உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 03, 2012

கந்தசாமி நாயுடு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:


              கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
          கே.என்.சி. மகளிர் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர். அரசு உதவிப் பெறும் இக்கல்லுரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமும் செய்யவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசும் கண்டு கொள்ளவில்லை என மாணவியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கல்வி உதவித்தொகையை ஆண்டு தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். கல்லூரி ஆய்வுக்கூடத்துக்கு போதுமான உபகரணங்கள் வழங்க வேண்டும். விலையில்லா மடிக்கணினி ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்து மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.

           இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாணவர் சங்க நகரத் தலைவர் எம்.ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.அரசன், நகரச் செயலர் இளங்கோவன், துணைச் செயலர் எஸ்.மாணிக்கம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.அமர்நாத், கல்லூரித் தலைவர் கே.ஆர்த்தி, செயலர் எஸ்.செல்வபிரியா, துணைச் செயலர்கள் எம்.வினோதினி, ராஜலட்சுமி, புவனா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவியர்கள், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து மனு அளித்தனர். அரசு உதவிப் பெறும் கல்லூரியாக இருப்பதால் அடிப்படை வசதிகளை ஆராய்வதற்கு தனியே குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதியளித்தார்.



Read more »

சனி, செப்டம்பர் 15, 2012

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம்

கடலூர்:

           கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.

 கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன் கூறுகையில்,

            கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் கிராமங்களில் முகாமிட்டு சமூக சேவையாற்றி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கும் முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை, ஈ.சி.ஜி.,எக்கோ சோதனைகள் செய்யப்படும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில்அமைச்சர் சம்பத் முகாமை முடித்து வைக்கிறார் என்றார்.

 


Read more »

திங்கள், ஏப்ரல் 30, 2012

கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணி

கடலூர்:

 கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் எம்.சி.சம்பத், 604 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசியது:

"கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். மடிக்கணினி மூலம் உலக நிகழ்வுகளையும், பாடம் தொடர்பான விவரங்களையும் பெற முடியும். தமிழகத்தில் 3 கோடி மக்களுக்கு மேல் வாங்கும் சக்தி இல்லாதவர்களாக உள்ளனர். மடிக்கணினியை நன்மைக்குப் பயன்படுத்தி கல்வியில் முதன்மைப் பெற வேண்டும் என கூறினார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கணினி: 

      விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பிளஸ் 2 மாணவர்களுக்கு எப்போது கணினி வழங்கப்படும்? என கேட்டதற்கு, "ஹார்டுடிஸ்க் தைவானில் தயாரிக்கப்படுகிறது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஆகியுள்ளது. இவர்களின் மதிப்பெண் பட்டியலில் மடிக்கணினி வாங்க தகுதி உடையவர்கள் என அச்சிட்டுத் தரப்படும். இதைக் காண்பித்து பின்னர் மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜி.ஜே.குமார், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ப.மணிமேகலை பழனிசாமி, கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன், மாவட்டக் கவுன்சிலர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











Read more »

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்


கடலூர் : 

    என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.

     கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்து வருபவர் கோமதி, 45. 

இவர் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனு:

        கந்தசாமி நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மற்றும் கணிதத்துறையும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. கணிதத் துறையில் பேராசிரியராக இருக்கும் சாந்தியை பேராசிரியைகள் முல்லை, வரலாறு துறையைச் சேர்ந்த திருஞானம் ஆகியோர் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த 7ம் தேதி இவர்கள் மூவரும் சத்தம்போட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பாடம் நடத்துவதற்காக சில குறிப்புகள் தயாரிக்க கடினமாக இருக்கிறது. எனவே மெதுவாகப் பேசுங்கள் என கூறினேன். அதற்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

திங்கள், மார்ச் 19, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட கண்காணிப்பாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, காஞ்சனா, தேவதாஸ் பொன்னையா சிறப்புரையாற்றினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார். 










Read more »

வெள்ளி, மார்ச் 09, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் உலக மகளிர் தின விழா

கடலூர்:

       கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் கோமதி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகாசியை சேர்ந்த வணிக மேலாளர் சசிகலா " சிகரத்தை நோக்கி பெண்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

        விழாவில் கல்லூரி அனைத்துத் துறை மாணவிகள், பேராசிரியைகள் பங்கேற்றனர்.பிற்பகல் 2 மணிக்கு நடந்த நுகர்வோர் விழாவிற்கு நெய்வேலி நுகர்வோர் பாதுகாப்புச் சங்க தலைவர் முருகவேள், துணைத் தலைவர் செந்தில் பங்கேற்று பேசினர்.ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர் குழந்தை தெரசா பாத்திமா நன்றி கூறினார்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior