உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கம்மாபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்மாபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 28, 2011

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

              இதுகுறித்து கம்மாபுரம் கிளை ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஆறுமுகம் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் இலவச தொழில்திறன் பயிற்சி

கடலூர் : 

             இலவச தொழில்திறன் பயிற்சிக்கு இளைஞர்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

           மகளிர் திட்டத்தின் மூலம் 2011-2012ம் ஆண்டில் 2000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச தொழில்திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க அரசு ஏற்பாடு உள்ளது. இப்பயிற்சிக்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

               கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், கம்மாபுரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி ஆகிய ஒன்பது ஒன்றியங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

                 வெல்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக், "ஏசி' மெக்கானிக் ஆகிய பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், டி.டீ.பி, சுகாதார உதவியாளர் (பெண்கள்), லேப் டெக்னிஷியன் ஆகிய பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வளையமாதேவி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

                    தகுதி வாய்ந்த இளைஞர்கள், பெண்கள் தங்களின் பெயர், முழு முகவரி, மொபைல் எண், கல்வித் தகுதி, ஆண்டு வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன் பயிற்சி பெற விரும்பும் தொழிலை குறிப்பிட்டு தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)க்கு வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





Read more »

செவ்வாய், மே 24, 2011

குடிநீருக்கு 4 மாதங்களாக போராடும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியரிடம் முறையீடு


குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் வீணங்கேணி கிராமத்தினர்.
 
கடலூர்:

           ஆழ்குழாய்க் கிணறு பழுதடைந்ததால் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வீணங்கேணி கிராம மக்கள் கடந்த 4 மாதங்களாக குடிநீருக்காக போராடி வருகின்றனர். 

               வீணங்கேணி கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூரில் குடிநீருக்காக போடப்பட்டிருந்த ஆழ்குழாய்க் கிணறு, என்.எல்.சி. சுரங்கங்களுக்கு வைக்கப்பட்ட வெடிகளால் அதிர்வடைந்து சேதமடைந்து விட்டது.  இதனால் குடிநீர் வசதி இல்லாத வீணங்கேணி மக்கள், கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள்.  இதுகுறித்து கிராம மக்கள் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தபோது, புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் முடிந்த பிறகுதான் பணி தொடங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.  

           இடைப்பட்ட காலத்தில் என்.எல்.சி. நிறுவனம் மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் லாரிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.  இப்பிரச்னை தொடர்பாக வீணங்கேணி கிராமத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆர்.ராமசாமி, சீனிவாசன் தலைமையில் கிராம மக்கள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.  

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், 

              விரைவில் ஆழ்குழாய் கிணறு தோண்ட உத்தரவிட்டு இருப்பதாகவும், அதுவரை லாரிகளில் குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


Read more »

சனி, நவம்பர் 20, 2010

நெய்வேலியில் குடிநீருக்கு பரிதவிக்கும் மேற்கிருப்பு கிராம மக்கள்

நெய்வேலி: 

             நெய்வேலியை அடுத்த மேற்கிருப்பு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுதாகியதால், அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர்.

               கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சிக்குட்பட்ட மேற்கிருப்பு கிராமத்தில், மேற்கு பகுதி குளக்கரையில் ஒன்றியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் நீரிறைத்து, அதை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமித்து அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

                 இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் மின்மோட்டார் திடீரென பழுதாகியதால், நீரிறைக்கும் பணி தடைபட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.எம்.பத்மாமணியிடம் முறையிட்டதாகவும், அவர் சரியான பதில் கூறாததால், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டதாகவும் கூறுகின்றனர்.

                      வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமோ, மின்மோட்டாரை சரிசெய்யத் தேவையான நிதி இருப்பில் உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் ஒத்துழைத்தால் அந்த நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மின்மோட்டார் பழுது குறித்தும், நிதி குறித்தும் யாரும் அலுவலகத்தை நாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

                கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இதேபோன்று மின்மோட்டார் பழுதானபோது,கிராம இளைஞர்கள்  ஊர் மக்களிடம் பணம் வசூலித்து, மின்மோட்டரை சரிசெய்து குடிநீருக்கு ஏற்பாடு செய்தனர். தற்போது ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான நிதி இருந்தும் அதை பயன்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் தயங்குவது ஏன் என்பது தான் கிராம மக்களின் கேள்வி.

இதுகுறித்து, ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மணி கூறுகையில், 

                        ""பம்ப் ஆப்ரேட்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், மோட்டார் பழுதுநீக்கும் பணி தாமதமானது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் மோட்டார் பழுது நீக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார்.

Read more »

வெள்ளி, நவம்பர் 12, 2010

நெய்வேலி அருகே திறக்கப்படாமல் உள்ள நூலகங்கள்

மந்தாரக்குப்பம் குடியிருப்புப் பகுதியில் ஓட்டுக் கொட்டகையில் உள்ள கெங்கைகொண்டான் அரசுக் கிளை நூலகம். (வலது) கம்மாபுரம் ஒன்றியம் வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள நூலகம் 
நெய்வேலி:
                   நெய்வேலியை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்கீழ் செயல்படும் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் போதிய இடவசதியின்றியும், மழைக் காலங்களில் மழை நீர் நூலகத்தினுள் புகுவதால் புத்தகங்ளை பாதுகாக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
                    கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழைய நெய்வேலி, வடக்குவெள்ளூர், சேப்ளாநத்தம், முதனை உள்ளிட்ட கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தலா 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் கட்டப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அவை எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.
                அதே வேளையில் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, மந்தாரக்குப்பத்தில், என்எல்சியின் பழங்கால கட்டடத்தில் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தில் புரவலர்களாகவும், அங்கத்தினர்களாகவும் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்கக் கூட போதிய இடவசதியில்லை. 
                           மேலும் மழைக் காலங்களில் ஆங்காங்கே ஒழுகுவதால் மழைநீர் உள்ளே புகுந்து, புத்தகங்கள் நனைந்து விடுகின்றன.  இங்குள்ள நூலகரும், புரவலர்களின் உதவியுடன் புத்தகங்களின் ஸ்டாண்டு நனையாதவாறு பாலிதீன் பைகளைக் கொண்டு புத்தகங்களை பாதுகாத்து வருகிறார். பல லட்சம் செலவு செய்து, நூலகத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வெற்றிடமாக தூங்குகின்றன. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மழையில் நனைந்த வண்ணம் ஓட்டுக் கொட்டகையில் மிதக்கின்றன. அரசும் நூலகத் துறையும் கவனிக்குமா?

Read more »

புதன், அக்டோபர் 27, 2010

வேர்க்கடலையில் நேர்த்தி தொழில் நுட்பம்: வேளாண் துணை இயக்குனர் தகவல்

விருத்தாசலம் : 

                வேர்க்கடலையில் அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை கையாண்டால் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் தற்போது வேர்க்கடலை அறுவடை நடைபெறுகிறது. எண்ணெய் வித்துப் பயிரான வேர்க்கடலையில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல விலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் கையாள வேண்டும்.

                   கடலை செடிகளை 90 முதல் 110 வது நாளில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் காய்களை தனியாகப் பிரித்து எடுத்து எட்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். இதை மூன்று முதல் நான்கு நாட்கள் செய்ய வேண்டும். ஈரப்பதம் 7 முதல் 11 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை காய் களை நன்றாக காய வைக்கவில்லை எனில் அப்லாடாக்சின் என்ற பூஞ்சாண வித்துக்களால் தாக்கப்பட்டு தரம் பாதிக்கப்படும். காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் கலந்துள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய் கள், சுருங்கிய முதிராத காய்கள், இதர ரகக் காய்கள் இவைகளை தனித்தனியாக பிரித்துவிட வேண்டும். 

                     சுத்தம் செய்யப்பட்ட வேர்க்கடலைகளை நல்ல கோணிப் பைகளில் போட்டு தரையில் மரச்சட் டங்கள் கிடத்தி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி சேமிக்க வேண் டும். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ள வணிகமுறை தரம் பிரிப்பு மையங்களுக்கு கொண்டு வந்து விற்று லாபம் பெறலாம்.மேலும் வேர்க்கடலை காய்களை உடைத்து பருப்பை எடுத்து காயவைத்து சுத்தம் செய்து சுத்தமான சாக்கு பைகளில் அடைத்து விற்பனை செய்வதன் மூலம் காய்களாக விற்பதை காட்டிலும் அதிக லாபம் பெறலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior