உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காவலர் நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவலர் நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 காவலர்கள் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 போலீசாரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ்.பி., பகலவன் கூறினார்.

சிதம்பரத்தில் எஸ்.பி., பகலவன்  கூறியது:

            கடலூர் மாவட்டத்தில் பணியாற்ற தமிழக அரசு கூடுதலாக 350 போலீஸ் ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி ஏற்கனவே ஆயுதப்படையில் இருந்த போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.சிதம்பரம் உட்கோட்டத்தில் 8 போலீஸ் ஸ்டேஷன், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணி புரிய 60 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப போலீசார் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

               சிதம்பரம் நகரில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல் கட்டமாக இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 10 இடங்களில் பொருத்தப்படும். சிதம்பரம் நகரில் நடந்துவரும் குற்றங்களை கண்டுபிடிக்க ஏற்கனவே தனிப்படை செயல்படுகிறது. கூடுதலாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.




Read more »

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

சிதம்பரத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் பழைய காவலர் குடியிருப்பு




இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு. (உள்படம்) புதர் மண்டிய பகுதி.
 
சிதம்பரம்:
 
         சிதம்பரத்தில் உள்ள பழைய போலீஸ் குடியிருப்பு புதர் மண்டியும், சாக்கடை நீர் தேங்கியும், பழுதடைந்த கட்டடத்துடன் குடியிருக்க தகுதியற்ற மிக மோசமான நிலையில் உள்ளது.  
 
              சிதம்பரம் - சீர்காழி சாலையில் கோட்டாட்சியர் வீடு அருகில், பழைய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டடங்கள் முற்றிலும் பழுதடைந்துள்ளன.  குடியிருப்புக்குச் செல்லும் வழியில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டி உள்ளன. அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கியும் உள்ளது.  பழைய போலீஸ் குடியிருப்பில் மொத்தம் 21 வீடுதள் இதில் 15 வீடுகள் முற்றுலும் சேதமடைந்துள்ளதால் அவற்றில் காவலர்கள் யாரும் குடியேறாமல் காலியாக உள்ளன. 
 
             மீதிஉள்ள சுமாரான 6 வீடுகளில் போலீசார்  வசித்து வருகின்றனர். இதனால் சிதம்பரம் கோட்டத்தில் பணியாற்றும் போலீஸôருக்கு போலீஸ் குடியிருப்பில் வீடு கிடைக்காததால் வெளியில் அதிக வாடகைக்கு வசித்து வருகின்றனர். பழைய போலீஸ் குடியிருப்புக்கு அருகில் புதிதாக குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 21 வீடுகள். இதில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வீடும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 2 வீடும், காவலர்களுக்கு 18 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  சிதம்பரம் நகரம், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பணியாற்றுகின்றனர்.  
 
             ஆனால் மொத்தம் பழைய போலீஸ் குடியிருப்பு, புதிய போலீஸ் குடியிருப்பு 2-ம் சேர்த்து மொத்தம் 27 வீடுகள்தான் உள்ளன. இதனால் போலீசார்  பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மேலும் போலீசார்  குடியிருப்புக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது. எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பழைய குடியிருப்பை தாற்காலிகமாக சீரமைக்கவும், மேலும் புதிதாக வீடுகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே போலீஸôரின் எதிர்ப்பார்ப்பாகும்.  
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, மார்ச் 19, 2010

காவலர் நல வாரியம் அமைக்க கோரிக்கை


கடலூர்:

           காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.​ 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​

                  காவல்துறையின் ஒட்டுமொத்த நலன்கருதி,​​ ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள காவலர் நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும்.​ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு ஈட்டுத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.​ ​ ​ காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் 80 வயதைத் தாண்டிய 5 பேர்,​​ கூட்டத்தில் கெüரவிக்கப்பட்டனர்.​ நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.​ செயலாளர் பி.வடிவேல்,​​ பொருளாளர் கே.மணி,​​ ​ லோகையன்,​​ ஆர்.காசிநாதன்,​​ பி.பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior