உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் முதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் முதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 22, 2012

முதுநகர் : கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள்

கடலூர் முதுநகர் :


கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் நின்று செல்கிறது. கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (22ம் தேதி) முதல் 6 மாத காலத்திற்கு பரிச் சார்த்தமாக கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது. சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16175) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 3 மணிக்கு நின்று 3.01 மணிக்கு புறப்படும். காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16176) இரவு 12.41 மணிக்கு நின்று 12.42 மணிக்கு புறப்படும். வாரம் இரு முறை இயக்கப்படும் திருப்பதி- மதுரை எக்ஸ்பிரஸ் (16779) இரவு 8.52 மணிக்கு நின்று 8.53 மணிக்கு புறப்படும். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16780) இரவு 1.26 மணிக்கு நின்று 1.27 மணிக்கு புறப்படும்.
.

Read more »

சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில்  கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

         இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில்  இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும். 

              இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் படகுக்கு தீவைப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/0a15611f-7015-431d-ae1b-1392638d4282_S_secvpf.gif
 
கடலூர்:
 
 
         கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணி என்ற மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வான்குருதி என்பவர் உள்பட 8 பேர் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  
 
         இந்த நிலையில் வான்குருதியின் அண்ணன் மணி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது படகை தேடினார். கடலூர் முதுநகர் குட்டியாண்டவர் கோவில் பகுதியில் அந்த படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி வலைகள் எரிந்து கிடந்தன. மர்ம கும்பல் அந்த படகை கடத்தி சென்று தீ வைத்தது தெரியவந்தது. படகின் சேத மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீரமணி கொலை தொடர்பான மணியின் படகுக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடக்கிறது. படகுக்கு தீவைத்து எரித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மீனவர் படகு தீ வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூரில் பழுதடைந்த சாலைகளால் மக்கள் சிரமம்: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு மழையில் நனைகிறது


கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையின் பரிதாப நிலை. (வலது படம்) தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்
கடலூர்:

          கடலூரில் பழுதடைந்துள்ள சாலைகளால், மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு, 4-வது ஆண்டாக வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது கடலூர் நகரம். நகரின் மையப் பகுதியில் செல்லும் 12 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. 

                இதனால் கடலூர் நகர மக்களும் கடலூர் வழியாக செல்லும் பயணிகளும் படாத பாடுபட்டு வருகின்றனர். முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தாற்காலிகமாகக் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதால், இச்சாலையைப் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பலர் கீழேவிழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. புதுப்பாளையம் பிரதானச்சாலை, வண்டிப்பாளையம் சாலை, பஸ்நிலையச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சிதைந்து கிடக்கும் நிலையில், 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மட்டுமாவது, 3 நாள்களுக்குள் சீரமைக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

              ஆனால் அதன்படி, சாலை சீரமைப்புப் பணி வேகமாக நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சாலை சீரமைக்கப்படுகிறது. பிரதானச் சாலைகள் பலவும் பழுதடைந்துள்ளதால், அவற்றை பயன்படுத்தும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து உள்ளது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வழக்கத்தைவிட 30 நிமிடம் முன்னதாகவே வீடுகளில் இருந்து புறப்பட்டாக வேண்டிய நிலை உள்ளது. 

           மேலும், கடலூர் நகரின் பிரதான அங்காடியான, 400-க்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த திருப்பாப்புலியூர் பான்பரி மார்கெட்டுக்குள், பொதுமக்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு, சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. ஆக்கிரமிப்பு, அசுத்தத்தின் உச்சத்தில் காணப்படும் இந்த மார்க்கெட்டின் நிலை, மழைக்காலத்தில் மக்களை பெரிதும் பரிதவிக்க வைக்கிறது. அடிப்படை வசதியில் கடலூர் நகர மக்களின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரே இடம் பான்பரி மார்க்கெட் தான். இதை சீர்படுத்த யார் துணிவுடன் முன்வருவார்களோ அவர்கள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும், ஊதியம் பெறத் தகுதியுள்ள அலுவலர்களாகவும் இருக்க முடியும் என்பதே சிதம்பரம் நகர் மக்களின் கருத்தாக உள்ளது. 












Read more »

வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1ee4a85d-bc68-4108-9bd5-fd1167de57dc_S_secvpf.gif
 
கடலூர்:

          கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

             அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரமகுருவுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் பரமகுரு அனுமதிக்கப்பட்டார். டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரமகுரு இறந்து போனார். பரமகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக கருதி ஆத்திரம் அடைந்த பரமகுருவின் உறவினர்கள் நோயாளிகள் பரிசோதனை அறை மற்றும் மருந்து-மாத்திரை வழங்கப்படும் அறை ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

              மேலும் டாக்டர் அறையில் இருந்த மேஜை-நாற்காலிகளை தூக்கி வீசி சூறையாடினார்கள். மேலும் டாக்டர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பிடுங்கி வீசினர்.   இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.  இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. வன்முறை கும்பல் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை கைகளால் உடைத்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது.  

              இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.    மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் ட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/22c11abe-c80b-4827-be86-be822a8e8e35_S_secvpf.gif
 
கடலூர்:
 
              கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியது:-
 
              நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டில் 3445 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால் கடந்த 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை விட்டு சென்றபோது கஜானாவில் இருப்பு வைத்து சென்றார். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கஜானா முழுவதும் காலி செய்ததோடு கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பட்ஜெட்டில் நாட்டின் முதுகெலும்பான விவசாய நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் உலக அரங்கில் பேசக்கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தால் மாணவர் வேலைவாய்ப்பு, பொது அறிவு தெரிவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய திட்டமாகும்.
 
                 அடுத்த கட்டமாக இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்துக்காக ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். அதேபோல் பள்ளி குழந்தைகள் முதல் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக தொலை நோக்கு பார்வையோடு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 1/2 பவுன் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிகுழுவுக்கு ரூ.25 லட்சம் சுழல் நிதி, திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி திட்டம் என எண்ணற்ற திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தந்துள்ளார்.
 
           நடப்பு நிதியாண்டில் ரூ.36 கோடி செலவில் 12 ஆயிரம் பேருக்கு கரவை மாடுகளும், ரூ.134 கோடியில் ஒரு லட்சம் குடும்பத்துக்கு 4 ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 30 சதவீத ஆதிதிராவிடர் மக்கள் பயனடைவார்கள். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க சோலார் எனர்ஜி என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பல திட்டங்களுடன் தலை சிறந்த பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.
 
                 அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வரை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கே சொந்தம் என்ற சபதத்தோடு வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior