உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அலங்கார செயற்கை நகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலங்கார செயற்கை நகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

கடலூரில் செயற்கை நகைகள் தயாரிக்கும் பயிற்சி

கடலூர்:
 

கடலூர் தி சுசான்லி குரூப்ஸ் மேலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

              மத்திய அரசு அமைப்பு மூலமாக கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்கு பஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் வருகிற 14, 15 மற்றும் 20, 21 ஆகிய 4 நாட்கள் பேன்சி நகைகள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல், வளையல், கொலுசு மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேன்சி நகைகள் தயாரிக்கும் முறை செயல் முறையுடன் செய்து காண்பிக்கபடும்.

            கடைகளில் சுமார் ரூ.500 மதிப்பில் வாங்கும் பேன்சி நகைகளை ரூ.100 முதல் 200 க்குள் நாம் கைப்பட தயாரிக்கலாம் இதேபோல் வீட்டில் இருக்கும் பெண்கள் நேரம் கிடைக்கும்போது இதை தயாரித்து விற்பனை செய்தாலே மாதம் கணிச மான தொகையினை சம்பாதிக்க முடியும். bஇதனால் முழுநேர தொழிலாக செய்பவர்களுக்கு மத்திய அரசின் அமைப்பு வழங்கும் இப்பயிற்சியின் மூலமாக வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று தொழில் தொடங்கலாம். இப்பயிற்சிக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 
 
முன்பதிவு மற்றும் பயிற்சி கட்டணம் விபரங்களுக்கு 98422-43055 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 
 
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 

Read more »

சனி, மே 07, 2011

கடலூரில் அட்சய திருதியை: ரூ. 20 கோடிக்கு நகை விற்பனை

கடலூர்:

                  அட்சய திருதியை முன்னிட்டு கடலூர் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூரில் மட்டும் ரூ. 20 கோடிக்கு நகைகள் விற்பனை ஆகியிருப்பதாக வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீடுகளில் செல்வம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நம்பிக்கை மக்களிடையே பெருகி வருகிறு.
 
           அட்சய திருதியை நேரம் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை என்று கணித்து ஜோதிடர்கள் அறிவித்து இருந்தனர்.  இந்த நேரத்தில் கடலூர் நகைக் கடைகளில் நகை வணிகம் மிக அதிகமாக இருந்தது. கடலூரில் 200க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. கடலூரைச் சுற்றியுள்ள புதுவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை விட, கடலூரில் பொதுவாக நகை வணிகம் அதிகம். புதுவை பிரதான வணிக கேந்திரமாக விளங்கியபோதிலும் பொதுவான நாள்களில் நகை வணிகம், புதுவையை விட கடலூரில் அதிகம் என்கிறார்கள் கடலூர் நகை வணிகர்கள். கடலூர் நகைகளுக்கு மக்களிடையே பாரம்பரியமாக நம்பிக்கை இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
 
            கடலூரில் சாதாரணமாக முகூர்த்த நாள்களையொட்டி, ரூ. 10 கோடி வரை நகை வியாபாரம் இருப்பதாக, நகை வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். அட்சய திருதியையொட்டி கடலூரில் ரூ. 20 கோடிக்கு மேல் நகை வணிகம் நடந்து இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
 
 
நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர்கூறுகையில், 

            ஏனைய பண முதலீடுகளில் நிறைய சந்தை அபாயங்கள் உள்ளன. தங்கத்தின் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே உள்ளது. தங்கத்தை வைத்து உடனே பணமாக்க முடியும். எனவே முதலீட்டுக்கு ஏற்றதாகவும் இருப்பதால், தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளது. ÷அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதும், மக்களை நகை வாங்கத் தூண்டியிருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க வரும் பெண்கள், பெரும்பாலும் வயதான பெண்மணிகளாக இருந்தாலும், புதிய டிசைன் என்ன வந்து இருக்கிறது என்றுதான் கேட்கிறார்கள் என்றார்.
 
இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

             தங்கத்துக்கு 1 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பல நகை வியாபாரிகள் வரி செலுத்துவது இல்லை. பலர் வரிவிதிப்பு எண்கூட வாங்குவது இல்லை. பொதுவாக முகூர்த்த நாள்களில் ரூ.10 கோடி வரை நகை வணிகம் நடைபெறும். கடலூரில் மாதம் ரூ.4 லட்சம் மட்டுமே (ரூ. 4 கோடிக்கு நகை வணிகம்) வரி செலுத்தப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நகைக் கடை ஒன்று, மாதம் ரூ. 1 லட்சம் வரி செலுத்துகிறது. ஆனால் மற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய நகைக் கடைகள், அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரைதான் வணிக வரி செலுத்துகின்றன.
 
              உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள ஒரு வழக்கு காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக நகை வணிகர்களிடம் இருந்து வரி வசூலிக்க முடியவில்லை. அட்சய திருதியை முன்னிட்டு முகூர்த்த நாள்களை விட, கடலூரில் இருமடங்கு நகை வணிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 28, 2011

கடலூரில் ஏப்ரல் 30 ம் தேதி முதல் செயற்கை நகைகள் செய்ய பயிற்சி முகாம்

கடலூர் : 

            கடலூரில் மத்திய அரசின் கே.வி.ஐ .சி., மூலம் செயற்கை நகை செய்யும் பயிற்சி நடக்கிறது. 

           கடலூரில் மத்திய அரசின் அங்கமான கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான செயற்கை அழகு வளையல்கள், முத்து மாலைகள், கம்மல், கொலுசு போன்றவற்றை தயார் செய்யும் குறுகிய கால சிறப்பு பயிற்சி முகாம் வரும் 30 ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாமில் முன்பதிவு செய்யும் முதல் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்குப் பின்னர் மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 20 முதல் 30 சதவீதம் வரை மானியத்துடன் கடன் பெறமுடியும். மேலும் வங்கிக்கடன் எப்படி பெறுவது போன்றவற்றுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 

             இதுகுறித்த தகவல்களுக்கு 93676 22256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அலங்கார செயற்கை நகைகள் குறித்த பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் அக்குபஞ்சர் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior