உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆவினங்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவினங்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 28, 2010

வெளிமாநில ஆசாமிகள் நடமாட்டம்: திட்டக்குடியில் திருட்டு அபாயம்

திட்டக்குடி:

             திட்டக்குடி நகர்ப்புறத்தில் கணவன், மனைவி என குடும்பமாக பிச்சையெடுக்கும் வெளிமாநில ஆசாமிகளால் திருட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி, சிறுபாக்கம், ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் மின் கம்பி திருட்டு, இரவு நேரங்களில் வீட்டினுள் புகுந்து திருடுவது என குற்றங்கள் அதிகளவு நடந்து வந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இப்பகுதிகளில் சமீப காலமாக ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தாங்கள் வழி தவறி வந்து விட்டதாகவும், ஊருக்கு திரும்பிச் செல்ல பணம் வேண்டும் என கூறி பிச்சையெடுத்து வருகின்றனர். இதுபோன்ற ஆசாமிகள் பகலில் பிச்சையெடுப்பது போல் நோட்டமிட்டு இரவில் திருடவும், பகலில் தனியாக இருக் கும் பெண்களிடம் நகை, பொருட்களை அபகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி வெளி மாநிலங்களிலிருந்து மாவட்டத்திற்குள் வரும் ஆசாமிகளை விசாரணை மேற்கொண்டு அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

திங்கள், மே 10, 2010

துணைமின் நிலையம் அமைக்க நிலம்கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு

திட்டக்குட: 

               திட்டக்குடி அருகே இரு இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்கும் நிலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு செய்தார். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஈ.கீரனூர் பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் துணைமின் நிலையம் அமைக்கும் நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி ஆவினங்குடி துணைமின் நிலையத்திற்கு போத்திரமங்கலம் கிராமத்தில் அரசு நிலமும், ஈ.கீரனூரில் தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டு விலைக்கு வாங்க தீர்மானிக்கப்பட்டது. கலெக்டர் ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கண் ணன், துணை தாசில்தார்கள் மணி, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி, பாலு உட்பட கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.

Read more »

வியாழன், மே 06, 2010

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்


திட்டக்குடி : 

                திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

               டாக்டர்கள் விருத்தாசலம் சங்கரலிங்கம், திட்டக்குடி ராஜேந்திரன், (கண்) சுப்பிரமணியம், (மனநலம்) சத்தியமூர்த்தி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர். முகாமில் ஆவினங்குடி மையத்தின் கீழ் செயல்படும் ஆவினங்குடி, போத்திரமங்கலம், கோடங்குடி உட்பட 14 ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அணித்தலைவர் வேல் விழி, சுபாஷ்சந்திரபோஸ், திருமாவளவன், சிந்தாமணி, சரிதா, சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 08, 2010

மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திட்டக்குடி மக்கள் கோரிக்கை

 திட்டக்குடி: 

                     திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திட்டக்குடியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடியில் இதுவரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படவில்லை. குடும்பத்தகராறு, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கான குற்றங்களை பெண்களே நேரில் சென்று தெரிவிக்க 30 கிலோ மீட்டர் தூரமுள்ள விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
 
                        திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, பெண்ணாடம், வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லும் பெண்கள் குறைகளை முறையிடும் போது, பெண்களிடம் போலீசார் விசாரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஐந்து குறுவட்டங்களை கொண்ட தலைமையிடமான திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

downlaod this page as pdf

Read more »

வியாழன், ஏப்ரல் 01, 2010

மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

திட்டக்குடி : 

                                      மின்சாரம் தாக்கியதில் வாலிபர் கை துண்டானது. திட்டக்குடி அடுத்த ஏ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மணிகண்டன் (20). இவர் நேற்று காலை நெய்வாசல் கிராமத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரியை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரியின் மேல்பாகம் மின்கம்பியில் எதிர்பாராமல் உரசி திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் மணிகண்டனின் வலது கை மணிக்கட்டுடன் துண்டான நிலையில், உடல் கருகி மயங்கி விழுந்தார். உடன் அவரை, அங்கிருந்தவர்கள் காப்பாற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆவினங்குடி சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

நகைக்காக மூதாட்டிகள் இருவர் கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கடலூர் : 

                    மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது.

                    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் சாத்தப்பன் மனைவி அம்மணியம்மாள்(65). கடந்த 2008ம் ஆண்டு பிப். 4ம் தேதி அதே ஊரில் உள்ள கோரித்தோப்பு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அம்மணியம்மாளை மர்ம நபர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 55 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றார். அதேபோல் கடந்த 2008ம் ஆண்டு டிச. 29ம் தேதி திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி மங்களம் (70) மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.

                        ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் தனித் தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி அடுத்த தொளார் வடக்கு காலனியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்ச்செல்வன்(33) இரண்டு மூதாட்டிகளையும் நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அசோகன், இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த செந்தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். ஆயுள் தண் டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior