உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கிராம நிர்வாக அலுவலர் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் 184 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,க்கள்) பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்று வாருவாய் கோட்டம், ஏழு தாலுகா, 32 குறுவட்டம் மற்றும் 901 வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
 
              இதில் வருவாய் கிராமங்களை நிர்வகிக்க 604 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிராமங்களில் நிலவரி வசூலித்தல், கணக்குகள் பராமரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சிட்ட அடங்கல், ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வி.ஏ.ஓ.,க்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

               குறிப்பாக தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகள் தேர்வு செய்வது, ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம், கிராம சபைக் கூட்டம், அரசின் நிவாரண உதவிகள் வழங்குவது, இயற்கை இடர்பாடுகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை கொடுப்பது உள்ளிட்ட அரசு மேற்கொள்ளும் இதர பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

            இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 604 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களில் தற்போது 184 பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் வருவாய் கிராமங்களையும் சேர்த்து பார்த்து வருகின்றனர்.இதனால் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் வி.ஏ.ஓ., எப்போது வருவார் என அவரது அலுவலகம் முன் நாள் முழுக்க காத்திருப்பது வேதனையாக உள்ளது. கிராம கணக்குகள், "அ' பதிவேடு, வாரிசு சான்றிதழ், அரசு உதவிக்கான சான்றிதழ்கள் பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.















Read more »

செவ்வாய், நவம்பர் 15, 2011

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய மடிக்கணினி

சென்னையில் நேற்று  நடந்த கலெக்டர்கள் 2ம் நாள் மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் : 

* எப்போதெல்லாம் கடலில் மீனவர்கள் காணாமல் போகிறார்களோ, அப்போதெல்லாம் தேவைக்கேற்ப வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து, மீனவர்களை தேடி, மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.

* மீனவர்களை தேடி, மீட்கும் பணிக்காக கடலோர காவல்படைக்கும், கடலோர போலீசாருக்கும் நவீன அதிவிரைவு படகுகள் வழங்கப்படும்.

* புதிய அரசு ஆஸ்பத்திரிகளில் சூரியஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் ஒய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 45 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 18 வயதாக குறைக்கப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

* பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய லேப-டாப் வழங்கப்படும் - என்பன உள்பட 32 மாவட்டங்களுக்கு 43 வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார் 













Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஏஓ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

முடிவுகளைத் தெரிந்து கொள்ள : 


அல்லது, 




Read more »

வெள்ளி, ஜூலை 15, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள்: 13 ஆயிரம் பேரின் சான்றுகள் சரிபார்ப்பு

            தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு முடிவுகள் ஓரிரு வாரங்களில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

             இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் பல்வேறு தரப்பினரும் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டினர். வழக்கமாக, தேர்வு நடத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக முடிவுகள் வெளியாவது வழக்கம். ஆனால், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வுக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

              விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இப்போது நடந்து வருகின்றன. மேலும், 10 லட்சம் பேர் எழுதியுள்ள தேர்வில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களில் தகுதி வாய்ந்த 4 ஆயிரத்து 561 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

              வி.ஏ.ஓ. உள்பட அரசுப் பணிகளுக்கு நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறி வருவதாக தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருவதைப் போன்று, பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள தேர்வுகளின் முடிவுகளையும் விரைந்து வெளியிட அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள், பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.





 

Read more »

வியாழன், மே 26, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு

           தமிழகத்தில் பத்து லட்சம் பேர் எழுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
       
               தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில் 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது. வி.ஏ.ஓ. தேர்வை தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 

              வழக்கமாக வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள், தேர்வு நடந்த நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையே உரிய காலத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவையும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு, இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

             இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாள்களின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. 

தேர்வு முடிவுகள் எப்போது? 

             இந்தச் சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15-க்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read more »

வெள்ளி, மார்ச் 04, 2011

விஏஓ தேர்வு முடிவுகள் : டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை

           தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி 3,484 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் இத்தேர்வை சுமார் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினர்.


            இத்தேர்வு எழுதியோரிடம் சிலர், சாதகமான முடிவை பெற்று தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து வருவதாக நிறைய புகார்கள் வந்தன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சீட்டுக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி. எச்சரித்துள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            ’’தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத் தாள்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விடைத் தாள்கள் அனைத்தும் கணினி மூலம் மிகுந்த பாதுகாப்பிற்கிடையே கவனத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுக்கான முடிவுகள் முற்றிலுமாக விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் இடஒதுக்கீடு சுழற்சி அடிப்படையிலும்தான் வெளியிடப்படும்.


            விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் யாரும் குறுக்கிடவோ தவறு செய்யவோ சாத்தியமில்லை. பொதுமக்களிடம் அல்லது விண்ணப்பதாரர்களிடம் தேர்வின் முடிவினை சாதகமாக பெற்றுத் தர முடியும் என்று தவறான செய்தியை யாரேனும் பரப்பினால் அது உண்மைக்கு புறம்பானது. அதனை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - விடைகள் சரிபார்க்க

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய  கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ( 20 பிப்ரவரி 2011) - விடைகள் சரிபார்க்க (D வகை வினாக்கள்) இந்த இணையதளத்தில் பார்க்கவும்.


 










Read more »

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்


  கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு
 
 கடலூர் மாவட்டத்தில் 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

 
கடலூர்:
 
              தமிழகத்தில் இன்று கிராம நிர்வாக அலுவலர்பணி காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 9 1/2லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 
 
                      கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 44,029 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி ஆகிய 4 இடங்களில் 59 மையங்களில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடந்தது.
 
                  கடலூரில் செயிண்ட் ஜோசப் பள்ளி உள்பட பலமையங்களில் இந்த தேர்வு நடந்தது. சுமார் 44 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் பல பெண்கள் கைக்குழந்தை மற்றும் கணவருடன் வந்திருந்ததையும் காண முடிந்தது.

Read more »

சனி, பிப்ரவரி 19, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும்வாழ்த்துக்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். வெற்றி  பெறுபவர்கள் கையூட்டு ( லஞ்சம் ) வாங்காதீர்கள். 

Read more »

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்

           வி.ஏ.ஓ., தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

           பிப்., 20 ல் காலை வி.ஏ.ஓ., தேர்வு நடக்கிறது. இதற்காக, 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, டி.என்.பி.எஸ்.சி., ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. குறைந்த வயதினர் உட்பட தகுதியில்லாத 85 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படுகிறது. 

            தேர்வு தேதி நெருங்கிவிட்டதால், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கலக்கம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் மூலம் www.tnpsc.gov.in பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பத்தின் எண்களையோ அல்லது பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.

Read more »

நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான மையங்கள் அறிவிப்பு

கடலூர் : 

         நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            வரும் 20ம் தேதி வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதி சீட்டில் தேர்வு மையமானது நெய்வேலி நகரியம், வட்டம் 19 அரவிந்தோ மேல்நிலைப் பள்ளி மற்றும் நெய்வேலி நகரியம், வட்டம் 29 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதே முகவரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தோ வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திங்கள், பிப்ரவரி 07, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளை தேர்வு எழுதுபவர்களுக்கு தபாலில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் 
 
                தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கான 10 லட்சம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) அஞ்சலகங்கள் மூலம் நேரடியாக விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 
 
                தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர்.  இந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களது பெயர், இல்ல முகவரி குறிப்பிடப்பட்ட, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை தேர்வாணையம் அச்சிட்டு வழங்கியுள்ளது. இந்தத் தேர்வுக் கூடச் சீட்டுகள், முகவரி தெரியும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உறைகளில் இட்டு, சான்றிதழ் பதிவு தபாலில் அனுப்புவதற்காக அஞ்சல் துறையுடன், தேர்வாணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
             இதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அஞ்சலகத்தில்,தேர்வுக் கூடச் சீட்டுகள் கட்டுக் கட்டாகக் குவிந்துள்ளன. இந்தக் கட்டுகளைப் பிரித்து, கடந்த 3-ம் தேதி முதல் (விடுமுறை நாள்கள் உள்பட) தேர்வுக்கூடச் சீட்டுகளை அனுப்பும் பணியில் 50 தபால் ஊழியர்கள் "ஷிஃப்ட்' முறையில் ஈடுபட்டுள்ளனர்.  
 
இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஆர். வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
 
             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பணியிடத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கெனவே அஞ்சல் துறை மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் விற்பனை செய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக இப்போது வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பும் 24 மணி நேர சேவையில் தபால் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  
 
அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய்: 
 
                  சென்னையில் கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள 93 தலைமை அஞ்சலகங்கள், 20 ஆயிரம் கிளை அஞ்சலகங்கள் மூலம் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை அடுத்த 3 நாள்களில் இந்த தபால்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.  இதன் உறைகளின் மீது, அவசரம், குறுகிய காலத்துக்குள் சேர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் இந்த தேர்வுக்கூடச் சீட்டுகளை விநியோகிப்பதன் மூலம் அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளையும் இனி அஞ்சல் துறை விநியோகிக்க உள்ளது என்றார் வெங்கட்ராமன்.

Read more »

வியாழன், ஜனவரி 20, 2011

கடலூரில் 166 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலி: ஆட்சியர்

சிதம்பரம்:

               கடலூர் மாவட்டத்தில் 166 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. தனிப்பிரிவு மற்றும் கடலூர் மாவட்ட தாட்கோ நிறுவனமும் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஒரு மாதகால ஆயத்த பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  

            விழாவில் பல்கலைக்கழக பதிப்புத்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நூலை துணைவேந்தர் எம்.ராநாதன் வெளியிட்ட அதன் முதல் பிரதியை ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.  

விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:  

           கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 604 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளது. இவற்றில் 166 இடங்கள் காலியாக உள்ளதால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது ஒரு நிர்வாக அலுவலர் 3 கிராமங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அனைவரும் தோல்வியுற்றனர்.  

           இதைக் கருóத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வகிப்பதால் அவ்ர்களுக்கு தேர்வுக்கான ஆயத்த பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 59.354 பேர் தேர்வு எழுதுகின்றனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியில் பங்கேற்ற 85 பேரும் தேர்ச்சி பெற வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வாழ்த்துரை வழங்கி பேசியது: 

             கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொகுத்து பதிப்புத்துறை மூலம் இலவச நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நூல் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதுபோன்று டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுக்கான நூல்களை பேராசிரியர்கள் தயாரித்து நமது பதிப்புத்துறை மூலம் வெளியிட வேண்டும்.  

              மேலும் இதுபோன்ற அரசு பயிற்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தயாராக உள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். விழாவுக்கு கலைப்புல முதல்வர் ஏ.என்.கண்ணப்பன் தலைமை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி.ஸ பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாவட்ட தாட்கோ மேலாளர் ரங்கநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார். பேராசிரியர் கே.சிவக்குமார் நன்றி கூறினார்.  விழாவில் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 29, 2010

வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு

சென்னை:

                    கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வுத் தேதி எப்போது எனத் தெரியாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.  

                    தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால் பல மாதங்களாக தனியார் பயிற்சி நிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்து தொடர்ந்து படித்து வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 1,576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனுடன், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலி பணியிடங்கள் 1,077 என மொத்தம் 2,653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியானது.  

                   தேர்வுக்கு விண்ணப்பிக்க 2010 ஆகஸ்ட் 20 கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் தேர்வுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  பிரிவுகள் மூலம் பதவி உயர்வு: அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.  ஒவ்வொரு தேர்வின்போதும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு தனித்தனியே பிரிவுகள் தொடங்கப்படும்.  

                   இந்தப் பிரிவுகளுக்கு பதவி உயர்வின் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவுக்கும் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், அலுவலக உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம்.  ÷இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான பிரிவுகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

என்ன காரணம்? 

                     பிரிவுகள் தொடங்கப்பட வேண்டுமானால், அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பட்டப் படிப்பு என்ன என்பது ஆராயப்படும். திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் எனில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதுதான், கிராம நிர்வாக அலுவலர் தேர்வை நடத்துவதில் உள்ள சிக்கல் எனத் தெரிகிறது.  60-க்கும் மேற்பட்டோர்: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 60-க்கும் மேற்பட்டோர் திறந்தநிலை பல்கலைக்கழங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் ஆவர்.  

                    கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு பிரிவுகளைத் தொடங்கி பதவி உயர்வு மூலம் அதிகாரிகளை நியமிக்கும் போது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை என்ன செய்வது எனத் தெரியாமல் உயரதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.  அரசிடம் கருத்து கேட்பு: இதனிடையே, தேர்வாணைய அதிகாரிகள் வேறுவகையான உத்தியைக் கையாள முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அதாவது, இப்போது திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக படித்து பட்டம் வாங்கியவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சலுகை அளிக்கலாமா எனக் கருதுகிறது. 

                அதாவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் மூன்றாண்டு பட்டப் படிப்புகளை முடிக்க வசதியாக ஐந்தாண்டுக் காலத்தை அளித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என யோசித்து வருகிறது தேர்வாணையம். இதற்காக, அரசிடம் கருத்து கேட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.  

போட்டா போட்டி: 

                   இந்த நிலையில், தேர்வாணைய அலுவலகத்துக்குள் இருபெரும் பிரிவுகளுக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக பட்டம் பெற்றவர்கள், 10-ம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் கல்லூரியில் படிப்பு என வழக்கமான முறையில் பட்டம் வாங்கியவர்கள் என இருபிரிவுகளாகப் பிரிந்து போட்டா போட்டியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் வி.ஏ.ஓ. தேர்வை நடத்துவதில் தொடர்ந்து கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதைப் போக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior