உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காவல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 15, 2012

வழக்கு விவரங்கள் கணினிி மயம்: கடலூர் மாவட்ட போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. பயிற்சி

கடலூர் : 

    போலீஸ் ஸ்டேஷன் பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., நேற்று பயிற்சியளித்தார்.

      தமிழக காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள், குற்ற வழக்குகள், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அதன்படி நேற்று, கடலூரில் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. எஸ்.பி., பகலவன், கூடுதல் எஸ்.பி.,ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், அனைத்து ஸ்டேஷன்களின் எழுத்தர்கள் பங்கேற்றனர். வழக்குக் கோப்புகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது குறித்து கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா பயிற்சி அளித்தார்.









Read more »

சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்திற்கு களப்பணி பயிற்சிக்கு 39 எஸ்.ஐ.,க்கள் வருகை

கடலூர் :

        சென்னையில் பயிற்சி முடித்த 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சிக்கு கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். 

         சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,061 சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்ததாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல், கடந்த 16ம் தேதி வரை பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்தவர்களில் 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சி பெற கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 32 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும், 2 பெண்கள் உட்பட 7 பேர் ஆயுதப்படை பிரிவிலும் ஆறு மாதம் களப்பணி பயிற்சி பெற உள்ளனர்.
 
       அவர்கள் போலீஸ்காரர்களின் அன்றாட பணிகளான சம்மன் சர்வீஸ், கோர்ட்டுக்கு சம்மன் செய்வது, எஸ்கார்டு, நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பயிற்சிகளை பெறுவர். பயிற்சி முடித்த பின் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு முறையான பணி வழங்கப்படும்.














Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 காவலர்கள் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 போலீசாரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ்.பி., பகலவன் கூறினார்.

சிதம்பரத்தில் எஸ்.பி., பகலவன்  கூறியது:

            கடலூர் மாவட்டத்தில் பணியாற்ற தமிழக அரசு கூடுதலாக 350 போலீஸ் ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி ஏற்கனவே ஆயுதப்படையில் இருந்த போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.சிதம்பரம் உட்கோட்டத்தில் 8 போலீஸ் ஸ்டேஷன், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணி புரிய 60 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப போலீசார் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

               சிதம்பரம் நகரில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல் கட்டமாக இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 10 இடங்களில் பொருத்தப்படும். சிதம்பரம் நகரில் நடந்துவரும் குற்றங்களை கண்டுபிடிக்க ஏற்கனவே தனிப்படை செயல்படுகிறது. கூடுதலாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.




Read more »

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர், விழுப்புரத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

              விழுப்புரம் மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வினித்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

              இதில் செஞ்சி ஆய்வாளர் சிங்காரவேலு சத்தியமங்கலத்துக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் இளங்கோவன் மரக்காணத்துக்கும், ரோஷணை அரவிந்தன் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும், மரக்காணம் சேகர் வடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வளவனூர் ஆய்வாளர் சந்திரபாபு சேத்தியாதோப்புக்கும், விக்கிரவாண்டி ஸ்ரீதரன் வேப்பூருக்கும், வானூர் கண்ணதாசன் ஊ. மங்கலத்துக்கும், வளத்தி மணவாளன் பென்னாடத்துகும், விழுப்புரம் நகரம் ஷியாம் சுந்தர், கடலூர் திருப்பாப்புலியூருக்கும், தியாகதுருகம் ரவிக்குமார் ராம நத்தத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

               கடலூர் மாவட்டம் வடலூரிலிருந்த ஆய்வாளர் முரளி வானூருக்கும், பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணன் ரோஷணைக்கும், நெய்வேலி ராமநாதன் செஞ்சிக்கும், ராமநத்தம் பிரதீப்குமார் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருப்பாப்புலியூரிலிருந்த சுந்தரவடிவேல் நெய்வேலி தெர்மலுக்கும், அண்ணாமலை நகர் சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டைக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி திருக்கோவிலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்த சங்கர் கஞ்சனூருக்கும், ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்த சுகுமாறன் வளவனூருக்கும், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு சந்திரசேகரன் குமராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.




Read more »

சனி, ஜூலை 30, 2011

தமிழக காவல் துறை இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யும் திட்டம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib1gDAbJJh4EDO3neuIlkNDvMRoDa02skVKD80x7QHbXrYcQThZJxPRvjdLMMQ8xHfJeu0ng0W9mTs4RutxTg5fPBKaKFMfFCVU1_2nO7go6DOocF5lMavBewzjgohoM1BR4dGfyudjx8x/s400/tamilnadu+police+result+2009.JPG


தமிழக காவல் துறை தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          

தமிழ்நாடு காவல் துறை அதிகாரப்பூர்வ இணையதளம்

www.tnpolice.gov.in   ஆகும்.

                இதில் தமிழ்நாடு காவல் துறை விவரங்கள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையதளம் மூலமாகவும், பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.






Read more »

திங்கள், ஜூன் 20, 2011

கடலூர் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக்குறை

சிதம்பரம்:

          புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

            ரோந்து செல்ல காவலர்கள் இல்லாததால் திருட்டு, வழிபறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் அனைவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

         இதனால் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களை காவல் நிலையங்களில் உள்ள காவலர் பணியிடங்களில் நியமனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

            இதனால் ரோந்து பணிக்கு கூட காவலர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பயிற்சி பெற்று காத்திருக்கும் காவலர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என காவல்துறையினர் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior