'நியாயம் வேண்டும்' என்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். இதனால், சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                         ஒரு பக்கம், 20க்கும் மேற்பட்ட சபைக் காவலர்கள் இரு உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, மறுபக்கம் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து மற்ற உறுப்பினர்கள் கோஷம் போட்டதால், சபையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை உருவானது. அந்த நேரம் பார்த்து, சபைக் காவலர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அருண்மொழித்தேவன், கோஷம் போட்ட உறுப்பினர்களுடன் நைசாக உட்கார்ந்து கொண்டார். இதைக் கவனித்த அமைச்சர் அன்பழகன், 'சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்ட உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் சபைக்குள்ளே இருந்து கோஷம் போடுகின்றனர். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது' என்றார்.

                              அதன்பின், 'சபைக் காவலர்கள் என்னுடைய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்களது கடமையை செய்யாதவர்களாகி விடுவீர்கள்' என சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து, சபைக்காவலர்கள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி, அருண்மொழித்தேவனையும், அரியையும் வெளியேற்ற முயன்றனர். அப்போது, அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, 'அ.தி.மு.க., உறுப்பினர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு, தங்கள் கட்சி உறுப்பினர் பேசி முடித்து, அடுத்து தி.மு.க., உறுப்பினர் பேச ஆரம்பித்ததும், சபையை நடக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் பட்ஜெட் மீதான பொது விவாதம் வரை தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும்' என தீர்மானம் கொண்டு வந்தார்.

                         இதை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றிய சபாநாயகர், 'அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபை மரபுகளை மதிக்காமல், திட்டமிட்டு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். எனவே, இன்று (நேற்று) சபைக்கு வந்து இடையூறு செய்த அக்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அனைவரையும், வரும் 9ம் தேதி(நாளை) வரை நீக்கி வைக்கப்படுகின்றனர்' என்றார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காலை 11.47க்கு துவங்கிய அமளி 12.03க்கு ஓய்ந்தது.

எத்தனை பேர் நீக்கம்?: 

                  சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை 57. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூன்று பேர் மட்டும் நேற்று சபைக்கு வரவில்லை. மற்ற 54 பேரும் சபைக்கு வந்ததாக, அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 54 பேரில், 52 பேர் மட்டுமே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தபோதும், நேற்று நடந்த அமளியில் அவர்கள் பங்கேற்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

downlaod this page as pdf

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம்: வேறு இடத்தில் கட்ட எம்.எல்.ஏ., மனு

ஸ்ரீமுஷ்ணம் : 
 
                ஸ்ரீமுஷ்ணம் பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்தை மறைத்து புதிய கட்டடம் கட்ட கூடாது என எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் மற்றும் 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி கட்டும் பணியை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவில் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 88ம் ஆண்டு கட்டப்பட்டு எம்.ஜி.ராமச் சந்திரன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்திற்கு முன்பாக புதிய மன்ற அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய மன்ற அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் 20 பேர் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தார். இதனிடையே அ.தி.மு.க.,வினர் கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டனர்

Read more »

சனி, மார்ச் 06, 2010

சிதம்பரம், கடலூரில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சிதம் பரம், கடலூரில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித் தும், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் முன் னாள் முதல்வர் ஜெ., உத்தரவின்படி மேற்கு  மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரம் மேல வீதியில் முன்னாள் அமைச்சர் கலை மணி தலைமையிலும், கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு  மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயாலாளர்கள் அருண்மொழித்தேவன் , சம்பத் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior