உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஊடுபயிர் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடுபயிர் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 17, 2011

கடலூர் மணிலா ஊடுபயிராக கல் மூங்கில்


கடலூர் அருகே தியாகவல்லி கிராமத்தில், மணிலா ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு உள்ள, கல் மூங்கில்.
 
கடலூர்: 

         மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்ற சங்க காலப் பாடல் வரிகளை பலரும் அறிந்து இருப்பார்கள்.  

         கவிஞர்களின் கற்பனைக்கு வளம் சேர்க்கும் மூங்கில், இன்று விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயிராக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது.

           இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. 

             உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது.  ÷எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. 

               மூங்கில் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.  விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத்தில் நிலையற்ற தன்மை காரணமாக விவசாயம் உபதொழிலாக மாற்றப்படுவதால், பலர் தங்கள் நிலங்களில் சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. சவுக்கு, தைல மரங்களைவிட மூங்கில் அதிக வருவாய் தரக்கூடிய பயிராகவும், 3 மடங்கு வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது. 

           வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட முள் இல்லாத மூங்கில் வகைகளை, பல்வேறு தட்பவெப்ப நிலங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, 4 ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட ஏற்ற மூங்கில்களாக அறிவித்துள்ளனர். அவை பேம்பூஸô நியூட்டன்ஸ், பேம்பூஸô பலகுவா, வேம்பூஸô வல்காரிஸ், பேம்பூஸô டுல்டா ரகங்கள். தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் கல் மூங்கில், ஈரச் செழிப்பான பகுதிகளில் பொந்து மூங்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.  

            மூங்கிலை நடவு செய்ய, நாற்றுவிட்டு நடுவது, மூங்கில் கிழங்கை வெட்டி எடுத்து நடவு செய்தல், மூங்கில் கழிகளை கிழங்குடன் வெட்டி எடுத்து நடுதல், திசு வளர்ப்பு முறை, மூங்கில் கழிகள் மற்றும் பக்கக் கிளைகளை முளைக்க வைத்து நடுதல் எனப் பல வழிமுறைகள் உள்ளன. நாற்றுவிட்டு நடவு செய்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. கோடைகாலங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறை பாத்திக்கு 25 முதல் 50 லிட்டர் வரை நீர ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கிலை 200 வகையான பூச்சிகள் சேதப்படுத்தும். என்றாலும் 10-க்கும் குறைவானவைகளே முக்கியமானவை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு முறைகள் தேவை.  

            பராமரிப்புக்கு ஏற்ப நட்ட 4-ம் ஆண்டு முதல் மூங்கில் கழிகளை வெட்டி அறுவடை செய்யலாம். கல் மூங்கில் ஹெக்டேருக்கு 2,400 கழிகளும், பொந்து மூங்கில் ஹெக்டேருக்கு 1,662 கழிகளும் கிடைக்கும். மூங்கில் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 6-ம் ஆண்டு ரூ. 25,500 ம், 7-ம் ஆண்டு ரூ. 30,800ம், 8-ம் ஆண்டு ரூ. 36,200ம், 9 முதல் 15-ம் ஆண்டு வரை ரூ. 39,600 வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மொத்தச் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம்.  

இதுகுறித்து கடலூரை அடுத்த தியாகவல்லி விவசாயி சாமி கச்சிராயர் கூறுகையில், 

               மூங்கில் விவசாயத்துக்கு ஹெக்டேருக்கு 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 8 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. தியாகவல்லி, திருச்சோபுரம் பகுதிகளில் 5 ஏக்கரில் கல் மூங்கில் பயிரிட்டுள்ளேன். சவுக்கு மற்றும் தைல மரச் சாகுபடியைவிட மூங்கில் லாபகரமானது. விரைவில் வளரும். 4 ஆண்டுகள் வரை மணிலா, அவரை, முள்ளங்கி, தர்ப்பூசனி போன்றவற்றை ஊடு பயிராகச் சாகுபடி செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார். 

Read more »

வியாழன், டிசம்பர் 16, 2010

மணிலாவுடன் ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி


மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.
சிதம்பரம்: 
 
            தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 
            இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.
 
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
 
               கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.
 
            இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும். புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.
 
              இவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம். இதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது. 
 
              இவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 
பிற பயன்கள்: 
 
                இந்த ஊடுபயிர் சாகுபடியில் மணிலா பாதிக்கப்பட்டாலும், கேழ்வரகால் லாபம் கிடைக்கிறது. மணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.
 
                .நிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.எனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.

Read more »

நாற்றங்காலை முறையாக பராமரித்தால் கூடுதல் மகசூல்


விழுப்​பு​ரம் அடுத்​துள்ள பிடா​கம் கிரா​மத்​தில் மேட்​டுப்​பாத்தி முறை​யில் நாற்​றங்​கா​லுக்​காக மிள​காய் விதையை விதைக்​கும் விவ​சா​யி​கள்.
 
சிதம்பரம்: 
 
               தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 
              இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.
 
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
                         
               கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.
 
                இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும். புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. 
 
              மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.இவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம். 
 
             இதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 
பிற பயன்கள்: 
 
              இந்த ஊடுபயிர் சாகுபடியில் மணிலா பாதிக்கப்பட்டாலும், கேழ்வரகால் லாபம் கிடைக்கிறது. மணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.நிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.
 
               எனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.

Read more »

சனி, மே 15, 2010

விவசாயத்தில் லாபம் பெற ஊடுபயிராக நாட்டுத்துவரை

கடலூர் :

                    பாரம்பரிய விவசாய முறையில் அதிக லாபம் கிடைக்காத நிலையில், பல்வேறு மாற்று முறைகள் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்று வருகின்றனர். இந்த வகையில் ஊடுபயிர் சாகுபடி சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. தேயிலையின் ஊடுபயிராக குறுமிளகு சாகுபடி செய்து மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வகையில், இம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மல்லி பயிரிடையே, நாட்டுத் துவரையை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40 கிராமங் களில் உள்ள மானாவாரி நிலங்களில், மல்லி பயிருடன் ஊடுபயிராக நாட்டு துவரையை பயிரிட்டனர். தற்போது, மல்லி பயிர் அறுவடை முடிந்துள்ளது. இந்நிலையில், ஊடுபயிராக பயிரிடப்பட்ட நாட்டுத்துவரை தற்போது பூத்துக் குலுங்கி, அதிக அளவு காய்ப் பிடிப்புடன் காணப்படுகிறது. நாட்டுத் துவரையின் அமோக விளைச்சலால் விவசாயிகள் அதிகம் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior