உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி 36 இடங்களில் 1,260 பேர் கைது


கடலூர் : 

    நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி மாவட்டத்தில் 36 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த 372 பெண்கள் உள்ளிட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர்.


      தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் வருகை, வீடுகளில் மின் உபயோகம் அதிகரிப்பு காரணங்களால் மின்சாரம் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாத காரணத்தினால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு வினியோகித்து வருகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் கடந்த இரண்டாண்டாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தினசரி 2 முதல் 4 மணி நேரமாக இருந்த மின்வெட்டு கடந்த மூன்று மாதங்களாக தினசரி 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


     மின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை சமாளிக்க மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யப்படும் 2,490 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக பொதுத்துறை சமூக கடமை (கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) என்ற முறையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என இந்திய கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாவட்டத்தில் 36 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.


      கடலூரில் நகர செயலர் குளோப் தலைமையில் 10 பெண்கள் உட்பட 70 பேரும்,        சிதம்பரத்தில் மாநில நிர்வாக்குழு மணிவாசகம், மாவட்ட நிர்வாகக்குழு சேகர் தலைமையில் 20 பெண்கள் உட்பட 29 பேர், புவனகிரியில் நகர செயலர் சீனுவாசன் தலைமையில் 38 பேர், பரங்கிப்பேட்டையில் நகர செயலர் வல்லரசன் தலைமையில் 19 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

      விருத்தாசலத்தில் நகர செயலர் மேத்யூ தலைமையில் 27 பேர், கருவேப்பிலங்குறிச்சியில் வட்டசெயலர் கலியபெருமாள் தலைமையில் 35 பேரும், திட்டக்குடியில் செல்வராஜ் தலைமையில் 5 பெண்கள் உட்பட 30 பேரும், ஆவினங்குடியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தலைமையில் 2 பெண்கள் உட்பட 19 பேரும், மங்களூரில் குமார் தலைமையில் 11 பெண்கள் உட்பட 24 பேர், ராமநத்தத்தில் ராமலிங்கம் தலைமையில் 20 பேர், பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய துணைச் செயலர் கருப்புசாமி தலைமையில் 22 பேர், முருகன்குடியில் வேல்முருகன் தலைமையில் 16 பேரும், வேப்பூரில் நல்லூர் ஒன்றிய நிர்வாகக்குழு அருள்மணி தலைமையில் 24 பெண்கள் உட்பட 49 பேர் மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டியில் வட்டச் செயலர் துரை தலைமையில் 83 பேரும்,


          திருவதிகையில் குணசேகரன் தலைமையில் 50 பேர், அண்ணாகிராமத்தில் திருமலை தலைமையில் 22 பேரும், புதுப்பேட்டையில் பாஸ்கர் தலைமையில் 37 பேரும், அங்குசெட்டிப்பாளையத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் 54 பேரும், காடாம்புலியூரில் குணசேகரன் தலைமையில் 28 பேரும், கொள்ளுக்காரன்குட்டையில் மாவட்ட குழு சரவணன் தலைமையில் 73 பேர், ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் 54 பேரும், சோழதரத்தில் மாவட்ட குழு ராஜ் தலைமையில் 25 பெண்கள் உட்பட 62 பேரும், நாச்சியார்பேட்டையில் பட்டுசாமி தலைமையில் 15 பெண்கள் உட்பட 32 பேரும், நடுவீரப்பட்டில் 68 பேரும், காட்டுமன்னார்கோவிலில் 68 பேர், கடம்பூரில் 45 பேர், மேல்பழஞ்சநல்லூரில் 14, டி.நெடுஞ்சேரியில் 23 பேர் என மாவட்டத்தில் 36 இடங்களில் நடந்த மறியலில் 372 பெண்கள் உட்பட 1,260 பேர் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தன













Read more »

புதன், பிப்ரவரி 01, 2012

தானே புயல் கூடுதல் நிவாரணம் வழங்ககோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

           தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


இச்சந்திப்புக்குப் பின்னர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியது

            கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு கடுமையானது. மக்களின் வாழ்வாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. பாதிப்புகளை சீரமைக்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட முந்திரி போன்ற பயிர்களை மீண்டும் உருவாக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே பாதிப்புகளுக்கு நிவாரணம் என்பதைவிட நஷ்டஈடு வழங்க வேண்டும்.

          தேசிய பேரிடர் நிதியில் இருந்து அதிக நிதி பெற்று, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். பயிர்ச் சேதங்களுக்கு நிலத்தின் பட்டாதாரர்கள் மட்டுமன்றி குத்தகை தாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரினேன் என்றார்.

Read more »

செவ்வாய், அக்டோபர் 26, 2010

முள்வேலி சித்ரவதை முகாமைப் போல் என்.எல்.சி. தொழிலாளர்கள் அவதி: தா. பாண்டியன்


 
 
                             இலங்கையில் உள்ள ராஜபட்ச அரசின் முள்வேலி சித்ரவதை முகாமை போல் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.  
 
விழுப்புரத்தில் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியது: 
 
                       நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 33 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகால கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வலியுறுத்தி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கையை அந்த சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஆளும் கட்சியால் நடத்தப்படும் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதை தொழிலாளர்கள் நிராகரித்து விட்டனர்.  
 
              தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகளை அழைத்து தீர்வு காண்பதற்கு பதிலாக, அவர்களை மிரட்டி பணியவைக்க, தமிழக அரசு காவல்துறையின் மூலம், அவர்களின் வீடுகளில் நுழைந்து, பெண்கள், குழந்தைகளை துன்புறுத்தி, அவமதித்துள்ளனர்.  பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயகப் போராட்டத்தை தடை செய்வது, முடக்குவதிலேயே அரசு முழுக்கவனம் செலுத்துகிறது. 
 
                     தொழிலாளர்களின் பிரச்னை குறித்து மக்களவை உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர், சுரங்கத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை விளக்கினர்.  இருந்தும் இதுவரை திட்டவட்டமான, தெளிவான தீர்வுக்கான வழியை தெரிவிக்கவில்லை. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.  வரும் 27-ம் தேதி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன. 
 
                   இதுவரை முதல்வர் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராகவே திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.  பேட்டியின்போது, மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன், கடலூர் மாவட்டச் செயலர் டி. மணிவாசகம், ஏஐடியுசி மாநிலச் செயலர் ஜே. லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி. ஸ்டாலின்மணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் ஆ. இன்பஒளி, கடலூர் மாவட்டச் செயலர் எம். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

சனி, ஜூலை 17, 2010

ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்


Tha Pandian



கடலூர்: 

             ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியத் தமிழர்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு பண உதவி, பொருளுதவியை அளித்து வருகிறது இந்திய அரசு. இந்தியர்கள் யாரையும் காக்கும் நிலையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் இல்லை. ராஜபக்சேவுக்கு மட்டும்தான் அவர்கள் சேவகம் செய்கிறார்கள் என்று சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்.

கடலூர் வந்த 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

               தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள்.

            தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை குறிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்சாரம் இன்றி தொழில் உற்பத்தி பெருகிட முடியாது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலம் பாழடிக்கப்பட்டு வருகிறது. பிறகு உண்மையான நில உரிமையாளர்களிடம் இருந்து மிரட்டி பறிக்கப்படுகிறது. பெண்களும் கடத்தப்பட்ட அவல செய்தி இந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. கடலூர் நகரத்தை சுற்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக கடலூர் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் வாழ்வதற்கு தகுதியற்றதாகிவிடும்.

ஜனநாயகத்தை மீட்போம்

                தமிழ்நாடு முழுவதும் சொந்த குடியிருப்பு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கைபடி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும், நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தி உழவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தை நடத்துவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கலந்து கொள்கிறார்.

நந்தன் பாதைக்கான தடையை நீக்க வேண்டும்

                அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற பாதைக்கான தடையை நீக்க வேண்டும், அந்த பாதையை திறக்க வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 15-ந் தேதி எங்கள் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ., முடிவு


திட்டக்குடி : 

               திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட் டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளைக் கூட்டம் நடந்தது. முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் பிச்சமுத்து, மருதமுத்து, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வட்ட துணை செயலாளர்கள் முருகையன், சின்னதுரை, விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினர். கூட்டத்தில் ஆதமங்கலம் - சாத்தமங்கலம் பாலக்கரை வரையிலான பழுதடைந்த சாலையை விரைவில் டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும்.

                   ஆதமங்கலம்- தொளார், ஆவினங்குடி வரையிலான 20 ஆண்டுகளுக்கு மேலான பழுதடைந்த சாலை, திட்டக்குடி - நாவலூர் வழியாக செல்லும் தடம் எண்- 4 அரசு பஸ்சினை கூடுதலாக இருமுறை இயக்க வேண்டும். ஆதமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள வீட்டு மனைப் பட்டாவுக்கான தெருவை அளந்து மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5ல் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more »

வெள்ளி, மே 28, 2010

போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம் : 

                       விருத்தாசலத்தில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர், சிவஞானம் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் எம்.எல்.ஏ., லதா கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பழையப்பட்டினம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீட்பு வழக்கு நடத்தி வெற்றி கண்ட இளைஞர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டு போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாரை கண்டித்து பேசினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் தனசேகரன், மூசா, வட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் திரு அரசு, மாவட்ட குழு அசோகன், ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior