உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உள்மருவாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்மருவாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 09, 2011

வடலூரில் குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யக் கோரி நாற்று நடும் போராட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/b7ef0df9-39fc-4d84-949d-2acec1abd5d2_S_secvpf.gif
 
வடலூர்:
 
 
           வடலூர் பகுதியில் கடந்த சில நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக இந்த பகுதியில் உள்ள சாலைகள் கடுமையான சேதத்திற்குள்ளானது. குறிப்பாக வடலூர் வழியாக செல்லும் பிரதான சாலையான தஞ்சாவூர்-கும்பகோணத்திலிருந்து சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கடந்த பலமாதமாக மிகமோசமான நிலையில் இருந்து வந்தது.

            இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக பண்ருட்டி தொடங்கி வடலூர் மற்றும் சேத்தியாத்தோப்பு வரை சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலை கடுமையான சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில், காடாம்புலியூர், இந்திராநகர், வடலூர் மருவாய், உள்ளிட்ட பல இடங்களின் அருகில் இந்த கிடு கிடு குண்டும் குழியுமான சாலைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடங்கி கனரக வாகனம் ஓட்டுபவர்கள் வரை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

            மேலும் சேதமான சாலையில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதேபோன்று வடலூர் நெய்வேலி புதுநகர் இணைப்பு சாலையில் தொடங்கி கல்யாணமண்டபம் அருகில் ரெயில்வேகேட் அருகிலும் பள்ளம் ஏற்பட்டு சேறும் சகதியுமாகி பொதுமக்களுக்கு இடையூராக உள்ளன. இதனை கண்டித்து வடலூர் புதுநகர் ரெயில்வேகேட் அருகே நாற்றுநடும் போராட்டம் நடத்தினர்.
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், டிசம்பர் 08, 2010

ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது "மாற்றம் பெறாத மருவாய்"

நெய்வேலி:

               ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது நெய்வேலியை அடுத்த மருவாய் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதும், அதையொட்டி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதும்,  பின்னர் அவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் பார்வையிடுவது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறதே தவிர, சேதமடைந்த பகுதியில் நிரந்தர தீர்வுக்கு யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

                கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருவாய் பகுதியில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள மருவாய் தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டு கன மழையின்போது பாலத்தின் மீது தண்ணீர் செல்வது தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது. 2005-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பரவனாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மருவாய் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் நீரில் மூழ்கின, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

              இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுóஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டு சாலையும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவ்விடத்தைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.நிவாரணத் தொகை வழங்கியதோடு சரி, அதன் பின் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி உருவானது. 

               அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதோடு நின்று போனது. அதன்பின் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், ஓரளவுக்கு மழை பெய்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் மீண்டும் மருவாய் தரைப்பாலம் அரித்துச் செல்லப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 

                அப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.ஆனால் அப்பகுதி மக்களோ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் சேதம் ஏற்படுவதும் ஆட்சியில் உள்ளவர்கள் ஆறுதலுக்காக வந்து பார்வையிடுவதோடு சரி. நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது என்கின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், 

               கடந்த முறை ஜெயலலிதா வந்தார் பார்த்தார். நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சியில் இருந்த இந்நாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் வந்து பார்த்துச் சென்றனர். அதன்பின் 2006 மே மாதம் நடந்த தேர்தலையடுத்து கருணாநிதி முதல்வரானார். முதல்வரான பின் கருணாநிதியும் மருவாயை மறந்து விட்டார். துணை முதல்வர் ஸ்டாலினும் மறந்து விட்டார். 

                   தற்போது 5 ஆண்டு முடிவில் ஆட்சியிலிருக்கும் துணை முதல்வர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவராவது இதற்கு நிரந்தர தீர்வு காண்பார் என்றால், எங்களுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. காரணம் இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  இவர்கள் தேர்தல் வேலையை பார்ப்பார்களா அல்லது மருவாயை பார்ப்பார்களா அடுத்து ஆட்சிக்கு வருவோர் யாரோ அப்போதாவது இந்த மருவாய் மாற்றம் பெறுமா என்ற கேள்விகளுடன் காத்திருக்கிறோம் என்றார் ராஜசேகர்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

குறிஞ்சிப்பாடியில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பலி

குறிஞ்சிப்பாடி : 

 
              ஓடும் பஸ்சிலிருந்து இறங்க முயன்ற மாணவர் தவறி விழுந்து உடல் நசுங்கி இறந்தார். வடலூர் அடுத்த ராசாக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தவமணி (16). 

                     குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக உள்மருவாய் செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ராசாக்குப்பத்தில் தனது வீட்டின் அருகே பஸ் சென்ற போது, தவமணி ஓடும் பஸ்சின் முன் படிக்கட்டிலிருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் தவமணி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வியாழன், ஏப்ரல் 15, 2010

குறிஞ்சிப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

 கடலூர்: 

                 குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை (16ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக அன்று குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொட்டவெளி, ரங்கநாதபுரம், சின்னகண்ணாடி, குண்டியமல்லூர், ஆடூர் அகரம், ஆடூர்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, பெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், கல்குணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இத்தகவலை செயற்பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior