உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் சட்டசபை தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் சட்டசபை தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 07, 2011

கடலூர் சட்ட மன்றத் தொகுதி - எம்.எல்.ஏ.அய்யப்பன் சாதனைகள்



கடலூர் :

              கடலூர் சட்டசபை தொகுதி கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கில் பண்ருட்டி, தெற்கில் குறிஞ்சிப்பாடி தொகுதிகளையும், வடக்கில் புதுச்சேரி மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது .

              மாவட்டத்தின் தலைநகரம் என்ற பெருமையை கொண்ட இத்தொகுதியில் விவசாயம், நெசவு, கட்டுமான தொழில் மற்றும் மீனவர்கள் நிறைந்துள்ளனர். கடந்த 2006 தேர்தலில் கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஒன்றிய பகுதிகள் முழுமையாக இருந்தன. தொகுதியில் மொத்தம் 1,96,095 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தேர்தலில் பதிவான 1,40,286 ஓட்டுகளில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் 67,003 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக அ.தி.மு.க., குமார் 60,737 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 6,266 ஆகும். தே.மு.தி.க., ஜெயக்குமார் 7,866 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார்.

             தொகுதி மறு சீரமைப்பில் நகராட்சி பகுதி முழுவதும், ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் மட்டுமே தற்போது இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 20 ஊராட்சிகள் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது தொகுதியில் 88,650 ஆண்கள், 88,716 பெண்கள் என மொத்தம் 1,77,360 வாக்காளர்கள் உள்ளனர். மறுசீரமைப்பில் கடந்த தேர்தலை விட 43 ஆயிரத்து 547 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். 

கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேட்டி:

               கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தியதன் மூலம் 13 ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கியுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகம், தூக்கணாம்பாக்கம், ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம், போலீஸ் குடியிருப்பு, மகளிர் ஐ.டி.ஐ., கட்டடம், புதிய வகுப்பறைகள், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பத்திரப் பதிவு அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. குண்டு உப்பலவாடி - தாழங்குடா உப்பனாற்றில் 5 கோடியிலும், நாணமேடு - சுபாஉப்பலவாடியில் 3 கோடி ரூபாய் செலவிலும், ராசாப்பாளையம் - நல்லாத்தூர் மலட்டாற்றில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டியுள்ளேன்.
                  
              கடலூர் நகரில் பீச் ரோடு, ஜவான்ஸ் பவன் ரோடு, குண்டுசாலை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 17 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால்கள் வசதியுடன் சாலை அமைத்துள்ளேன். பல ஆண்டுகளாக ஒற்றையடிப் பாதையாக இருந்த பள்ளிநேலியனூர், சேலியமேடு - குமாரமங்களம், ரெட்டிச்சாவடி - குமாரமங்களம் கிராம சாலைகளை விரிவுப்படுத்தி தரமான சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன். 

               கடற்கரையில் 3 கோடி செலவில் கருங்கல் கொட்டி கடலரிப்பை தடுத்துள்ளேன். கடலூர் நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி என கடந்த தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறினார்.


இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க., குமார் கூறியது: 

             மாவட்ட தலைநகரமான கடலூர் சட்டசபை தொகுதி, இந்த ஆட்சியில் மிகவும் பின் தங்கிவிட்டது. தேர்தலில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வான அய்யப்பன் சொன்னபடி எதையும் செய்யவில்லை. பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வந்து நான்கு ஆண்டாகியும் இதுவரை முடிந்தபாடில்லை. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமானதோடு புழுதிப் புயலால் மக்கள் அவதிப்பட்டுவதுடன் மின் வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

                 ஐந்து ஆண்டில் கடலூர் தொகுதிக்கென சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திட்டத்தை கொண்டு வரவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கவர்னர் உரையில் அறிவித்துள்ளனர். இதனை நம்பி மீண்டும் ஏமாற மக்கள் தயாரில்லை. இவ்வாறு குமார் கூறினார்.

மறுசீரமைப்பில் உருவான கடலூர் சட்டசபை தொகுதி

கடலூர் நகராட்சி - 45 வார்டுகள், கடலூர் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

1. அழகிய நத்தம்
2. செல்லஞ்சேரி
3. நல்லாத்தூர்
4. கீழ்அழிஞ்சிப்பட்டு
5. மேல் அழிஞ்சிப்பட்டு
6. கிளிஞ்சிக்குப்பம்
7.கீழ் குமாரமங்கலம்
8. மதலப்பட்டு
9. எம்.பி., அகரம்
10. கரைமேடு
11. காரணப்பட்டு
12. பள்ளிப்பட்டு
13. புதுக்கடை
14. சிங்கிரிகுடி
15. தென்னம்பாக்கம்
16. தூக்கணாம்பாக்கம்
17. திருப்பணாம்பாக்கம்
18. உள்ளேரிப்பட்டு
19. பெரியகங்கணாங்குப்பம்
20. நாணமேடு
21. உச்சிமேடு
22. குண்டு உப்பலவாடி
23. கோண்டூர்
24. நத்தப்பட்டு
25. தோட்டப்பட்டு
26. மருதாடு
27. வரக்கால்பட்டு
28. வெள்ளப்பாக்கம்
29. காராமணிக்குப்பம்
30. பாதிரிக்குப்பம்
31. கடலூர் நான் முனிசிபல்

Read more »

செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூரில் புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகள்: எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி வைத்தார்

கடலூர் : 

            புதிய வழித் தடங்களில் செல்லும் இரண்டு பஸ்களை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். 

              கடலூர் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவும், கடலூரிலிருந்து புதுச்சேரி பகுதியில் உள்ள கடலூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடலூர் அரசு போக்குவரத்துக் கழகம் தடம் எண். 40 ஏ பஸ் நாள் ஒன்றுக்கு நான்கு முறை கடலூரிலிருந்து கன்னியக் கோவில் வழியாக நல்லாவாடுக்கும், தடம் எண். 40 பி புதுச்சேரி பகுதியில் உள்ள தமிழக கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடலூரிலிருந்து திருவந்திபுரம், பில்லாலி, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், வில்லியனூர் வழியாக பெரம்பைக்கு ஒரு பஸ்சையும் நேற்று முதல் இயக்கியது.

              தூக்கணாம்பாக்கத்தில் நடந்த துவக்க விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மீனாட்சி ஜெயமூர்த்தி, கவுன்சிலர் கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் முருகானந்தம், கிளை மேலாளர்கள் கணபதி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

4 ஆண்டுகளில் குடிசை வீடுகளே இருக்காது

கடலூர்:

                    மக்கள் நலத்திட்டங்களால் சாதனை படைப்பவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தெரிவித்தார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

நலத்திட்ட உதவிகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது: 

                     5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மக்களுக்கு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மனைப்பட்டா, இலவச நிலப்பட்டா, திருமண உதவித் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். தற்போது உருவாக்கி இருக்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலை 4 ஆண்டுகளில் உருவாகும். நிகழ்ச்சியில் 69 பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில், தலா ரூ.20 ஆயிரம் வழங்கினார். சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள, எழுதும் வசதி கொண்ட நாற்காலிகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், நகராட்சி உறுப்பினர் நவநீதம் சாமுவேல் உள்ளிடோர் பேசினர்.

Read more »

சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., வேட்புமனு தாக்கல்


கடலூர் : 

                     கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் 500 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது.  இதற்கான மனு தாக்கல் கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.  500 பேர் மனு தாக்கல் செய்தனர்.  மனுக்களை தொகுதி பொறுப்பாளரும் தேர்தல் அதிகாரியுமான ரவி பெற்றார். எம்.பி.,  செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  தண்டபாணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இன்றும், நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.  

                           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கான இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் நடந்தது. சிதம்பரம் தொகுதிக்கு 927 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி ரமேஷ் பெற்றார்.  காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கு 700 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி கிரிஜா பெற்றுக்கொண்டார்.  மனுக்கள் இன்று (6ம் தேதி) பரிசீலிக்கப்படுகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior