உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 14, 2011

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Kattumannarkoil
Result Declared
Candidate PartyVotes
N.MURUGUMARANAll India Anna Dravida Munnetra Kazhagam83665
D.RAVIKUMARViduthalai Chiruthaigal Katchi51940
L.E.NANDHAKUMARIndependent2330
P.K.BAKKIYARAJPuratchi Bharatham1969
M.MURUGANANDAMIndependent1665
K.BHARATHIDASANBahujan Samaj Party1246
P.AZHAHIRIIndependent1012
B.MOHANAMBALIndiya Jananayaka Katchi946


           காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 31,725 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் என்.முருகுமாறன்  வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார்  தோல்வியை தழுவினார்.






Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என்.முருகுமாறன் வெற்றி: வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார் தோல்வி

http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CSmall%5Cbe6abfed-3411-48c9-b920-dc03fbfd2e00-ravikumart.jpg

டி.ரவிக்குமார்

கடலூர்:

           காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 31,725 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் என்.முருகுமாறன்  வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார்  தோல்வியை தழுவினார்.
 
 
 
 

Read more »

வியாழன், ஏப்ரல் 07, 2011

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

           வீராணம் ஏரி பாசனத்தின் மூலம் விவசாயத்தையே நம்பி வாழும் அதிக மக்கள் கொண்ட தொகுதி காட்டுமன்னார்கோவில். 

              இத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளரும், பேச்சாற்றல் மிக்கவரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரசு பணியில் இருக்கும் உள்ளூர் வேட்பாளரான அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறனுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. தமிழக முதல்வரிடம் துரை.ரவிக்குமார் நெருக்கமாக இருந்த காரணத்தால் 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பல நூறு கோடி மதிப்பிலான பல்வேறு நல திட்டப் பணிகள் கொண்டு வந்தாலும் மக்களை சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

               கட்சியினரை சந்திக்கவில்லை என்ற அதிருப்தியுடன் தேர்தல் களத்தில் இறங்கி அதை தற்போது சரிசெய்து தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ரவிக்குமாருக்காக பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். துரை.ரவிக்குமார் மீதான அதிருப்தியை பயன்படுத்தியும், மக்களிடம் ஆட்சி மாற்றம் தேவை என்ற எண்ணத்தை கொண்டும் அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறன் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

             இத்தொகுதியில் ஆதிதிராவிடர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மறைந்த சமுதாயத் தலைவர் எல். இளையபெருமாளின் மகன் மருத்துவர் எல்.இ.நந்தகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனக்கு சீட் கொடுக்கப்படாததால் சுயேச்சையாக இத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதை பொறுத்தே மற்ற இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

 
 
சிதம்பரம்:

              உழைப்பால் தமிழகத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓரணியில் இணைந்துள்ளதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  
 
காட்டுமன்னார்கோவிலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:  
 
                இதே மேடையில் நானும் மறைந்த சமுதாயத் தலைவர் இளையபெருமாளும் பேசியது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. சமுதாயத்துக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்தவர் இளையபெருமாள். நானும், இளையபெருமாளும் ஒரு தேர்தலில் சமூகநீதி கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.  ஆனால் இத்தொகுயில் போட்டியிட்ட அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது கருணாநிதி தலைமையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த சமுதாயக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெற்றி பெறும்.  
 
              உழைக்கும் சமுதாயமான இரு சமுதாயத்தினரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என திருமாவளவனும், நானும் கூடி பேசி ஓரணியில் சேர்ந்தோம்.  அதற்கு பாலமாக இருந்தவர் துரை.ரவிக்குமார். இனி இரு சமுதாயத்தினரிடையே சண்டை வராது. இத்தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை துரை.ரவிக்குமாருடன் சேர்ந்து நானும் முதல்வரிடம் தெரிவித்து முதல் பட்ஜெட்டிலேயே தனி தாலுக்காவாக மாற்ற முயற்சி செய்வோம்.  
 
             மேலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எனவே துரை.ரவிக்குமாரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.  
 
வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசியது: 
 
             கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் நீண்டகால கோரிக்கையான முட்டம்-மணல்மேடு பாலம் அமைக்கவும், வீராணம் ஏரி தூர்வாரவும், வெள்ளத்தடுப்புக்கு பலநூறு கோடிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.  
 
               கூட்டத்தில், பா.ம.க. சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், முன்னாள் பாமக மாவட்டச் செயலர் உ.கண்ணன், திமுக ஒன்றியச் செயலர் முத்துசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசினர்.
 
 
 

Read more »

வியாழன், மார்ச் 31, 2011

கடலூர் மாவட்டத்தில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் போட்டி

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது. 

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் விவரம்: 

திட்டக்குடி (தனி):

தங்கமணி (பி.எஸ்.பி) யானை, 
இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும் அம்பு, 
கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிந்தனைச்செல்வன் (வி.சி) மெழுகுவர்த்தி, 
தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

உலகநாதன் - கிரிக்கெட் மட்டை, 
சுமன்- தையல் இயந்திரம், 
தனசேகர் - காஸ் சிலிண்டர், 
பழனியம்மாள் - கூடை, 
முத்துகுமார் - கூரை மின் விசிறி. 


விருத்தாசலம்: 

அருட்செல்வம் (பி.எஸ்.பி) யானை, 
நீதிராஜன் (காங்) கை, 
பழமலை (பா.ஜ) தாமரை, 
கிருஷ்ணமூர்த்தி (ஐ.ஜெ.கே) மோதிரம், 
முத்துகுமார் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

அருண்குமார் - வயலின், 
சந்தானமூர்த்தி - தேங்காய், 
சுலோச்சனா- மெழுகுவர்த்திகள், 
ராஜேந்திரன்- கூடை. 

நெய்வேலி: 

கற்பகம் (பா.ஜ) தாமரை, 
சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம், 
இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
குமார் (ஐ.ஜே.கே) மோதிரம், 
லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சந்திரா-மின் கல விளக்கு, 
குமரகுரு- ரம்பம், 
பாண்டியன்-முரசு. 

குறிஞ்சிப்பாடி: 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பன்னீர்செல்வம் (தி.மு.க) உதயசூரியன், 
பிரேமலதா (பி.எஸ்.பி) யானை, 
வைரக்கண்ணு (பா.ஜ.க) தாமரை, 

சுயேச்சை 

பன்னீர்செல்வம்-இறகுபந்து. 

பண்ருட்டி: 

ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 

சுயேச்சைகள் 

குப்புசாமி - தபால் பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட் மட்டை, 
வேல்முருகன் -அலமாரி. 

கடலூர்: 

குணசேகரன் (பா.ஜ) தாமரை, 
சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன், 
சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சக்திதாசன் -பட்டம், 
ராஜன்-மோதிரம். 

புவனகிரி: 

அறிவுச்செல்வன் (பா.ம.க) மாம்பழம், 
சாமி (பி.எஸ்.பி) யானை, 
செல்விராமஜெயம் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
கமலக்கண்ணன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
திருவரசமூர்த்தி (ஐக்கிய ஜனதாதளம்) அம்பு, 
பழனிவேல் (புரட்சி பாரதம்) மெழுகுவர்த்திகள், 
முத்து (ஜார்கண்ட் முக்தி மோட்சா) வில் மற்றும் அம்பு, 

சுயேச்சைகள் 

கணேசன்-தபால் பெட்டி, 
சவுந்தர்ராஜன் - தொலைக்காட்சி பெட்டி, 
தனராசு -தையல் இயந்திரம்,
பன்னீர்செல்வம் - சீமாட்டி பணப்பை, 
மணி - கேக், 
முருகவேல்- முரசு. 

சிதம்பரம்:

ஸ்ரீதர் வாண்டையார் (தி.மு.க) உதயசூரியன், 
கண்ணன் (பா.ஜ) தாமரை,
செல்லையா (பி.எஸ்.பி) யானை, 
பாலகிருஷ்ணன் (மா.கம்யூ) சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், 
பன்னீர் (லோக் ஜன சக்தி) பங்களா,

சுயேச்சைகள் 

வினோபா- காஸ் சிலிண்டர், 
சத்தியமூர்த்தி- பட்டம், 
அருள்பிரகாசம்- அலமாரி, 
சங்கர்-தொலைக்காட்சிபெட்டி, 

காட்டுமன்னார்கோவில் (தனி): 

பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, 
முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, 
மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், 
ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி, 

சுயேச்சைகள் 

அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, 
நந்தகுமார் - பட்டம், முருகானந்தம் - வயலின்.

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் 

தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 

மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


காட்டுமன்னார்கோவில் (தனி): 

பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, 
முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, 
மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், 
ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி, 

சுயேச்சைகள் 

அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, 
நந்தகுமார் - பட்டம்,
முருகானந்தம் - வயலின்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior