உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உள்ளாட்சி மன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளாட்சி மன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 21, 2011

கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

 கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

ஒன்றியம்  ஊராட்சிகள் ஒன்றியக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் உறுப்பினர்

1. கடலூர்    51,    33,  3
2. அண்ணாகிராமம் 42,  22,  2
3. பண்ருட்டி 42,  25,  3
4. குறிஞ்சிப்பாடி 49, 28,  3
5. கம்மாபுரம் 53, 24, 2
6. விருத்தாசலம் 51, 19, 2
7. நல்லூர் 64, 21, 2
8. மங்களூர் 66, 24,  2
9. காட்டுமன்னார்கோவில் 55, 18, 2
10. குமராட்சி 57, 20, 2
11. கீரப்பாளையம் 63, 20, 2
12. புவனகிரி 47, 15, 2
13. பரங்கிப்பேட்டை 41, 18 ,2

மொத்தம் 681, 287, 29

Read more »

சனி, செப்டம்பர் 10, 2011

கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு

கடலூர்:

                கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.  இதுதொடர்பாக கடலூர் நகராட்சி சிறப்புக் கூட்டம் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

              வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இதுகுறித்து ஆணையர் இளங்கோவன் கூறியது: 

             கடலூர் நகராட்சிக்கான வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து திருத்தங்கள் மற்றும் கருத்துக்களைத்  தெரிவிக்கலாம். நகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கும் சேர்த்து, 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நகராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் வரும் 15-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். 
  
கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 

மொத்த வாக்காளர்கள்  1,05,456. 

இதில் 

ஆண்கள் 52,212. 

பெண்கள் 53,244.

                சாமியார்பேட்டை-கொள்ளிடம் வரை சுற்றுலா சாலைசிதம்பரம், செப்.9: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடலோர கிராமமான சாமியார்பேட்டையை சுற்றுலா மையமாக அறிவித்தும், சாமியார்பேட்டையிலிருந்து கிள்ளை பிச்சாரவரம் வழியாக கொள்ளிடம் வரை சாலை அமைத்து அதனை சுற்றுலா சாலையாக அறிவித்திட வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.














Read more »

திங்கள், செப்டம்பர் 05, 2011

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்

நெல்லிக்குப்பம்:
 
               கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வெள்ளிக்கிழமை  முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான விருப்பமனு வாங்கும் கடலூர் டவுன் ஹாலை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டார்.

இதன் அமைச்சர் எம்.சி. சம்பத்  கூறியது:-


               மக்களின் எண்ணங்களை புரிந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை தொலை நோக்கு பார்வையில் செய்து வருகிறார். கல்வியில் புரட்சி, மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுப்பதன் மூலம் விஞ்ஞான புரட்சி, விவசாயிகளுக்கு பசுமை புரட்சி, மிக்சி கிரைண்டர் கொடுப்பதன் மூலம் அடுப்படியிலும் புரட்சி செய்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. 12 ஆயிரம் குடும்பங்களுக்கு கலப்பின ஜெர்சி பசு கொடுப்பதன் மூலம் வெண்மை புரட்சி ஏற்பட்டுள்ளது.

                குடும்பத்துக்கு 4 வெள்ளாடுகள் வீதம் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கொடுக்க உள்ளோம். இதில் 30 சதவீதம் ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்க இருக்கிறோம். இதன் மூலம் ஆதிதிராவிட மக்களுக்கு ஆதரவான அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதும் வெற்றி பெற்றது போல், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையை உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிப்போம்.  இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.  அப்போது நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

2011 தமிழக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயார்

               உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

              மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமும், கிராமப் பகுதிகளில் ஓட்டுச்சீட்டு மூலமும் வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்னணு எந்திரங்களை மத்திய தேர்தல் கமிஷன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  ஓட்டுச்சீட்டுகள் அச்சடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடிகளை உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதவிர வார்டு தேர்தலை கருத்தில் கொண்டு சிறிய கிராமங்களிலும் வாக்குச் சாவடி அமைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

             2001-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. வார்டு தேர்தல் நடத்துவதற்கு ஏற்ப, உள்ளாட்சி தேர்தல் பட்டியல் தயாராகி உள்ளது.

                    மாநகராட்சி, நகர பஞ்சாயத்து தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கும் முறை தற்போது உள்ளது. மீண்டும் மேயர், நகராட்சி தலைவர், நகர பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான சட்டதிருத்தம் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

             அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்-டாப், கறவை மாடுகள் வழங்குவது போன்ற இலவச திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கும் என மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், ஜூலை 18, 2011

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 40 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார்

         தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டும்.தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாராகி வருகிறது.

         உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப்பஞ்சாயத்துக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறையும் நகர்புற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய தேர்தல் கமிஷன் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களை வழங்குகிறது.

           கிராமப்புற பகுதிகளில் பொது மக்கள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்காக 4 ஓட்டுகள் போட வேண்டியுள்ளது. எனவே கிராம பகுதிகளில் ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தற்போது கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களையும் முன்புபோல நேரடியாக பொது மக்களே தேர்ந்து எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 






Read more »

வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 55 பதவிகளுக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. எஞ்சிய 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.

            மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் 48 இடங்களும், ஊராட்சி தலைவர் 3, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 2, நகராட்சி கவுன்சிலர் பதவி ஒரு இடம் என மொத்தம் 55 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான இடைதேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிந்தது. 12ம் தேதி மனு பரிசீலனை செய்யப்பட்டது. 14ம் தேதி மனுக்களை வாபஸ் பெறப்பட்டு, அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது.

            அதில் 48 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக 6 வார்டுகளுக்கு மனு தாக்கல் நடைபெறவில்லை. மீதமுள்ள 42 வார்டுகளில் 36 வார்டிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னபேட்டை ஒன்றிய கவுன்சிலராக பழனியம்மாள் (தி.மு.க), மேல்புவனகிரி பேரூராட்சி 7 வது வார்டிற்கு முத்து என்கிற கோவிந்தசாமி (தி.மு.க), மேல் பட்டாம்பாக்கம் 14வது வார்டு கவுன்சிலராக கோவிந்தசாமி (தி.மு.க), சிதம்பரம் நகராட்சி முதல் வார்டிற்கு தியாகு என்கிற தியாகராஜன் (வி.சி.,) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

              மீதமுள்ள உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதில் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும், பரங் கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். கொளப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் தேர்தல் நடக்கவில்லை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior