உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கந்தமங்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தமங்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 21, 2010

சிதம்பரத்தில் இருந்து கோவிலாம்பூண்டிக்கு இயக்கியபஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை

கிள்ளை:

              சிதம்பரத்தில் இருந்து பள்ளிப்படை வழியாக கோவிலாம்பூண்டிக்கு இயக்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்சில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் இருந்து கந்தமங்கலம் வழியாக கோவிலாம்பூண்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை.

                காலை 8.30, மதியம் 1.30 மற்றும் மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து சென்ற தடம் எண். 9 அரசு பஸ்சை கடந்த சில மாதங்களாக நிறுத்தி விட்டனர். இதனால் கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் மற்றும் பள்ளிப்படையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் இயக்கிய பஸ்சுடன் கூடுதலாக பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கோவிலாம்பூண்டி ஊராட்சி தலைவர் சிவசுப்ரமணியன், பள்ளிப் படை ஊராட்சி தலைவர் தனலட்சுமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் துரை ரத்தினவேல்  மற்றும் பொதுமக்கள் தனித்தனியே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

சனி, ஜூன் 12, 2010

சிதம்பரம் அருகே கோஷ்டி மோதல்: ஐந்து பேர் கைது

கிள்ளை : 

                 கந்தமங்கலத்தில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அடுத்த கந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல் (30). இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் செல்வம், தான் கட்டிய புதிய வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவது தொடர்பாக உறவினர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற ஜெயவேல், தன்னைப்பார்த்து ஏளனம் செய்வதாக கூறி தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் செல்வம், சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, தீபா, சுகந்தி, ரவிச்சந்திரன், கனகசபை ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்து ரவி, ரமேஷ், ஜெயவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை தேடிவருகின்றனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior