உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




எள் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எள் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 27, 2010

புவனகிரி பகுதி விவசாயிகள் "எள்' பயிர் செய்வதில் ஆர்வம்

புவனகிரி:

            புவனகிரி பகுதி விவசாயிகள் எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 697 எக்டரில் மானாவாரி பயிரான எள் பயிர் செய் யப்பட்டுள்ளது. எக்டருக்கு 500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும் எள் மூட்டை (80 கிலோ) தற்போது 3, 200 முதல் 3,800 வரை விலை கிடைக்கிறது. 

                 கடலூர் முதுநகர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 26.4 மெட்ரிக் டன், பண்ருட்டியில் 189.6, விருத்தாசலத்தில் 2,056, திட்டக்குடியில் 91, குறிஞ்சிப்பாடியில் 686.4, ஸ்ரீமுஷ்ணத்தில் 28.5 மெட்ரிக் டன்னும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

               காவிரி டெல்டா பகுதியான குமராட்சியில் மட்டும் இந்த ஆண்டு 140 எக்டர் எள் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது புவனகிரி பகுதியிலும் விவசாயிகள் எள் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காரணம் நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு 1,100 ரூபாய் மட்டுமே கிடைக்கும் இந்த நிலையில் அதிக விலைக்கு போகும் மானாவாரி பயிரான எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Read more »

வியாழன், ஜூன் 03, 2010

எள் சேமிப்பு தேவையில்லை: வேளாண்மை துணை இயக்குநர் வேண்டுகோள்


விருத்தாசலம்: 
 
                விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை உடனடியாக விற்பனை செய்யுமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
எள் விற்பனை குறித்து கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  
 
                  விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது இறவை எள் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் வரத்து ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். தற்போது சந்தைக்கு வரும் எள்ளின் தரம் மானாவாரி எள்ளைவிட நன்றாக இருக்கும்.மொத்த வரத்தில் 75 சதவீதம் சிவப்பு எள்ளாகும். மீதியுள்ள வெள்ளை எள், ஏற்றுமதி மற்றும் அடுமனை தயாரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் ஆலையாளர்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை கர்நாடக மாநிலத்தில் இருந்தும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆந்திரம், ஒரிசா மாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்கின்றனர்.மற்ற மாநில எள்ளைக் காட்டிலும் தமிழ்நாட்டு எள் தரம் நன்றாக இருப்பதால், மற்ற மாநிலத்திலிருந்து வாங்கப்படும் எள்ளோடு கலந்து எண்ணெய் எடுக்கின்றனர். 
 
புதுமை திட்டம்:
 
                எள் பயிரிடும் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண்மைப் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் சிவகிரி சந்தையில் 15 வருட சந்தைத் தகவல்களை ஆராய்ந்தது. நல்லெண்ணெய்க்கான சீரான தேவை, மற்ற மாநிலங்களில் உள்ள எள் பயிர்களின் நிலைமை, அவற்றின் மூலம் பெறப்படும் தொடர் வரத்து மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின்படி வரும் மாதங்களில் சிவப்பு எள்ளின் விலை தமிழ்நாட்டில் கிலோ ரூ.41 முதல் ரூ.43 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விலை ஏற வாய்ப்புள்ளது. இருப்பினும் எள் சேமிப்பு முறையாக செய்யவிட்டால் எள்ளின் தரம் குறைந்து விடும்.எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை மேற்கூறிய விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எந்தப் பிடித்தமும் இல்லாமல் விற்று பயனடையுமாறு கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more »

செவ்வாய், மே 11, 2010

பூத்துக்குலுங்கும் புதிய ரக 'எள்' சிறுபாக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் : 

             சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் புதிய ரக எள் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிறுபாக்கம் மற்றும் வேப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேப்பாக்கம், நல்லூர், பெரியநெசலூர், காட்டுமயிலூர், கழுதூர், அடரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரும்பு, மரவள்ளி அறுவடை செய்தனர். பின்னர் குறைவான நீரைக்கொண்டு புதிய ரக 'எள்' பயிரான திண்டிவனம் 4, திண்டிவனம் 2, வெள்ளை எள் ஆகியவற்றை பயிரிட்டனர். கடந்த ஆண்டு 80 கிலோ எள் மூட்டை ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது விவசாயிகள் விதைத் துள்ள 'எள்' பயிர் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். பூக்கள் பூத்துக் குலுங் கிய எள் பயிரால்   நல்ல விலை கிடைக்குமென விவசாயிகள் மகிழ்ச் சியில் உள்ளனர்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி: இணை இயக்குனர் வேண்டுகோள்

 கடலூர்: 

                 சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து பயனடைய விவசாயிகளை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                      தமிழகத்தில் 1.16 லட் சம் எக்டரிலும், கடலூர் மாவட்டத்தில் 5,000 எக்டர் பரப்பளவிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி தொழில் நுட்பங்கள் சரியாக கடைபிடிக்காததால் எள் பயிரின் சராசரி மகசூல் குறைவாக உள்ளது. எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங் களை தவறாமல் கடைபிடித்து, சாகுபடி செய்தால், எக்டர் ஒன்றுக்கு சராசரியாக 2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். எனவே பாசன வசதியுள்ள விவசாயிகள் சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய கேட்டுக் கொள்கிறேன். சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய டி.எம்.வி.3. 4, கோ 1, வி.ஆர்.ஐ.1 மற்றும் எஸ்விபிஆர். 1 ஆகிய ரகங்கள் ஏற்றவை. சித்திரைப்பட்ட எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடி தொழில் நுட்பங்களை தவறாமல் கடைபிடித்து மகசூல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


downlaod this page as pdf

Read more »

சனி, ஏப்ரல் 03, 2010

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற

 கடலூர்:

                  எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவித்து உள்ளது.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                        தமிழ்நாட்டில் 1.16 லட்சம் ஹெக்டேரிலும்,​​ கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேரிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது.​ எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொழில் நுட்பங்களைச் சரியாகக் கடைபிடிப்பது இல்லை.​ இதனால் சராசரி மகசூல் குறைகிறது.​ சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால்,​​ ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.​ ​பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம்.​ சித்திரைப் பட்டத்துக்கு டிஎம்வி-3,4 கோ-1,​ விஆர்ஐ-1 மற்றும் எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் ஏற்றவை.​ அனைத்து ரகங்களும் ஒரு ஏக்கர் விதைப்புக்கு 2 கிலோ விதை போதும்.​ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும். விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசியம்.​ ஒரு கிலோ விதையுடன் டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாணத்தை 4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.​ விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.​ இதை 30 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம்.​ ​

                         பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்க நுண்ணுயிர் நேர்த்தி செய்யவேண்டும்.​ இதற்கு ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரிலம் ஒரு பாக்கெட் ​(200 கிராம்)​ பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை 500 மில்லி ஆடைநீக்கிய ஆறிய கஞ்சியுடன் கலந்து 2 கிலோ விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.​ இதை நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.​ இதை விதைப்பதற்கு 30 நிமிடம் முன் செய்ய ​ வேண்டும்.​ மேலும் 20 கிலோ தொழு உரத்துடன் ஏக்கருக்கு 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 4 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் கலந்து கடைசி உழவின்போது தூவ வேண்டும். இறவை எள் பயிருக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும்.​ அல்லது துறை சிபாரிசுப்படி,​​ ஒரு ஏக்கருக்கு 14:9:9 கிலோ என்ற விகிதத்தில் தழை,​​ மணி,​​ சாம்பல் சத்துக்களை தரவல்ல யூரியா 30 கிலோ,​​ சூப்பர் பாஸ்பேட் 55 கிலோ,​​ பொட்டாஷ் 15 கிலோ அளவில் உரமிட வேண்டும்.​ அúஸôஸ்பைரிலம் 4 பாக்கெட் கலந்தால் யூரியா 27 கிலோ போதும்.​ மாங்கனீஸ் சல்பேட் நுண்ணூட்டச்சத்து 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தபின் வயலில் தூவவேண்டும்.​ ​எள் பயிரில் பயிர் கலைத்தல் செய்யாவிட்டால் மகசூல் பாதிக்கும்.​ பயிர் கலைப்பு செய்திட விதைத்த 15-வது நாளில் செடிக்குச் செடி 15 செ.மீ.​ இடைவெளி இருக்கும்படியும்,​​ 30-வது நாளில் செடிக்குச் செடி 30 செ.மீ.​ இடைவெளி உள்ளவாறும் வைத்து,​​ மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும்.​ செடிகளைக் கலைத்து விடும்போது வயலில் போதிய அளவு ஈரம் இருப்பது நல்லது.​ சித்திரைப் பட்டத்தில் மேற்படி சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior