உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இந்தியன் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியன் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 27, 2011

கடலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ரூ.1400 கோடி கடன்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி, ராமநத்தம் இந்தியன் வங்கி கிளைகளில் சிறப்பு கடன் வசூல் முகாம் நடந்தது. முகாமிற்கு திட்டக்குடி வங்கி மேலாளர் அனில்குமார் தலைமை தாங்கினார். 
 
            முதுநிலை மேலாளர் ராமச்சந்திரன், மண்டல அலுவல் அதிகாரி சுந்தர், ராமநத்தம் வங்கி கிளை மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.   மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் இதில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகையை தள்ளுபடி செய்து பேசினார்

அப்போது மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் கூறியது:-

            கடலூர் மாவட்டத்தில் மட்டும் முன்னோடி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர், கார், உழவு எந்திரங்கள் வாங்கவும், பாசன வசதிகள் பெறவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், சுயதொழில் மற்றும் கல்வி கடனாகவும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.   வரா கடன் வசூல் என திட்டமிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 43 கிளைகளில் 10 சிறப்பு முகாம்கள் நடத்தி கடனை வசூலித்து வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் எளிதாக கடனை திருப்பி செலுத்தும் வகையில் வட்டியில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து கடனை வசூல் செய்து வருகிறோம்,

                இதனால் விவசாயிகள், சுயதொழில் தொடங்கியவர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க உதவும். சிறப்பு கடன் வசூல் முகாம் மூலம் இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிராமங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அவரவர்வங்கி கணக்கில் இருந்து ரூ 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கவும், பணம் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                 இதனால் பணம் எடுக்க சேமிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் அவர்கள் வீட்டிலேயே பணம் எடுக்கவும் சேமிக்கவும் முடியும். இவ்வாறு மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் பேசினார். 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், டிசம்பர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தால் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு வங்கியில் கணக்கு

திட்டக்குடி : 

            திட்டக்குடி இந்தியன் வங்கி இடமாற்ற திறப்பு விழாவில் கிராமங்கள் தோறும் வங்கிகளின் கிளைகள் துவக்கப்பட வேண்டுமென கலெக்டர் சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்தார். 

             திட்டக்குடியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்துடன் இடமாற்ற திறப்பு விழா நடந்தது. கடலூர் மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கட்டட உரிமையாளர் சேகர், அருந்ததி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜி முன்னிலை வகித்தனர்.  கிளை மேலாளர் அனில்குமார் வரவேற்றார். தாசில்தார் கண்ணன், துயர் துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், துணை மேலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

ஏ.டி.எம். மையம் மற்றும் புதிய கட்டடத்தை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில்,

              "பின்தங்கிய பகுதிகளில் கூடுதல் வசதிகளுடன் வங்கிகள் திறக்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் கிளைகளை உருவாக்குவதால், வங்கிகள் மூலம் மட்டுமே வரவு, செலவுகளை பரிமாற்றம் செய்திட ஒவ்வொரு தனி நபருக்கும் எண்ணம் வரும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2.5 லட்சம் குடும்பங்கள் வங்கிகளில் கணக்கு உடையவராக மாற்றப்பட்டுள்ளனர்.

               வங்கிகளில் கடன் பெறுவோர் உரிய நேரத்தில் பணத்தினை செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்' என்றார். ராமநத்தம்: ராமநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். 

            தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்வி நிறுவன தாளாளர் கிருஷ்ணசாமி, முன்னோடி வங்கி அதிகாரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் கணேசன் வரவேற்றார். விழாவில் கலெக்டர் சீத்தாரமன் இந்தியன் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகளை நட்டார்.

Read more »

திங்கள், ஜூன் 14, 2010

நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு


திட்டக்குடி: 

                   திட்டக்குடியில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். திட்டக்குடி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அணில்குமார், கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கலைச் செல்வம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார்.

                      கூட்டத்தில் நகை மற்றும் அடகு கடைகளின் உள் மற்றும் வெளிப்புறங்களில் இரவு நேரங்களிலும் பயன்படும் வகையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். பக்லர் அலாரம், மரத்தால் செய்த பழைய கதவுகள் மாற்றி பாதுகாப்பான வகையில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும், எளிதில் உடைக்க முடியாத பூட்டினை பயன்படுத்தி திருட்டுகளை குறைக்க போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என இன்ஸ்பெக்டர் ராமதாஸ் பேசினார். கூட்டத்தில் ஜூவல்லரி உரிமையாளர் கள் அய்யப்பன், பாண்டியன், அடகு கடை உரிமையாளர்கள் செல்வம், பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் லோகநாதன், ராஜவேல் பங்கேற்றனர்.

Read more »

சனி, மே 29, 2010

நடப்பு ஆண்டில் ரூ.3,000 கோடி கல்விக்கடன்: இந்தியன் வங்கி இயக்குநர் தகவல்

                 இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 757 கிளைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 28 கிளைகள் திறக்கப்படும்.  தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 669 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 834 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க தனியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதில் புகார் செய்தால் வாடிக்கையாளர்களின் குறைகள் உடனடியாகக் களையப்படும் என்றார்.

Read more »

சனி, மார்ச் 27, 2010

இந்தியன் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                இந்தியன் வங்கி கடலூர் வட்டார நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                இந்தியன் பாங்க் ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உதவித் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். தாலுகா அமைப்பு பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், உதவிச் செயலாளர் பழனிக்குமார், மாவட்ட  அமைப்பு தலைவர் ஜோசப், புதுச்சேரி வங்கி ஊழியர் சங்க ரமணி, செயற்குழு உறுப்பினர் மீரா, தாமஸ் ஜெயபிரகாஷ்,  திருமலை உட்பட பலர் பங்கேற்றனர். முருகேசன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior