உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஐ.ஐ.எம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.ஐ.எம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 31, 2010

மேலாண்மை தேர்வில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு விழா

ஸ்ரீமுஷ்ணம் : 

             மேலாண்மை தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவரது மகன் சதன்பாபு கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் அகில இந்திய அளவில் நடந்த மேலாண்மை தேர்வில் முதலிடம் பெற்று தங் கப்பதக்கம் பெற்றார்.

                  இதனை பாராட்டி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு உதவி மின் பொறியாளர் சடகோபன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியா ளர் கண்ணகி முன் னிலை வகித்தார். கிராமப்புற உதவி மின்பொறியாளர் ரமணன் வரவேற்றார். சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் பாராட்டி பேசினார். விழாவில் சதன்பாபு பெற்றோர்கள் கவுரவிக் கப்பட்டனர். முடிவில் பாளையங்கோட்டை துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் ரவி நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

ஐ.ஐ.எம்., தேர்வில் மாணவர் சாதனை

கடலூர் : 

               ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வில் கடலூர் மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மேலாண்மை கழகம் நடத்திய நுழைத் தேர்வு 2009 இன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 2.10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் கடலூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை இந்தியன் பாங்கிலும், தாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.  ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் படித்த இந்த மாணவரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior