உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆலப்பாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலப்பாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 25, 2012

ஆலப்பாக்கம் அருகே எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிர் இழப்பு

கடலூர்:

       கடலூர்  மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


       கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள்.  24.08.2012 காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக தனது தாயாருடன் காத்திருந்தாள். அப்போது அந்த வழியாக கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். கடலூர் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          செவ்விழி இறந்த தகவல் அறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி குழந்தைகள் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.






Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

கடலூர் - விருத்தாசலம் சாலை போக்குவரத்து மாற்றம்

கடலூர் : 

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங் குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்து விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் நகர பஸ்கள், மினி பஸ்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் வலதுபுறமாக பிரிந்து சின்னகாரைக்காடு ஊர் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் அடைந்து இடது புறமாக திரும்பி கடலூருக்கு செல்ல வேண்டும்.

                         கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக பிரிந்து சின்னகாரைக்காடு வழியாக கடலூர் - விருத்தாசலம் சாலையை அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலம் செல்ல வேண்டும்.கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் தொலைதூர பஸ்கள், கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக (ஆலப்பாக்கம்) பிரிந்து கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டும்.

                      விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் தொலைதூர பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) வலது புறமாக பிரிந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்து கடலூர் செல்ல வேண்டும்.பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் இப்பால கட்டுமான காலமாகிய 18 மாதங்களுக்கு இந்த மாற்றுப்பாதையை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

புதன், ஜூன் 09, 2010

ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி... துவங்குமா? டூ ரூ.17.5 கோடி ஒதுக்கியும் பயனில்லை

சிதம்பரம் : 

                           விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

                      விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நீண்ட போராட்டத்திற்கிடையே முடிக்கப்பட்டு தற்போது ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த பாதையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக சிதம்பரம் மார்க்கமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கடலூர் மார்க்கமாக சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கும் அடிக்கடி வாகனங்கள் சென்று வருகிறது. ஆலப் பாக்கம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
 
                       இதனைக் கருத்தில் கொண்டு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்தில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பாலம் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட் டுள்ளது. ஆனால் ரயில்வே பாதையில் பல இடங்களில் பாலம் கட்டப்பட்ட போதும் ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சர்வே பணி, மண் ஆய்வு போன்ற பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் ரயில் கிராசிங் நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக்கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப் பற்ற காடு போன்ற இடத் தில் வாகனங்கள் நிற்பதால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டம் உள் ளது, விரைவில் கட்டப்படும் என விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். ஆனால் அதற் கான திட்டம் எங்கே போனது, ஏன் கட்டப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதே விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் பாதையில் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே "கேட்' பகுதியில் மேம்பாலம் அமைக் கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

                  கடலூர் - விருத்தாசலம் சாலையில் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வேகேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.ஆனால் முக்கிய தேவையான ஆலப்பாக்கம் பாலம் மட்டும் கட்டப்படவில்லை. ரயில்வே பாலம் இல்லாததால் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாது, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் பாதிக்கின்ற நிலை உள்ளது. எனவே கைவிடப்பட்ட ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பால திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தடையற்ற சீரான போக்குவரத் திற்கும், பொதுமக்களுக் கும் உதவிட வேண்டும்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

பா.ஜ.க. ​ மாநிலத் தலைவர் நாளை கடலூர் வருகை

 கடலூர்:

                   பா.ஜ.க.​ மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கடலூர் வருகிறார்.​

​இதுகுறித்து கடலூர் மாவட்ட பா.ஜ.க.​ அமைப்பாளர் க.எழிலரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                     1-5-2010 அன்று சுவாமி சகஜானந்தா நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூருக்கு வருகிறார்.​ அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று,​​ புதன்கிழமை கடலூரில் நடந்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​ ​நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ அதைத் தொடர்ந்து இரு சக்கர மோட்டார் வாகனப் பேரணியை அவர் தொடங்கி வைக்கிறார்.​ ​பேரணி கடலூர் முதுநகர்,​​ ஆலப்பாக்கம்,​​ பெரியப்பட்டு,​​ புதுச்சத்திரம்,​​ பு.முட்லூர்,​​ ​ புவனகிரி,​​ கீரப்பாளையம்,​​ சிதம்பரம் வழியாக பகல் 12 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தைச் சென்றடையும்.​ அங்குள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ குரு பூஜையில் கலந்துகொள்கிறார்.​ பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.​ நிகழ்ச்சியில் கட்சியின் மாநில,​​ மாவட்ட,​​ நகர,​​ ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior