உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு: பெற்றோர்கள் வரவேற்பு

கடலூர்:

          எஸ்.எம்.எஸ். மூலம் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டத்துக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 

              ஆசிரியர்களின் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கும் முறை தர்மபுரி மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திட்டம் கைவிடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியராக வே.அமுதவல்லி பொறுப்பு ஏற்றதும், இத்திட்டத்தை கடலூர் மாவட்ட பள்ளிகளில் அமல்படுத்தினார். கடந்த ஜூலை மாதத்தில் சோதனை அடிப்படையிலும், ஆகஸ்ட் முதல் நிரந்தரமாகவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 4 செல்போன் எண்கள் இதற்காக தரப்பட்டுள்ளன.

            இதையடுத்து சுகாதாரத் துறையினருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு பள்ளி வேலை நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் வருகை குறித்து, எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் மாவட்ட என்ஐசி மையத்தின் சர்வர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விடும். இத்திட்டத்துக்கு கடலூர் மாவட்ட பெற்றோர் மற்றும் பொதுநல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கடலூர் மாவட்ட பெற்றோர் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கவிஞர் பால்கி கூறுகையில், 

             இத்திட்டத்தால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து உள்ளது. அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் இத்திட்டத்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகையை தெரிவிக்கும் திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் 99 சதவீத ஆசிரியர்கள், குறித்த நேரத்தில் பள் ளிக்கு வந்து விடுகிறார்கள் என்றும் அச்சங்கம் தெரிவிக்கிறது. 

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் வெளியிட்டு உள்ள அறிக்கை:

            இத்திட்டத்தை முதல்முதலாக கடலூர் மாவட்டத்தில அறிமுப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அமுதவல்லிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மக்களுடன் அதிக நெருக்கமான சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, ரேஷன் கடைகள் ஆகியவற்றுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தனியார் பஸ் ஓட்டுநர் பி.பண்டரிநாதன் கூறுகையில்,

              கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது இல்லை. இதனால் மாணவர்களில் அடிப்படைக் கல்வியே ஆட்டம் காண்கிறது. ஒரு ஆசிரியர் 5 வகுப்புகளையும் பார்த்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த எஸ்.எம்.எஸ். திட்டம் அமையும் என்றார்.












Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

                தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகள் மொத்தம் 649 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் மூலமாக பி.எட். மற்றும் எம்.எட் தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்தன.

        விடைத்தாள் திருத்தப்பட்டு கம்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. 


இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எம்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

             தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத் தின் கட்டுபாட்டிலுள்ள 649 கல்வியியல் கல்லூரி களுக்கான பி.எட். மற்றும் எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று (13-ந்தேதி) வெளியிடப்படும். அதனை பல்கலைக்கழக இணைய தளம்  http://www.tnteu.in வழியாக அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின் தொகுப்பு பட்டியல் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ் இந்த மாத இறுதி வாரத்தில் அவரவர் படித்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் வழங்கப்படும். 

                   மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மறு கூட்டல், ஒளிநகல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அதற் குரிய விண்ணப்பங்களில் உரிய கட்டணத்துடன் 24-ந்தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.  








Read more »

புதன், ஆகஸ்ட் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் குறுந்தகவல் மூலம் ஆசிரியர் வருகை பதிவு: அகஸ்ட் 13 ல் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளது. 

 இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.அப்துல் மஜீது, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை மேற்பார்வையிடும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் மீது நம்பிக்கை வைக்காமல், எஸ்.எம்.எஸ். மீது நம்பிக்கை வைத்து ஆட்சியர் அறிமுகம் செய்துள்ள எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் திட்டம் கைவிடப்பட வேண்டும்.   

               எஸ்.எம்.எஸ்.  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவால், கற்பிக்கும் நேரம் குறையும். கற்பிக்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு படபடப்பு, தடுமாற்றம், பயம், கற்பிக்க முடியாமல் போகும் நிலையும் ஏற்படும். தர்மபுரி மாவட்டத்தில் இத்திட்டம் அமல்படுத்தியதில், கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

             அந்த மாவட்டத்தில் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியர் மாற்றப்பட்ட பின்பு திட்டம் கைவிடப்பட்டது.  பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர், கல்வித்துறை அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட விடுப்புகளால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விடுமுறையில் செல்வதால், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தினமும் ஏற்படுகிறது. 

             ஆசிரியர்கள் வராவிட்டால் ஓராசிரியர் பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் வருகையை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கும் திட்டம் தொடர்ந்தால் திட்டத்தைக் கைவிடக்கோரி 13-ம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 




          

Read more »

வியாழன், ஜூலை 07, 2011

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்காக வரும் எஸ்.எம்.எஸ்., ஒரே நேரத்தில் பதிய தனி மொபைல் போன்

கடலூர் :

           அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்வதற்காக, நான்கு புதிய மொபைல் போன்கள், தேசிய தகவல் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.


          ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, அதன் மூலம் தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், நேற்று (6ம் தேதி) முதல் அமல்படுத்தப்பட்ட இம்முறைப்படி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், காலை 10 மணிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம், தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பினர்.

             இதில், 80 சதவீத பள்ளிகளின் வருகைப் பதிவேடு, சரியான முறையில் பதிவானது. ஒரே நேரத்தில், 1,200க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்., வருவதால், மொபைல் போனில் பதிவாகாத நிலை இருந்தது. எனவே, மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களை நான்காக பிரித்து, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு மொபைல் போன் என கணக்கிட்டு, தேசிய தகவல் மையத்திற்கு, நான்கு புதிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.




Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

கல்லூரி ஆசிரியர்களின் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நிறுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புக் குழு சார்பில் வாயில் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் வி.தங்கமணி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் எஸ்.சேகர், ஜி.வணங்காமுடி. வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாயில் முழக்கப் போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior