உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் வாக்காளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் வாக்காளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 11, 2014

கடலூர் மாவட்டத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு




கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 18,59,749 வாக்களர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெள்ளிக்கிழமை (10.01.2014) வெளியிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 2014-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1-10-2013-ல் வெளியிடப்பட்டது. 
 தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தொடர்ச்சியாகத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 31-10-2013 வரை 95,443 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை அடிப்படையில் 87,961 மனுக்கள் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தொகுதி வாரியாக: 

திட்டக்குடி (தனி): 

மொத்தம் 1,94,916.
ஆண்கள் 97,844.
பெண்கள் 97,072.

விருத்தாசலம்: 

மொத்தம் 2,16,320.
ஆண்கள் 1,09,997.
பெண்கள் 1,06,319.

நெய்வேலி: 

மொத்தம் 1,87,180.
ஆண்கள் 95,300.
பெண்கள் 9,1872.

பண்ருட்டி: 

மொத்தம் 2,12,752.
ஆண்கள் 1,05,769.
பெண்கள் 1,06,976.

கடலூர்: 

மொத்தம் 2,09,828.
ஆண்கள் 1,03,212.
பெண்கள் 1,06,598.

குறிஞ்சிப்பாடி: 

மொத்தம் 2,05,957.
ஆண்கள் 1,04,053.
பெண்கள் 1,01,903.

புவனகிரி: 

மொத்தம் 2,23,739.
ஆண்கள் 1,13,529.
பெண்கள் 1,10,250.

சிதம்பரம்: 

மொத்தம் 2,12,138.
ஆண்கள் 1,06,044.
பெண்கள் 1,06,093.

காட்டுமன்னார்கோயில் (தனி): 

மொத்தம் 1,96,879 .
ஆண்கள் 1,05,257,
பெண்கள் 95,619.

மாவட்ட 

மொத்த வாக்காளர்கள் 16,76,117.
ஆண்கள் 8,52,305.
பெண்கள் 8,23,812.

 மேற்காணும் வாக்காளர் பட்டியல், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்கள் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். 86,759 இளம் வாக்காளர்கள்: கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 17,72,990 பேர் இருந்தனர். இப்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18,59,749 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி 86,759 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் 99 சதவீதம் இளம் வாக்காளர்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர்களான திருநங்கைகள்: 

அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருநங்கைகள் 6 பேர் மட்டுமே இருந்தனர்.


இறுதி வாக்காளர் பட்டியலில் 42 திருநங்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாத காலத்தில் 36 திருநங்கைகள் வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர்.

Read more »

வியாழன், செப்டம்பர் 22, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

            உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் திங்கட்கிழமை வெளியிட்டார்.

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் பெற்றுக் கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சினேகலதா, கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அமுதவல்லி கூறியது:

          நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அருகில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவட்டத்தில்

8,21,685 ஆண்கள்,
7,93,791 பெண்கள்

மொத்தம் 16,15,476

வாக்காளர்கள் உள்ளனர்.

           அதில்

ஐந்து நகராட்சிகளில்

1,31,524 ஆண் வாக்காளர்களும்,
1,32,851 பெண் வாக்காளர்களும்

மொத்தம் 2,64,375 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்,

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சிதம்பரம் ஆகிய நகராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். 

விருத்தாசலம் நகராட்சியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 16 பேரூட்சிகளில்

91,881 ஆண்கள்,
88,094 பெண்கள்
மொத்தம் 1,79,975 வாக்காளர்களும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில்

5,98,280 ஆண்கள்,
5,72,846 பெண்கள்
மொத்தம் 11,71,126

வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மட்டும் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

            உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக ஐந்து நகராட்சிகளில்

329 ஓட்டுச்சாவடிகளும், 1

6 பேரூராட்சி பகுதிகளில் 276 ஓட்டுச்சாவடிகளும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில் 2,772 ஓட்டுச்சாவடிகள்

மொத்தம் 3,377 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.










Read more »

வெள்ளி, மார்ச் 18, 2011

தேர்தல்: கடலூர் வாக்காளர்கள் கருத்து

 கடலூர்:

              தமிழகத்தில் விலைவாசி பெருமளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கடலூர் வாக்காளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

                13 முறை பெட்ரோல் விலை உயர்வு, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடு புகார், எங்கும் நிறைந்து காணப்படும் லஞ்சம், ஊழல், பகட்டான விழாக்கள், அமைச்சர்கள் செல்லும் இடமெங்கும் கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்ணைப் பறிக்கும் டிஜிட்டல் பேனர்கள், 50 பக்கம் 100 பக்கம் என்று செய்தித் தாள்களில் விளம்பரங்கள், அனைத்து திட்டங்களிலும் கமிஷன்கள் என அடுக்கடுக்கான புகார்களுக்கு மத்தியில், 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டு திட்டம், கான்கிரீட் வீடு, ரூ.1-க்கு அரிசி உள்ளவற்றை காண்பித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளும் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது.  

                கடந்த 5 ஆண்டுகளில் இந்த அரசின் சாதனைதான் என்ன? அவை ஏற்படுத்திய பாதிப்புகளால், சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள் 

கடலூரை அடுத்த கிராமங்களைச் சேர்ந்த நமது சாதாரண பொதுஜனங்கள்:  

குண்டு உப்பளவாடியில் பெட்டிக் கடை வைத்து இருக்கும் ராமலிங்கம் மனைவி கௌரி:

         வருமானம் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கிறது. எப் பொருளும் வாங்க முடியவில்லை. எனவே ஆட்சி மாற வேண்டும். ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.  

கண்டக்காடு மலர் விவசாயம் செய்யும் குறு விவசாயி சண்முகம்: 

                 சுனாமியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் 7 ஆழ்குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள், இதனால் சுமார் 100 ஏக்கரில் விவசாயம் மீண்டும் நடக்கிறது. இங்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரேஷனில் அரிசி கிலோ ரூ.1 க்கு கிடைக்கிறது. இலவச டி.வி.பெட்டி, 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் சரி. ஆனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டதே. இலங்கையில் தமிழர்கள் சாகிறார்களே. காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. எனவே காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுபோட மாட்டோம். 

 சுப உப்பளவாடி விஜயலட்சுமி: 

               100 நாள் வேலைக்குச் சென்றாலும், ரேஷனில் ரூ. 1 க்கு அரிசி வாங்கினாலும், இலவச டி.வி. பெட்டி கொடுத்தாலும், பிள்ளைகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு என்ன செய்வது? கிடைக்கும் கூலி போதவில்லை. விலைவாசி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டதே. எனவே விலைவாசி குறைய ஆட்சி மாறவேண்டும். விலைவாசியை குறைக்கும் அரசு வரவேண்டும். 

 ஐ.டி.ஐ. படித்து முடித்து வேலைக்குக் காத்து இருக்கும் இளைஞர், தாழங்குடா சத்தியமூர்த்தி: 

             வேலைக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். வேலை கிடைக்கவில்லை எல்லோருக்கும் வேலை  கிடைக்க வேண்டும். அனைவருக்கும் வேலை கொடுக்கும் அரசாங்கம் வரவேண்டும். அரசு கொடுத்த டி.வி. பெட்டிகள் பல வெடித்து உடைந்து விட்டன. நிலம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் கொல்லப்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு, வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் மீது கடுமையான வெறுப்புதான் ஏற்படுகிறது. அவர்களுடன் கூட்டு வைத்து இருக்கும் தி.மு.க. அரசு மாறவேண்டும்.  

கடலூரில் சைக்கிளில் சுமந்து டீ விற்பனை செய்யும் குமார்: 

            தி.மு.க. அரசின் திட்டங்கள் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டதே. அதனால் உழைத்தும் வருமானம் போதவில்லை. எந்தப் பொருளும் வாங்க முடியவில்லை. அமைச்சர்கள் வந்தால் தெருவெல்லாம் டிஜிட்டல் பேனர்களும், பக்கம் பக்கமாக பத்திரிகை விளம்பரங்களும்தான் மிச்சம். அவற்றைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. அந்த செலவுத் தொகைகளை ஏழைகளுக்குக் கொடுக்கலாம். விளம்பரங்களால் மக்களுக்கு என்ன பயன்? ஆட்சி மாறும் என்றுதான் நினைக்கிறேன்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior