உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் உழவர் சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் உழவர் சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 09, 2011

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம்

கடலூர்:

            முதல்வர் கருணாநிதியின் திட்டங்களுக்காக தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு கேட்டுக் கொண்டார்.

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை அருகே நடிகை குஷ்பு பேசியது:

             முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளில் மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விவசாயிகளின் கடன்கள் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார்.அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் பயன் அடைந்தனர். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். அதை மீண்டும் கொண்டு வந்தவர் கருணாநிதி.

             கடலூர் மாவட்டத்தில் மட்டும் பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடைந்து உள்ளன. பிரசவ காலத்தில் பெண்களுக்கு நிதிஉதவி அளிக்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் இத்திட்டங்களால் நன்மை அடைந்து உள்ளனர். 

             கருணாநிதியின் திட்டங்களுக்காக கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்திக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் யாரும் சாதனையை சொல்லி வாக்குக் கேட்க முடியாது என்றார் குஷ்பு.

Read more »

புதன், நவம்பர் 10, 2010

கடலூரில் வாழைத்தார் விலை வீழ்ச்சி : ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு

கடலூர்:

                     கடலூர் பகுதியில் சூறைக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 

                    கடலூர் கேப்பர் மலை அடுத்த வழிசோதனைப்பாளையம், கண்ணாரப்பேட்டை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், எம்.புதூர், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கொடுக் கன்பாளையம், காட்டுப்பாளையம், கீரப்பாளையம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத் தில் மணிலாவுடன் சேர்த்து  ஒரு போக வாழையும், ஜூலை மாதத்தில் ஒரு போகமாகவும் 10 முதல் 12 மாத பயிரான வாழை இரு போகமாக பயிர் செய்யப்படுகிறது. கடந்த நவம்பரில் பயிர் செய்யப்பட்ட வாழை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஜூலையில் பயிர் செய் யப்பட்ட வாழை 6 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ளது.

                        இந்நிலையில் வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் காரணமாக கடந்த 7ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது. இதில் அறுவடை பருவத்தில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் சாய்ந் தன. மேலும் ஜூலையில் பயிர் செய்யப்பட்ட வாழைகளும் அதிகளவில் சாயந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் வரை சாய்ந்துள்ளன. 

                  அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழைத் தாரை குறைவான விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்யமுன் வந்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் நேற்று வாழைத்தார் வெறும் 25 முதல் 50 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தாரின் விலை குறைவு குறித்து விவசாயிகள் கூறுகையில், 

                    "ஏக்கருக்கு 1,000 முதல் 1,100 வரை வாழைக் கன்றுகள் நடவு செய்யப்படும். ஆள் கூலி, கழி, உரம், களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போது ஓரளவிற்கு அறுவடை முடிந்துள்ள நிலையில் சூறைக் காற்று வீசியதால் ஏக்கருக்கு 200 முதல் 300 வாழை மரங்கள் சாய்துள்ளன.

                   அறுவடைக்குத் தயாரான வாழைகள் சாய்ந்ததால் முற்றிய, முற்றாததார் என அனைத்து தார்களையும் அறுவடை செய்து விற் பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முற்றாத வாழைத்தாரை வியாபாரிகள் வெறும் 25 முதல் 50 ரூபாய்க்கு கொள் முதல் செய்கின்றனர். தீபாவளிக்கு முன்பு தார் 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட் டது. தார் ஒன்றுக்கு 70 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது' என தெரிவித்தனர்.

ரோஜா செடிகளும் சேதம் : 

                      ராமாபுரம், எஸ்.புதூர் உட்பட பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள ரோஸ், காக்கட் டான், கனகாம்பரம் உள்ளிட்ட பூச்செடிகளும் சாய்ந்து பூக்களின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மா, பலா, முந்திரி, தேக்க மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர்களும் காற்றில் சாய்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூர் : 

                      சாலை விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி கடலூர் நகர அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     சாலை விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களின் உரிமம் விசாரணையின்றி ரத்து செய்யப்படும் என்ற கலெக்டர் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். சுங்கவரி கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து படிவங்களையும் தமிழில் வழங்க வேண்டும். இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                     ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையா சிறப்புரையாற்றினார். அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், வள்ளலார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சண்முகம், நடராஜன், கடலூர் முதுநகர் வேன் ஓட்டுனர் சங்கம் சுரேஷ், தமிழ்வாணன், பாட்டாளி தொழிற்சங்கம் ராமமூர்த்தி, சுற்றுலா வேன் ஓட்டுனர் சங்கம் சேகர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

சனி, மார்ச் 06, 2010

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மறியல் கம்யூ., கட்சியினர் 1729 கைதாகி விடுதலை

கடலூர் : 

                      அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய மற்றும் மா.கம்யூ.,கட்சியினர் 453 பெண்கள் உட்பட 1729 பேரை போலீசார் கைது செய்தனர்.

                            கடலூர் உழவர் சந்தை அருகில் சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் கருப்பையா, ஆளவந்தார், குமார், தட்சிணாமூர்த்தி, பாபு, சாவித்திரி உள்ளிட்ட 94 பேரும், 

                             அண்ணா பாலம் அருகில்  ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் சேகர் தலைமையில் மாரியப்பன், சம்பந்தம், குளோப், பண்டரிநாதன் உள்ளிட்ட 150 பேர் மறியல் செய்தனர். 

                     விருத்தாசலத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் உள்ளிட்ட 75 பேர் கடை வீதியிலும், சி.ஐ.டி.யூ.,வினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் 135 பேர் பஸ் நிலையம் முன்பு மறியல் செய்தனர். 

                      கார்குடல் கிராமத்தில் ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் 34 பேரும், 

                      கம்மாபுரத்தில் சி.ஐ.டி.யூ., பரமசிவம் தலைமையில் 35 பேரும் மறியல் செய்தனர். 

                      சிதம்பரத்தில் மா.கம்யூ., மூசா தலைமயில் 91 பேரும், 

                      புவனகிரியில் ஏ.ஐ.டி.யூ.சி., வீரப்பன் தலைமையில் 83 பேரும், 

                      பரங்கிப் பேட்டையில் வல்லரசு தலைமையில் 20 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                    திட்டக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., பரமசிவம், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட 26 பேரும், 

                        ராமநத்தம் மின் வாரிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணை செயலாளர் மாயவன் உள்ளிட்ட 28 பேர் மறியல் செய்தனர். 

                        பெண்ணாடம் தபால் நிலையம் முன் மாவட்டக்குழு நாராயணசாமி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் ரங்கசாமி உள்ளிட்ட 10 பேரும், 
     
                            வேப்பூரில் அருள்மணி, சுப்ரமணியன் உள் ளிட்ட 15 பேர் மறியல் செய்தனர்.
                             பண்ருட்டி தபால் நிலையம் முன் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொருளாளர் பழனிவேல் தலைமையில் 37 பெண்கள் உட்பட 176 பேரும், 

                           திருவதிகை தபால் நிலையம் முன் குணசேகரன் தலைமையில் 4 பெண்கள் உட்பட 44 பேரும், 

                           தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பெண்கள் உள்பட 56 பேரும், 

                            காடாம்புலியூரில் சரவணன் தலைமையில்  17 பெண்கள் உள்பட 68 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                             மங்களம்பேட்டை    கலிபெருமாள் தலைமையில் 27 பேரும்,
                           
                        மந்தாரக்குப்பத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாநில குழு உறுப்பினர் முத்துவேல் தலைமையில் 186 பேரும், 

                            வடலூரில் மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம்  தலைமையில் 59 பேரும் மறியலில் ஈடுபட்டனர். 

                             சேத்தியாத்தோப்பில்    ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் மகாலிங் கம் சார்பில் 36 பேரும்,
                                  
                            எறும்பூரில் வட்டக்குழு குமார் தலைமையில் 21 பேரும்,

                       ஒரத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கம் அன்பழகன் தலைமையில் 32 பேரும், 

                        ஸ்ரீமுஷ் ணத்தில் கலியமூர்த்தி தலைமையில் 43 பேரும், 

                       சோழதரத்தில் வட்ட செயலளர் ராஜீ தலைமையில் 36 பேரும், 

                        பழஞ்சநல்லூரியில் ராமலிங்கம் தலைமையில் 24 பேரும், 

                      காட்டுமன்னார்கோவிலில் சி.ஐ.டி.யூ., சார்பில் இளைபெருமாள் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர். 


            மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர் களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior