உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கலெக்டர் சீத்தாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் சீத்தாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு

            21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு

(ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

        பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்).

பி.சீதாராமன்-சுனாமி திட்ட இயக்குநர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.வள்ளலார்-தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையாளர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்).

சி.காமராஜ்-போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் (ஈரோடு மாவட்ட ஆட்சியர்).

ராஜேந்திர ரத்னு-சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை இணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்).

ஜெ. உமா மகேஸ்வரி-உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் (கரூர் மாவட்ட ஆட்சியர்).

ஆர்.பழனிச்சாமி-நகராட்சி நிர்வாகங்களின் இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்).

எம்.விஜயகுமார்-சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளர் (பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்).

ஏ.சுகந்தி-சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர் (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)

.டி.என்.ஹரிஹரன்-ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணைச் செயலாளர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்).

ஜெ.சந்திரகுமார்-வருவாய்த் துறை இணைச் செயலாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்).

எம்.எஸ்.சண்முகம்-தொழில் துறை இணைச் செயலாளர் (தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.ஜெயராமன்-தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணைச் செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்).

டி.பி.ராஜேஷ்-தமிழ் வளர்ச்சித் துறை, அறநிலையங்கள், செய்தித் துறை துணைச் செயலாளர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்).

சி.சமயமூர்த்தி-பொதுத் துறை இணைச் செயலாளர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்).

வி.கே.சண்முகம்-வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் (விருதுநகர் மாவட்ட ஆட்சியர்).

டி.கே.பொன்னுசாமி-எரிசக்தித் துறை இணைச் செயலாளர்  (அரியலூர் மாவட்ட ஆட்சியர்).

வி.பழனிகுமார்-தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்).

எஸ்.மதுமதி-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்)-(நாமக்கல் மாவட்ட ஆட்சியர்).

வி.சம்பத்-தமிழ்நாடு வெடிபொருட்கள் நிறுவன மேலாண் இயக்குநர்-(சிவகங்கை மாவட்ட ஆட்சியர்).

மகேசன் காசிராஜன்-தமிழ்நாடு நீர்ப்பாசன மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர்-(திருச்சி மாவட்ட ஆட்சியர்).

Read more »

வெள்ளி, டிசம்பர் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட பரவனாறு சீரமைப்பு பணியை கடலூர் கலெக்டர் ஆய்வு

கடலூர்

          கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு சில கிராமங்களில் தண்ணீர் புகுந்தது இது பற்றி அறிந்த கலெக்டர் சீத்தாராமன் பொதுப் பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் அந்த ஆற்றின் உடைப்பை அடைக்கும் பணியை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

                அதனைத்தொடர்ந்து திருவெண்ணைநல்லூர், ஓனாங்குப்பம் ஆகிய இடங்களில் பரவனாற்றில் நடந்த சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூதம்பாடி கிராமத்தில் 2 இடங்களிலும், கல்குணம், ஆடூர் அகரத்தில் 3 இடங்களிலும் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கல்குணம், பூரங்குடி, ஆடூர், அகரம் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தார்.
 
 சீரமைப்பு பணி குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
 

                   மழை வெள்ளத்தால் பரவனாற்றில் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் பணி நடைபெற்று வருகிறது. 3 தினங்களில் அனைத்து உடைப்புகளையும் அடைக்கும் பணி முடிவுற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
               ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் செல்வராஜ், பழனிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி, பெரியசாமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, வேளாண்மை இணை இயக்குனர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

செவ்வாய், நவம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.130 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 130 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

                 கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 57வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மிருணாளினி திட்ட விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ., ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்சிஸ்மேரி ஞானமுத்து, நகரமன்ற துணைத் தலைவர் தாமரைச் செல்வன், மாவட்ட விற்பனைக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.

நலத்திட்ட உதவிகள்,  சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் வென்ற  மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் பரிசு வழங்கி பேசியது: 

                   கடலூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 24 ஆயிரத்து 772 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 196 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் 190 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டு 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

                   கடலூர், பண்ருட்டி கூட்டுறவு சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக மாவட்டம் முழுவதும் துவங்கப்படும். 60 பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் சரக துணை பதிவாளர் ஜெயமணி நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 22, 2010

கடலூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் பள்ளிகளின்உரிமம் ரத்து செய்யப்படும்: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:

                   சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்தார்.

                கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு, பள்ளி பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி,வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், கல்வி அலுவலர் பூங்கொடி, தொடக்கக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பங்கேற்று பேசினர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசியது: 

                     இந்தாண்டு பள்ளி வாகனங்கள் ஏதும் விபத்து இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சில பள்ளிகள் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என ஆய்வுகளில் தெரிகிறது. எனவே மீண்டும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள வழிகாட்டுதலை 10 கட்டளைகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

                          இதில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனர் பணியமர்த்துதல், அதிவேகம், கவனக்குறைவாக ஓட்டக்கூடாது, டிரைவர் சீருடை மற்றும் அடையாள அட்டை இருக்கவேண்டும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசக்கூடாது, வாகனத்தில் டேப்ரெக்கார்டர் வைக்கக்கூடாது, அனுமதியில்லாத வாகனத்தை பயன்படுத்த கூடாது, வாகனத்தில் கதவு பொருத்தியிருக்கவேண்டும், ஜன்னல்களில் கம்பி வலை அடித்திருக்கவேண்டும். இவற்றை அனைத்து பள்ளிகளும் பின்பற்றவேண்டும்.கடந்தாண்டு 1.1.2009முதல் இந்தாண்டு 1.9.2010 வரையில் 635 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

                        இதில் இந்தாண்டு 68 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றியுள்ளனர். ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டியதாக 4 பேர் பிடிபட்டுள்ளனர்.கடந்தாண்டை விட இந்தாண்டு முன்னேற்றம் உள்ளது. ஆனால் வேண்டிய முன்னேற்றம் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியதாக 22 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்கள் வைத்திருக்கும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையில் 139 பேரும், நெடுஞ்சாலையில் 122 பேரும் விபத்தில் இறந்துள்ளனர்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Read more »

புதன், அக்டோபர் 13, 2010

கடலூர் மாவட்டத்தில் செங்கல் சூளை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்

                   கடலூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,24,409 வீடுகள் கட்டப்படவுள்ளது. நடப்பாண்டில் 26,119 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது செங்கல் கற்களின் தேவை அதிகமாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் தொழில் தொடங்க வருவோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.  ஆகவே தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

                     இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொடர்பான தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வருபவர்களுக்கு விளிம்பு தொகையாக பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதமும், இதர பிரிவினர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 5 சதவீதம் விளிம்பு தொகை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வோருக்கு 15 சதவீதம் மான்யம் வழங்கப்படுகிறது.

                      எனவே இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை கல்வி சான்று, இருப்பிடச்சான்று, சாதி சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு செங்கல் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

திங்கள், செப்டம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின் காப்பீட்டுப் பிரீமியத்தில் 50 சதவீத மானியத்துடன், கடலூர் மாவட்டத்தில் பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கால்நடைகளை வளர்போர், தங்களிடம் உள்ள கிடேரிகள், கறவை மாடுகள், கருவுற்ற மாடுகள், பால் வற்றிய மாடுகள் அனைத்தையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

                    கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாடுகளுக்கு காப்பீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படும். இறக்கும் மாடுகள், நிரந்தரமாகக் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத மாடுகள், விபத்தில் சிக்கும் மாடுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள, கால்நடை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior