உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




எம்.புதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.புதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 25, 2011

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/5e5311f4-e5a9-4ac2-bf0a-2fc20708cd4f_S_secvpf.gif
 
 
கடலூர்
 
           கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

            வெங்கடேஸ்வராநகர் அருகே அவர் வரும் போது அருள்நாதன் காரில் அங்கு வந்தார். டிரைவர் இளம்வழுதி காரை ஓட்டி வந்தார். பழனி வேலுவை அருள்நாதன் வழி மறித்து திட்டினார். உடனே பழனிவேல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால் அருள்நாதனும் இளம் வழுதியும் வேகமாக காரை ஓட்டிச்சென்று பழனிவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  இதில் கீழே விழுந்தத பழனிவேல் அங்கிருந்து தப்பி ஓடினார். அருள்நாதனும், இளம் வழுதியும் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக திருப்பாபுலியூர் போலீசில் அவர் புகார் செய்தார்.

              இதையொட்டி அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில் எம்.புதூரில் ஆரங்கியன் வீட்டில் அவரது மனைவி குப்பு, உறவினர்கள் காந்தி, வெங்கடேசன், இளையபெருமாள், பூங்கொடி ஆகியோர் வீட்டில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன் உள்பட சிலர் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த டி.வி, மின்விசிறி, டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர்.

                இதை தடுத்த வெங்கடேசனை கத்தியால் குத்தினார்கள். குப்பு, காந்தி, இளையபெருமாள், பூங்கொடி ஆகியோரை இரும்பு குழாயால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்தும் திருப்பாபுலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன், சக்திவேல், சிவநாதன், ராஜீவ்காந்தி, வின்சென்ட், கண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், நவம்பர் 01, 2010

கடலூரில் மினி பஸ்கள் இயங்காததால் மாணவ, மாணவிகள் அவதி

கடலூர் : 

               ஒரு வாரமாக மினி பஸ் இயங்கதாதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடலூரில் இருந்து டி.புதுப்பாளையத்திற்கு ஐந்து மினி பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

                    ஆனால் மூன்று மினி பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் டி.புதுப்பாளையம், வண்டிக்குப்பம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பயனடைந்தனர்.இந்நிலையில்  இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங் களாக ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது.

                      இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், எம்.புதூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது மாணவ, மாணவிகள் இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிக் குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

குடிநீருக்கு தவிக்கும் கேப்பர்மலை கிராம மக்கள்

கடலூர்:

                      கடலூர் மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கேப்பர்மலை கிராமத்தில், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் நகருக்கு கேப்பர்மலையில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்கப் படுகிறது. பல்வேறு கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் கடலூருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

             கேப்பர்மலையில் உள்ள கிராமம் எம்.புதூர். இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஊராட்சி மன்ற ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட அக்கிராம மக்கள், அங்குள்ள தோட்டங்களில் வயல்வெளிகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர கூறியது 

                           ஏற்கெனவே போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர், குடிக்கச் சுவையாக இல்லாமல் மோசக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில நாள்களில் ஆழ்குழாய்க் கிணறு போடப்பட்டுவிடும். அதன்பிறகு நல்ல குடிநீர் எம்.புதூர் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.

Read more »

புதன், ஜூன் 30, 2010

அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர் தாக்கு: 5 பேர் மீது வழக்கு

கடலூர்: 

                 ஊராட்சி தலைவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரங்கி. இவர் ஊராட்சி தேர்தலில் அருள்நாதனை எதிர்த்து நின்று தோற்றவர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரங் கிக்கு சொந்தமான டிப்பர் லாரி (டி.என் 31 1976) கன்னிமாநகர் செம்மண் குவாரி அருகே நடந்து சென்ற அருள்நாதன் மீது மோதுவது போல் வந்தது. இதனையடுத்து அருள்நாதன் லாரி நிறுத்தி டிரைவரை திட்டினார்.

                    இதில் ஆத்திரமடைந்த அருகில் இருந்த ஆரங்கி, பழனிவேல் மற்றும் சிலர் அருள்நாதனை, திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஆரங்கி, பழனிவேல் மற்றும் அருள்நாதன், கிளார்க் சக்கிவேல், தட்சணா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் வக்கீல் அருள்நாதனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கடலூரில் வக்கீல்கள் நேற்று (29ம் தேதி) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Read more »

செவ்வாய், மார்ச் 09, 2010

ஒரு மாதமாக மினி பஸ் இயங்காததால் டி.புதுப்பாளையம் மாணவர்கள் அவதி

கடலூர் :

                   டி.புதுப்பாளையத்திற்கு செல்லும் மினி பஸ்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளதால் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பஸ்சிற்காக மூன்று கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.
 
                         கடலூர்-டி.புதுப்பாளையத்திற்கு நான்கு மினி பஸ்கள் இயங்கி வந்தன. இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக் கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னை காரணமாக இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரண்டு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்த பஸ்களும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், பொதுமக்கள் கடலூருக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் தினமும் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி மாணவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து, டி.புதுப்பாளையத்திற்கு பஸ் இயக்க வேண்டும். ஏற்கனவே கடலூரிலிருந்து டி.புதுப்பாளையம் வழியாக கீரப்பாளையம் வரை சென்று வந்த அரசு பஸ்சை மீண் டும் இயக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior