உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




என் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 17, 2011

கிணற்றுக் குளியல் - என் அனுபவம்





           கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஆயினும்,  கிணற்றில்  குளித்த அனுபவம் இல்லை, முதல் முறையாக   கடந்த ஞாயிற்றுகிழமை ( 12.06.2011) அன்று 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு என்பதைவிட நீச்சல் கற்றுகொள்ளும்  வாய்ப்பாக இருந்தது.

கவனிக்க : எனக்கு தண்ணீரைக் கண்டாலே  பயம், கடற்கரைக்கு சென்றாலே கடலில் இறங்கினாலும் அதிகம் தூரம் சென்று குளிக்க மாட்டேன், சும்மா கரையிலே நின்று குளித்து விட்டு வருவேன்.  

            அவ்வளவு பயம் உள்ள நான் முதலில் கிணற்றில் குளிப்பவரை வேடிக்கை பார்க்கும்  எண்ணத்தோடுதான்  சென்றேன்.  என்னுடன் நன்கு நீச்சல் தெரிந்த உறவினர் 2 பேர் வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் தான் களத்தில் குளித்தார்கள்.  என்னைவிட சிறியவர்கள் கூட மிக அழகாக நீச்சல் அடித்தனர். 

               அவர்கள் நீச்சல் அடிப்பதை  பார்க்க  பார்க்க, எனக்கும் ஒரு வித ஆசையாக இருந்தது. சுமார் 15 நிமிடத் தற்குப் பிறகு  ஒருவழியாக தைரியத்தை வரவைத்து களத்தில் இறங்கினேன்.  முதலில் தண்ணீரில் மூழ்கிவிட்டேன். துணைக்கு வந்தவர்கள்தான் ஒரு வழியாக மேலே தூக்கினர். பிறகு அவர்கள் பிடித்து கொள்ள நான் நீச்சல் பழக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஆர்வமாக மாறியது. ஒரு வழியாக கை கால்களை உதைத்து நீச்சல் பழக  ஆரம்பித்தேன்......கற்றுக்கொண்டு இருக்கிறேன்.........விரைவில் ஒரு நீச்சல்காரனாக.................உங்கள் முன்.......................

இடம்: திருத்தணி அருகே உள்ள திருவலங்காடு கிராமத்தில் வபதியம்மன் கோயில் பின்புறம் கோடையிலும் வற்றாத பசுமையான நெற்வயல்களுக்கிடையே உள்ள 200அடி ஆழம் உள்ள கிணறு.



அதிர்ச்சி : நான் கிணற்றில் நீச்சல் பழக ஆரம்பித்த அன்றுதான் ஞாயிற்றுகிழமை ( 12.06.2011 , திருத்தணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குளித்தபோது இறந்தனர் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.







Read more »

வெள்ளி, மார்ச் 25, 2011

நான் முதல்வர் ஆனால் முதல் அமைச்சர் இருக்கை இலவசம்

என் உள்ளக் குமுறல் - 2011 சட்டமன்றத் தேர்தல் 

என்னதான் நடக்கிறது நமது தமிழகத்தில் !!!!! 




           அரசியல் ஒரு சாக்கடை, அரசியல் வாதிகள் ஊழல்  பெருச்சாளிகள், குடிமக்கள் இன்று குடிகாரமக்கள்.

தேர்தல் நெருங்கிவிட்டது:

             ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அடுத்தடுத்த தேர்தல் மக்களை ஏமாற்றும், பொய்யான  அறிக்கைகைள் மற்றும் வாக்குறுதிகள்  (ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள் ) 

கிரைண்டர், மிக்ஸ்சி, பிரிட்ஜ் என்று......................................சில உளறல்கள். 

             இலவசம் ஒன்றை நம்பியே  இரண்டு  பிரதான கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால்  ஆளுங்கட்சியின்  தேர்தல் அறிக்கையின் நகல் எதிர் கட்சியின் தேர்தல் அறிக்கை. இவ்வளவு காலம் கொடுத்த இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது. 
 குடிமக்கள் (குடிகாரமக்கள்) ------------------>>>>அரசு  மதுபானக் கடை ------------->>>>  இலவசம்


இலவசம்----------------<<<<<<<<<<<அரசு  மதுபானக் கடை<<<<<<------------------ குடிமக்கள் (குடிகாரமக்கள்)

இலவசம் அளிக்க நன்கொடை அளிக்கும்  நம்ம குடிகார மக்களுக்குத்தான் ஒரு இலவசம் கூட இல்லை..............................அதற்க்கு ஆட்சி அமைக்க போகும் கட்சியின் உடனடி  நடவடிக்கை தேவை...............................................
           


நான் முதல்வர் ஆனால் நம்ம குடிகார மக்களுக்கு கோட்டரும், கோழி பிரியாணியும் பிரதி ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்  கிழமைகளில்  மூன்று  வேளையும் ( வேலை ஏதும் செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டும் ) அளிக்கப்படும்.






   

Read more »

புதன், பிப்ரவரி 02, 2011

மறைந்து போனதும் மறந்து போனதும் புதிய தொடர்




          
            தினசரி வாழ்க்கையில் நம் முன்னோர்களின்  பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு   முறைகள்   இவற்றில்  எதாவது ஒன்றை மறக்கிறோம் அல்லது பயன்பாட்டில் இருந்து மறைந்து விடுகிறது. உதாரணமாக தமிழர் கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் உடை, உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறுகிறது அல்லது மாற்றபடுகிறது, ஒரு தலை முறையினர் பயன்படுத்தியவை அடுத்த தலை    முறையினரால் ஏற்றுகொள்ள முடியாத  அல்லது வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்றாக  இருக்கிறது.


            இந்தமாற்றத்தினை  தவிர்க்க முடியாது அல்லது  மாற்ற முடியாது. ஒரு காலத்தில் சென்னை வானொலி அலைவரிசையைத்தான் நாம் கேட்டு இருப்போம்.  அனால் காலத்தின் மாற்றம் அல்லது அறிவியல் வளர்ச்சியின்  காரணமாக    இன்று பண்பலை அலைவரிசை மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. அனால் இவற்றின் அடிப்படை மக்களின் தேவையே.

                  இது தொடர்பாக வரும் நாட்களில் மறைந்து போனதும் மறந்து போனதும் புதிய தொடர் எழுத உள்ளேன். உங்களது வாழ்கையில் நீங்கள் பயன்படுத்திய ஒன்று இன்று மாற்றம் பெற்று இருக்கலாம் அல்லது   மறைந்து இருக்கலாம் , அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம், உங்களது கருத்துக்கள் எதிர்பார்த்து  மறைந்து போனதும் மறந்து போனதும் இளமைக்கால  நினைவுகளோடு.............. 

Read more »

செவ்வாய், நவம்பர் 30, 2010

நந்தலாலா திரைப்படத்தோடு என் அனுபவம்


           நேற்று (29/11/2010) சிறு  பிரச்னை, அதை  மறக்க நீண்ட நாட்களுக்கு சினிமா செல்லலாம் என்று நினைப்போடு திரை அரங்கத்திற்கு சென்றேன்.  கடந்த வாரம் திரையிடப்பட்ட நந்தலாலா திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.

            திரைப்படம் தொடங்கியதிலிருந்தே ஒரு சின்ன எதிர்பார்ப்பு, கதையும் கதைக்கான  கருப்பொருளும் சற்று வித்தியாசமானதாய் அமைந்திருந்தது. 

கதையின் சுருக்கம்:




                தாயை தேடி செல்லும் ஒரு ஐந்து வயது பள்ளி சிறுவன் அந்த சிறுவனுக்கு உதவியாக ஒரு மன நலம் சரியில்லாத ஒரு மனிதர்.     தாயை தேடி செல்லும்வழியில் அச்சிறுவனும் மன நலம் சரியில்லாத மனிதரும் சந்திக்கும் நபர்கள், பிரச்சனைகள்தான்  கதையின் சுருக்கம்.  தாயின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு குழந்தையின் உணர்வுகளை அழகாக இயக்குனர் சொன்னவிதம் சற்றே வித்தியாசம்.     

நம் தளத்தின் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

            பிரமாண்டம் எனும் பெயரில் கோடி கோடியாய் செலவழித்து தமிழ் சினிமாவை சிதைப்பவர்கள்  மத்தியில் இதுபோல் உணர்வின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு சில படங்களை வரவேற்போம், உங்களால் முடிந்தால் இந்த படத்தை பார்த்து உங்களின் கருத்துக்களை  சொல்லுங்கள்.   

               படம் முடிந்து வெளியில் வந்த பிறகு என் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தது.

Read more »

சனி, ஜூலை 10, 2010

என் ஊரில் என் அனுபவம்

          
                கடந்த சனிக்கிழமை (03/07/210) அன்று சொந்த வேலை காரணமாக கடலூருக்கு வந்திருந்தேன்.

1 . கடலூர் பழைய அண்ணா பாலத்தில்

               நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் பழைய அண்ணா பாலத்தில் நடந்து செல்லும்  வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்கும் பொது வகுப்பை கட் அடித்துவிட்டு வந்து  இந்த பாலத்தில்தான் என் நண்பர்களோடு பெரும்பாலான நாட்களை கழித்து இருக்கிறேன். . . அந்த நாட்களில் அங்கே அன்னாசி பழம் விற்கும், கையில் இருக்கும் காசுக்களைஅந்த அன்னாசிபழங்களை வாங்கி சாப்பிடுவோம். அனால் இப்போது அந்த கடைகளை அங்கே காணவில்லை. அந்த நாட்கள் என் கண்முன்னே வந்து சென்றது.........

2 . பழைய புத்தக கடை

             அங்கே என் கணினி அறிவை வளர்த்த ஒரு பழைய புத்தக கடை ( இந்த கடையில் தான் முதன் முதலாக  நான் கம்ப்யூட்டர் உலகம் என்ற புத்தகத்தினை பாதிவிலைக்கு வாங்கினேன், இங்கேதான் என் கணினி புத்தகம் படிக்கும் பயணம் தொடங்கியது ) தற்போது தன் கடைக்கு  பெயர் பலகை வைத்து சற்று முன்னேறி இருக்கிறார். அவருக்கு என் நன்றியினை இங்கே சொல்லி கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி. 

3. பிச்சாவரம் சுற்றுலா மையம்

             முதன் முதலாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையின் அழகான படைப்பு நம் ஊரில் என்ற பெருமை பட்டுக்கொண்டேன். நம் மாவட்டத்தின் இந்த சிறப்பையும் நாம் இழக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை எங்கே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அங்கே பராமரிப்பு நன்றாக இருந்தாலும் அங்கே வைத்துள்ள அரசாங்க எச்சரிக்கை பலகை எனக்கு வியப்பாக இருந்தது. தனியார் படகில் உலா வந்து ஏதேனும் உயிர் இழப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை......என்ற வரி தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தமிழக சுற்றுலாதுறையின் கீழ் இயங்கும் இச்சற்றுலா மையத்தில், தனியார் படகு எப்படி வந்தது என்றே தெரியவில்லை.. மேலும் தொலை நோக்கி வழியாக பிச்சாவரம் கடற்கரையை பார்க்கலாம் என்று சொன்னார்கள்,  நம்பி போய் பார்த்தேன் ஏமாற்றம்தான் மிச்சம், அதற்கு ஐந்து ருபாய் கட்டணம், வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் இல்லாதது கொஞ்சம் நன்றாக இருந்தது.

4 . கிள்ளை ரயில்வே நிலையம்

            கிள்ளை ரயில்வே நிலையத்தில் வைத்திருந்த ஊர் பெயரை காட்டும் பெயர் பலகையில் கிள்ளை (KILLAI) என்று இருக்க வேண்டிய ஆங்கில சொல் கில்லே (KILLE) என்று இருக்கிறது. ஒரு வேலை ஆங்கிலேயர் காலத்து சொல்லோ, இந்த மாதிரி (KILLE)  என்று மூன்று இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. கொஞ்சம் யாராச்சும் கவனிச்சு சொல்லுங்கப்பா, திருத்தம்  வந்தால் எனக்கு தெரியபடுத்தவும்.

5 .  சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரி 

  இங்கே வைத்துள்ள கல்லூரியின் பெயர்ப்பலகை அநேகமாக கல்லூரி ஆரம்பித்த காலத்தில் வைக்க பட்டது என்று நினைக்கிறேன். பெயர்ப்பலகையினை கொஞ்சம் புதிதாக எழுதி வர்ணம் பூசக்கூடதா? 

6 . பி. முட்லூர் - சிதம்பரம் பாலம் 

         இந்தப்பாலம் கடலூரில் இருந்து பி முட்லூர் வழியாக சிதம்பரம் செல்லும் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு என் நன்றியினை  தெரிவித்து கொள்கிறேன்.

7 . கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை

           இன்னும் மாறாத அந்த மூக்கை துளைக்கும் நாற்றங்கள். இதற்கு முடிவு எப்போது என்றே தெரியவில்லை, இங்கே புதிதாக பிரமாண்டமாய் கட்டப்பட்டு வரும் கெம் பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தினை கண்டு வியந்தேன். சிப்காட் வரவேற்பு பலகை அருகே கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளுக்கு விடிவுகாலம் எப்போது?

8 . ஜாய் அலுகாஸ் நகை கடை 

        கடலூரில் லாரென்ஸ் சாலையில் பிரமாண்டமாய் ஜாய் அலுகாஸ் நகை கடை, நம்ம ஊரு மின்சாரம் இங்கே உள்ள குளிர் சாதன பெட்டிகளுக்கு பயன்படுத்துவதை கொஞ்சம் குறைத்தால் ன்றாக இருக்கும்.


குறிப்பு: இங்கே எழுதபட்டுள்ள வரிகள் அனைத்தும் யார் மனதையும்  புண் படுத்தாமல் என் அனுபவ வரிகள்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior