உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அஸ்வின் கோட்னீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஸ்வின் கோட்னீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 07, 2010

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்


கடலூர்: 

                    கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு மகள் புனிதரசி (24). இவர் வீட்டில் இருந்த படி பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டமூர்த்தியும் புனிதரசியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் புனிதரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்து கூறி மணிண்டன் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது புனிதரசியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஏமாற் றமடைந்த புனிதரசி நியாயம் கிடைக்கவேண்டி பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்த்த பெண் கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்களுடன் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத் தியதைத் தொடர்ந்து புனிதரசி உள்ளிட்டோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்ட மூர்த்தி மீது புகார் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

வெள்ளி, மார்ச் 26, 2010

இருதரப்பினரிடையே மோதல் சம்பவம்: கடலூரில் அமைதிக் கூட்டம்

கடலூர்: 

                    கடலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்  தொடர்பாக நேற்று சமாதானக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                 கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையம் மற்றும் நாயக்கநத்தம் கிராமத்தில் கடந்த 21ம் தேதி இருதப்பினரிடையே  கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 7 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 8 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க நேற்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அமைதிக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார்.  டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், டி.எஸ்.பி., ஸ்டாலின் தாசில்தார் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

                     பாதிக்கப்பட்ட இருதரபினர் தரப்பில் முக்கிய பிரமுகர்கள் அமைதிக் கூட்டத்தில்  பங்கேற்றனர். கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள், வருவாய்த்துறை, போலீசார் கொண்ட முத்தரப்பு அமைதிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதில் இருதரப்பில் தலா ஐந்து பேர் கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்  உள்ளிட்ட 16 பேர் கொண்ட சமாதான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூன்று வாரத்தில் திங்கள் கிழமைகளின் கூடி அப்போதைய பிரச்னைகள் குறித்து பேசி சுமூக முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

வங்கியில் ரூ.2 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட 2 பேருக்கு பணம் பெற்றுத் தந்தார் எஸ்.பி.

கடலூர்:
 
               வங்கியில் செலுத்திய ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முயற்சியால், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அந்தப் பணம், அதே வங்கியில் இருந்து பெற்றுத் தரப்பட்டது.  
 
இதுகுறித்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஞாயிற்றுக்கிழமை  கூறியது:  
 
                   கடலூர் அருகே ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர்கள் ஷெரியாபேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப்பீவி. இருவரும் 2007-ம் ஆண்டு சிதம்பரம் நகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் வங்கியில் தலா ரூ.1 லட்சம் டெபாஸிட் செய்தனர். வங்கி மோலாளர் அப்துல்ரகீம் அவற்றுக்கு ரசீதும், பாலிஸியும் வழங்கினார்.  உலக அளவில் வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து விட்டதாக அறிந்த ஷெரியா பேகமும், மகபூப் பீவியும், தங்கள் பாலிஸிக்கு வட்டி குறைந்து இருக்கிறதா என்று பார்க்க, 2008 அக்டோபரில் அந்த வங்கிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வங்கி மேலாளர் அப்துல் ரகீம் அங்கு இல்லை. புதிய மேலாளராக அய்யப்பன் இருந்தார்.  அந்த இருவரின் பாலிஸிகளையும் மேலாளர் வாங்கிப் பார்த்தார். ஆனால் அத்தகைய பாலிஸிகள் எதுவும் வங்கியில் இருந்து வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, இருவருக்கும் 2007-ல் வழங்கப்பட்ட பாலிஸிகள் போலியானவை என்று தெரியவந்தது.   இது குறித்து இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் வங்கி மேலாளராக இருந்த அப்துல் ரகீம் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் செலுத்திய பணத்தை வங்கி நிர்வாகம் வழங்காமல் இருந்தது. இதனால் வழக்கு விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.    இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை பெற்றுத் தருவதற்கான முயற்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் நடவடிக்கை எடுத்தார். இரு பெண்களும் அந்த வங்கியில் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் முறையாக உள்ளது. எனவே வழக்கு நிலுவையில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வங்கி, பணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  வங்கியின் மும்பை அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு எஸ்.பி. இதைத் தெரிவித்தார். அதன்பேரில் வங்கித் தலைமை அலுவலக அதிகாரிகள் சிதம்பரம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி, இரு பெண்களும் வங்கியில் பணம் செலுத்தியது உண்மைதான் என்று கண்டறிந்தனர்.   அதைத் தொடர்ந்து அவர்கள் வங்கியில் செலுத்திய தொகை, தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வங்கியில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது என்றார் எஸ்.பி.

Read more »

சனி, மார்ச் 20, 2010

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

கடலூர் : 

                மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

             இருப்பினும் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் டி.எஸ். பி.,க்கள், சிறப்புபடை, ரவுடி ஒழிப்பு படை மற்றும் டி.எஸ்.பி.,க்களின் கிரைம் பார்ட்டிகள் கலந்து கொண்டனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேல் மற் றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர் களை விரைந்து பிடிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

விருத்தாசலம் அருகே அம்பேத்கர் சிலை பழைய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது

விருத்தாசலம் : 

              பழையப்பட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை,  ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மீண்டும் பழைய இடத்தில் அமைத்து கலெக்டர் தலைமையில் நேற்று திறக் கப்பட்டது.
 
                கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத் தில் நூலகம் அருகில் அனுமதியின்றி ஓராண் டிற்கு முன் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த இரு (ஆதிதிராவிடர்-முஸ்லீம்) சமுதாயத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெண் மணி தியாகிகள் தினத் தன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்னைக்குரிய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன் றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப் போது அதிகாரிகள் ஒரு மாதத்தில் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். அதன்பின் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என்றனர்.
 
                     சிலையை வேறு இடத் தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு தடை விதிக்க கோரி அதே ஊரைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் அமிர்தலிங்கம் சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கடந்த ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு திடீரென வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை வேறு இடத்தில் நிறுவினர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 11ம் தேதி அளித்த தீர்ப்பில் சிலையை மாற்றி அமைத் ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இம்மாத இறுதிக்குள் பழைய இடத்தில் மீண்டும் சிலையை நிறுவி கலெக்டர், எஸ்.பி., முன் னிலையில் திறப்பு விழா நடத்தவேண்டும் என தீர்ப்பளித்தனர். அதனையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம்  அம்பேத்கர் சிலையை பழைய இடத்திலேயே நிறுவினர். நேற்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் வாலிபர் சங்க மாநில செயலாளர் கண்ணன், துணை செயலாளர் வேல்முருகன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் தனசேகரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணன், வக்கீல் திருமூர்த்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  பின்னர் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியே சிலைக்கு மாலை அணிவித்தனர். சிலை திறப்பு விழாவையொட்டி பழையபட்டினம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior