உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆலோசனைக் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனைக் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

2.47 கோடியில் கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் '

கடலூர்:

               கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்தில், ரயில்வே இலாகா தரப்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதாக, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

           கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் ரயில்வே இலாகா மேற்கொள்ள வேண்டிய பகுதிக்கு, டெண்டர் விடப்பட்டு இருப்பதாக மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி  மேலும் கூறியது: 

               ரயில்வே இலாகா சார்பில் நிறைவேற்றவேண்டிய பாலம் |2.47 கோடியில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் செப்டம்பர் 8-ம் தேதி பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படுவார். ரயில்வே இலாகா தரப்பில் கட்டப்படும் பகுதி, 2.75 மீட்டர் உயரமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் இருக்கும். இருவழி போக்குவரத்து வசதி கொண்டதாக அமையும் இச்சுரங்கப் பாதை, முன்னரே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பாக இருக்கும். அதைக் கொண்டு வந்து பொருத்தி 6 மாதங்களுக்குள் கட்டுமானப் பணி முடிவடையும். சுரங்கப்பாதை திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறைதான் இன்னமும் முடிவு செய்யாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கடலூர் சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

           சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு ரயில்வே இலாகா ஒப்புதல் அளித்து இருக்கிறது. விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கடலூர் திருப்பாப்புலியூரில் இருந்து விருத்தாசலம் வழியாக இயக்கவும், ரயில்வே இலாகா ஒப்புக் கொண்டு இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு, தலைமைப் பொறியாளர் அனுமதி அளித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் தெரிவித்தார். |7.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

             ரயில்வே சுரங்கப்பாதை தொடர்பாக கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நிஜாமுதீன் தலைமையில் சனிக்கிழமை மாலை நடந்தது. சுரங்கப் பாதைக்கு ரயில்வே தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிக்கு டெண்டர் விடப்பட்டதற்கு தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பதைத் திட்டத்துக்கு எதிராக சில சுயநல சக்திகள் செயல்பட்டு வருகின்றன. வரும் 15-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடாவிட்டல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுநல அமைப்புகளின பிரதிநிதிகள் வெண்புறா குமார், ரமேஷ், மணிவண்ணன், அருள்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் : 

             சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 

             சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தி, பராமரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன்,  திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன், டி.எஸ்.பி., மூவேந்தன், மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, நகராட்சி சேர்மன் பவுஜியாபேகம்,   ஊராட்சித்தலைவர்கள் வேணுகோபால், தனலட்சுமி ரவி, ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  

                   கூட்டத்தில்  ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி அமைப்பது குறித்தும், நடராஜர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதி சாலைகளை சரி செய்வது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது,  பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது, நகரில் தெரு  விளக்கை பாதுகாப்பது, பழுதடைந்துள்ள சாலையை சரிசெய்வது, பொது சுகாதாரம் மற்றும் பஸ் நிலையம் பராமரிப்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது.  கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, விவசாயத் துறைகள்  மற்றும் பிரத்துறை அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர் வாகிகள்  பங்கேற்றனர்.

Read more »

புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டியில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பண்ருட்டி: 

          பண்ருட்டி - விழுப்புரத்திற்கு காலை மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

            பண்ருட்டி தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். ஜோசப், வினாயகம், உமாபதி, பாபு, மதியழகன், ராதாகிருஷ்ணன் பேசினர். கூட்டத்தில் பண்ருட்டி- விழுப்புரம் வரையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். அரசு சான்றிதழ் விரைவாக பொதுமக்களுக்கு கிடைத்திட கூடுதலாக அரசு ஊழியர்களை நியமித்திட வேண்டும், பண்ருட்டி பஜார் தபால் நிலையத்தை முன் அறிவிப் பின்றி மூடியதை திறக்க வேண்டும் உட்பட உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சனி, ஜூன் 19, 2010

நான்கு ஆண்டுகளில் 4523 மனுக்கள் மீது நடவடிக்கை: சற்குணபாண்டியன் தகவல்

கடலூர் : 

                    குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பது, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாநில மகளிர் ஆணையத் உறுப்பினர் சுஜாதா சீனுவாசன், ஏ.டி. எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மகேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன் கூறியதாவது:

                             கடலூர் மாவட்டத்தில் 23 புகார் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆணையத்தில் 2007ம் ஆண்டு முதல் இவரை 4523 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை சட்டம் 2005ன் படி இது போன்ற வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப் படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகள் 5 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முதல்வர் பெண்கள் நலனுக் காக 30 சதவீதம் இட ஒதுக்கீடு, திருமண உதவி, மகப்பேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இந்த அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக செயல் படும் அரசாக இருக்கிறது என கூறினார்.

Read more »

சனி, ஜூன் 05, 2010

ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளோம்: பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்






நெய்வேலி:

                  அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திபோது, அங்குவந்த பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசியின் கணவர் ரவிச்சந்திரன் பள்ளிக்கு ஆதரவாக குரல் கொடுத்து, "பள்ளியின் தரம் வியக்கவைக்கும் வகையில் உள்ளது. எனவே இப்பள்ளிக்கு கட்டணமாக ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் நான் செலுத்தத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறினார். 

                      இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பெற்றோர்கள் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை கட்டத் தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்து, அதன்படி கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் அக்கட்டணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எனவே அரசியல் பிரமுகர்கள் இவ்விஷயத்தில் தலையிட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் துவக்க ஏற்பாடு: 

                      அண்மைக் காலமாக பள்ளி நிர்வாகம் ஒரு சில முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இனி பள்ளி நிர்வாகம் எவ்விதமான முடிவுகளை மேற்கொள்ளவேண்டுமானால், பெற்றோர்களை கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளி எதிரில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என பெற்றோர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more »

திருட்டை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க ஆலோசனை

சிதம்பரம்:

                   திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிதம்பரத்தில் போலீஸர் மற்றும் அடகுகடை, வட்டிக்கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பி.சுப்பிரமணியன், அறிவானந்தம், ஜி.சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், கண்ணுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடிவுகள்: 

                      பாதுகாப்பு பெட்டக்தில் நகைகளை பத்திரமாக வைப்பது, அடகுகடை மற்றும் வட்டிக்கடைகளுக்கு இரவு காவலாளிகள் நியமிப்பது, பணம் அதிகமாக இருந்தால்  அவ்வங்கியில் ஊழியர் ஒருவரை தங்கவைப்பது, அடையாளம் தெரியாத நபர்களிடம் நகைகளை அடமானம் செய்வதை தவிர்ப்பது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior