உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கண் தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண் தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 03, 2010

கண் மற்றும் உடல் தானம்

சிதம்பரம்:

                   சிதம்பரம் தெற்குவாணியத் தெருவைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தி மனைவி ஆர்.விசாலாட்சி (45) செவ்வாய்க்கிழமை இறந்தார். காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தினர் அவரது கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடலை தானமாகப் பெற்று மாணவர்கள் ஆராய்ச்சிக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்  ஒப்படைத்தனர்.

              இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், தன்னார்வ ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அரிமா சங்கம் சிதம்பரத்தை அடுத்த சென்னிநதத்தைச் சேர்ந்த வி.சின்னப்பிள்ளை (58) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Read more »

சனி, மே 08, 2010

மனவளர்ச்சி குன்றிய மாணவி கண்தானம்

சிதம்பரம்:

                சிதம்பரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பி.சரண்யா (18). ஜி.வி. சிறப்புப் பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய இம்மாணவி மஞ்சக்காமலை நோயால் புதன்கிழமை இறந்தார். மேலும் சீர்காழி பனங்காட்டுத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் (70) செவ்வாய்க்கிழமை காலமானார். இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எஸ்.செந்தில்வேலன், செயலாளர் ஜே.திருமால், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.

பொது அறிவிற்கு: 


தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை

Read more »

சனி, மார்ச் 06, 2010

3 பேர் கண்தானம்

சிதம்பரம்:

               சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஜி.ராஜினி ​(75),​ பூவாலையைச் சேர்ந்த டி.ஜெயலட்சுமி ​(98),​ சிதம்பரம் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த டி.சந்திரா ​(85) மூவரும் காலமானார்கள். இவர்களது 3 ஜோடி கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.​ இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின்,​​ தன்னார்வ ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

கண்கள் தானம்

சிதம்பரம் : 

              இரு மூதாட்டிகளின் கண்கள் தானமாக  பெறப்பட்டது. சிதம்பரம் காரைக் காட்டு வெள்ளாழ தெருவைச் சேர்ந்த இருசாயி அம்மாள்(80), ஜெயலட்சுமி(70) இருவரும் நேற்று இறந்தனர். இவர்களின் கண்களை சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார்,  உள்ளிட்டோர் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior