உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கருத்தரங்கம்

கடலூர்:

      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் அண்மையில் நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறை தலைவர் எம்.ரேணுகா வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.ரமாராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத் திருச்சி மண்டல பேராசிரியர் விஜயபாலாஜி கணிதத்தின் பயன்பாடு குறித்து பேசினார்.  இதில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கட்டுரை வாசிப்பு போட்டி, கணித மேதை ராமாநுஜம் தொடர்பான ஆண்டை மையப்படுத்தும் நிகழ்வுகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.



Read more »

புதன், ஏப்ரல் 18, 2012

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி, மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஞானகுரு வரவேற்றார். கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் எத்திராஜூலு, புதுச்சேரி பல்கலைக் கழக இணை பேராசிரியர் மும்தாஜ் பேகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலர் விஜயகுமார்,

Read more »

புதன், மார்ச் 28, 2012

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா


கடலூர்:

         கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியை நிர்மலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரமாமணி ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மைச் செயல் அலுவலர் ஆனந்த், அறக்கட்டளை செயலர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு விருந்தினராக பார்த்தசாரதி, கல்லூரி அறங்காவலர் ஞானசவுந்திரி கல்வித்திறன், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கினார். பேராசிரியை ரேணுகா நன்றி கூறினார்.





Read more »

திங்கள், பிப்ரவரி 15, 2010

என்.எஸ்.எஸ்., முகாம்

கடலூர்: 

                      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா தோட்டப்பட்டு கிராமத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். சுந்தரமூர்த்தி, வக்கீல் அருணாசலம் வாழ்த்தி பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior