உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 09, 2012

கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: கண்ணீருடன் கரும்பு விவசாயிகள்

நெய்வேலி அருகே அறுவடை தாமதத்தால் வயலிலேயே காய்ந்து வரும் கரும்பு.

நெய்வேலி:

 கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவேண்டிய கரும்புகள் வெட்டப்படாததால் அவை கருகுவதைக் கண்டு, பயிரிட்ட விவசாயிகள் கண்ணீருடன் மாற்றுவழித் தெரியாமல் தவிக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டுமே இயங்கிவருகிறது. இவற்றைத் தவிர பெண்ணாடம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நம்பி பயிர்செய்த விவசாயிகள் பயிரிட்ட கரும்பை குறித்த காலத்துக்குள் அறுவடை செய்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருமாத காலமாக போராடிவருகின்றனர். ஆனால் போராட்டம் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயப் பகுதியான சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோயில், கம்மாபுரம், சிதம்பரம், விழுப்புரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது.

கூட்டுறவு ஆலைகளை நம்பி பயிரிட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருப்பதை அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கரும்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வட்டி அதிகரிப்பதால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்துவருவதால் கரும்பை வெட்ட முடியாத விரக்தியடைந்த தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் பயிர்வித்த கரும்பை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.கரும்பு விதைப் பயிர் சட்டத்திட்டத்திற்கேற்ப ஒரு இடத்தில் பயிரிட்ட கரும்பை குறிப்பிட்ட ஆலைகளைத் தவிர வேறு ஆலைகளுக்குக் கொண்டு சென்று அரைக்க முடியாத அவலநிலை இருப்பதால் கருகும் நிலையில் உள்ள கரும்புகளை வெட்ட முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதேநிலை நீடித்தால் கரும்பு விவசாயிகள் எதிர்காலத்தில் கரும்பு பயிரிடுவதை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும். இந்த நிலையை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும் அரசும் புரிந்துகொண்டு, மாற்று வழிகளை ஆராய்ந்து கரும்பு விதைப் பயிர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு இப்போராட்டம் நடைபெறுவதால், பாதிக்கப்படுவர்கள் கரும்பு விவசாயிகள்தான். தமிழக கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் கண் முன்னே தினந்தோறும் செத்து மடியும் கரும்பு விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறது? 






Read more »

சனி, மே 28, 2011

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு

சேத்தியாத்தோப்பு:

       சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததால், 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில், கடந்த மார்ச்சில், 17 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாய்லர் புதுப்பிக்கப்பட்டது. இந்த பாய்லரில், 3,440 டன் மொலாசஸ் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு பாய்லரின் அடிப்பகுதி திடீரென வெடித்தது. பாய்லரில் இருந்த மொலாசஸ், ஆலையின் பின்புற பகுதி முழுவதும், குழம்பாக பரவியது. இதில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது.




Read more »

புதன், அக்டோபர் 20, 2010

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

சிதம்பரம்:

                  சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டதால் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

                       இருமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் போது, தொகுப்பு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                  இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் அக்டோபர் 14-ம் தேதி முதல் வேலைக்கு திரும்ப முடிவெடுத்தனர்.இந்நிலையில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அக்டோபர் 14-ம் தேதி பணிக்கு சென்றபோது, தொழிúôற்சங்க மாநில நிர்வாகிகள் பாலகுருசாமி, வேலவன், பஞ்சநாதன், பரமசிவம், இளவரசன், எழிலன், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                      இதையடுத்து வேலைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து அக்டோபர் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவாக அக்டோபர் 15-ம் தேதி விவசாய சங்கங்கள் பங்கேற்ற, ஆலை ஆட்சியர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பில் கோட்டாட்சியர் அ.ராமராஜு, டிஎஸ்பி ராமசந்திரன், வட்டாட்சியர் எம்.காமராஜ், ஆட்சியர் ஆசியாமரியம் உள்ளிட்டோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் தீவரமடைந்துள்ளது.

Read more »

செவ்வாய், அக்டோபர் 05, 2010

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையை நம்பியுள்ள கரும்பு விவசாயிகள்

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியுள்ள விவசாயிகளுக்கு விதிமுறைப்படி பங்குத் தொகை மற்றும் சர்க்கரை விநியோகம் வழங்கப்படாததால் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

              எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முறையற்ற நிர்வாகப் போக்கினால் லாபத்தில், கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படாததால் பொருளாதார நஷ்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். 2004-ம் ஆண்டு அரவைப் பருவத்திலிருந்து 2010-ம் ஆண்டு அரவைப் பருவம் வரை  ஆலை ஈட்டிய லாபம் |27 கோடியாகும். கூட்டுறவு விதிமுறைப்படி கரும்பு சப்ளை  செய்தவர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் எத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. 

            மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநில அரசின் ஆதரவு விலை கொடுக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 16 கோடியாகும். எத்தனால் ஆலை நிறுவ, கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த  337 லட்சம் பெறப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் எத்தனால் ஆலை தொடங்கப்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் கே.ஆதிமூலம் தெரிவித்தது: 

               ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சர்க்கரை விநியோகம், சரியாக வழங்கப்படவில்லை. ஒரு தலைபட்சமாக பாதி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதி பேருக்கு வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் விதைக் கரணைகள் வழங்கியதில் சரியான கொள்கையை பின்பற்றாததால் விவசாயிகளுக்கும், ஆலைக்கும் பெருத்த நஷ்டமும், கரும்பு உற்பத்தியில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

                        கரும்பு உற்பத்தி செய்து ஆலை இயங்க ஆணி வேராக உள்ள கரும்பு விவசாயிகளின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஆலை நிர்வாகத்தின் செயல்பாட்டையும்,  கொள்முதல் செயல்பாட்டையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தி, ஆலை நிர்வாகம் லாபத்துடன் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: அரசின் நடவடிக்கையால் பலன் கிட்டியது

சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு விலை உயர்வு மற்றும் எம்.ஆர். கே., சர்க்கரை ஆலை ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             சேத்தியாத்தோப்பு பகுதியில் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உருவாக்கப்பட்ட சர்க்கரை ஆலை வரப்பிரசாதமாக அமைந்தது. 1989ம் ஆண்டு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டதிலிருந்து இப்பகுதி விவசாயிகள் உணவுத் தேவைக்கு நெற் பயிரையும், பணத்தேவைக்கு கரும்பையும் பயிரிட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட தயங்கினர். 

              இந்நிலையில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்புத் துறையில் நடந்த முறைகேடுகளால் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கு வேம்பாகியது.இதன் காரணமாக கடந்த 2009-2010ம் ஆண்டு குறைந்த பட்ச அறவைத் திறனுக்கு தேவையான 4.5 லட்சம் டன் கரும்பு கூட கிடைக்காததால் 2 லட் சத்து 635 டன் மட்டுமே கரும்பு அறவை செய்யப் பட்டது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலையை மீட்கும் வகையில் தமிழக அரசும் சர்க் கரை துறை ஆணையமும் இணைந்து, ஆலைக்கு புதிய ஆட்சியராக ஆசியா மரியத்தை கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது.

             அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் 2010-2011 கரும்பு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலை தந்த போதிலும் பருவ மழை மாற்றம், இயற்கை சீற்றம், மின் தட்டுப்பாடு, கூலித் தொழிலாளர்கள் பற் றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் விவசாயிகளை அச்சுறுத்தியது.நிலமையை உணர்ந்து எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட் சியர் ஆசியா மரியம் ஆலை நிர்வாகத்தில் இருந்த முறைகேடுகளை களைய நடவடிக்கை மேற் கொண்டார்.

                அதன் காரணமாக கரும்பு உதவியாளர் கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வரத் துவங்கினர். கரும்பு வெட்டு உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார்.மேலும், அனைத்து கரும்பு கோட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அப்பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். அந்த குறைகளை களையவும் நடவடிக்கை மேற்கொண்டார். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை ஆலையின் நிர்வாகத்தின் மீது விவசாயிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

                    மேலும், தமிழக அரசு சமீபத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியிருப்பதும் விவசாயிகளிடையே கரும்பு பயிரிட ஆர்வத்தை தூண் டியுள்ளது. 2009-2010ம் ஆண்டு கரும்பு பதிவு மிக குறைவாக இருந்த நிலையில் உடனடி பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தும் கூட 10 ஆயிரத்து 590 ஏக்கர் கரும்பு பயிர் மட்டுமே பதிவு செய்து அறவை செய்யப் பட்டது. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளால் இப்பகுதி விவசாயிகள் தற்போது ஆர்வத்துடன் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.

             இதன் காரணமாக நடப்பு (2010-2011ம்) ஆண் டின் அறவை பருவத்திற்கு கடந்த ஜூன் மாதம் வரையில் 10 ஆயிரத்து 436 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி வரையில் கரும்பு பதிவிற்கான காலக்கெடு உள்ளதாலும், உடனடி பதிவு திட்டத்தின் மூலம் மேலும் ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பதிவாகும் என ஆலை நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியரின் நடவடிக்கையால் புதிய ரக கரும்பு பயிர்கள் நடவு செய்துள்ளதால் அதிக மகசூல் வாய்ப்பு இருக்கும் என்பதால் ஆலை அறவைக்கு தேவைக்கு கூடுதலாகவே கரும்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more »

வியாழன், ஜூலை 01, 2010

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கணக்கு அலுவலர் தீனதயாளன் அலுவலக மேலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.

                  கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இலவசமாக விதை கரணை வழங்க வேண்டும். கரும்பு உதவியாளர்கள் பணி முறைகளை செம்மைப்படுத்த வேண்டும். தலைமை கரும்பு அலுவலர் பாரபட்சமில்லாமல் விவசாயிகள் மற்றும் கரும்பு துறை ஊழியர்களை அணுகி கரும்பு உற்பத்தியை பெருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர்பாசனத்திற்காக ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior