உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கங்கைகொண்டான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கைகொண்டான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 18, 2011

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் பரிதவிக்கும் மக்கள்

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் 

பரிதவிக்கும் மக்கள்


பின் குறிப்பு :

"உழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தால் மின்சாரம் கூட கிடைக்காது "






 

Read more »

செவ்வாய், மே 04, 2010

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்.பி.,யிடம் மனு

 கடலூர்: 

               காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி வருவதால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். நெய்வேலி கங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த என்.எல்.சி., கான்ட்ராக்டர் ஜெய்சங்கர். இவரது மகள் இந்துமதி (24). இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இரண்டாவது சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இந்துமதியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியதால் அவர் தனது தந்தையிடம் சுரேஷை காதலிப்பதாக தெரிவித்ததால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்துமதி, சுரேஷுடன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 30 ம் தேதி மங்களம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அறிந்த இந்துமதியின் பெற்றோர் அவர்களது சொந்த பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். இந்திமதி மற்றும் சுரேஷ் நேற்று கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் 'எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்துள்ளனர். தங்களுக்குள்ள செல்வாக்கை பயன் படுத்தி எங்களை பிரித்து விடுவார்கள். மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior