உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உலகத் தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 07, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக 305கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும்  10 கோடி அளவுக்கு மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான செலவுக் கணக்கு விவரங்களை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 

அதன் விவரம்:

                  மாநாட்டுச் செலவுகளுக்காக  73 கோடி அனுமதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் அரங்குகள் அமைப்பதற்கான செலவுகளுக்காக 13.4 கோடியும், பொது அரங்குகள், பந்தல் அமைத்தல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான செலவு  13.93 கோடியாகும். கண்காட்சி அரங்குகள் மற்றும் அவை தொடர்பாக 6.31 கோடியும், மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இனியவை நாற்பது பேரணிக்கு 6.30 கோடியும், உணவுக்கான செலவாக 5.7 கோடியும் செலவிடப்பட்டன.

             போக்குவரத்துச் செலவாக 7 கோடியும், சிறப்பு மலர் தயாரிப்புப் பணிகளுக்காக 88 லட்சமும், இணையதள மாநாடு மற்றும் இணையதளக் கண்காட்சி தொடர்பான பணிகளுக்காக 2.3 கோடியும் செலவிடப்பட்டன. முக்கிய பிரமுகர்களை வரவேற்றல் மற்றும் மக்கள் தொடர்பு விளம்பரப் பணிகளுக்காக 11 கோடியும் செலவிடப்பட்டது.ஆக மொத்தம் அனுமதிக்கப்பட்ட 73 கோடியில் ரூ. 69 கோடி செலவிடப்பட்டது. ரூ.4 கோடி மீதப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை மாநகரப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக 239 கோடியே 26 லட்சம் அனுமதிக்கப்பட்டது. அதில், 232 கோடியே 76 லட்சம் செலவிடப்பட்டு,  6 கோடி மீதப்பட்டுள்ளது.

Read more »

சனி, ஜூன் 19, 2010

தமிழ் இணைய மாநாடு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு

             உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழிப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வரைகலை மற்றும் அசைகலைப் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி நடத்தப்பட்டது. 

              இதில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் 8300 மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.இப்போட்டிகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் மொத்தம் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதேபோல் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆர்வம் அதிகரிக்க உதவியாக தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றன. போட்டியில் இடம்பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் ஒன்பது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்றவர்களின் விவரம்:


Read more »

சனி, பிப்ரவரி 13, 2010

உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி

கடலூர் : 

                 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும்  உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடந்தது.  இப்போட்டியில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக தமிழில் வெவ் வேறு தலைப்புகள் வழங்கப்பட்டது. கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த போட்டித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதுமிருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

               நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior