உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கீரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 12, 2011

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்


 முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை 

             கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம் துணை செயலாளர் கர்ணன், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி சுகந்தி, கே ஆடூர் காலனி கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ஜெயச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் ஊராட்சி செயலாளர் பால்ராஜ், மடுவன்கரை காலனி கிளை செயலாளர் ஜெயபால், மஞ்சக்குழி ஊராட்சி செயலாளர் மாலிக், 6-வது வார்டு பாலையா, குமாராட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன், நந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், வல்லம்படுகை மெயின்ரோடு காலனி கிளை செயலாளர் ராஜேந்திரன், மங்களூர் ஆ.களத்தூர் கிளை செயலாளர் ராமலிங்கம், பரங்கிபேட்டை பேரூராட்சி 8-வது வார்டு செயலாளர் ஜெயசங்கர், 14-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன்.  அண்ணாமலை நகர் பேரூராட்சி அவை தலைவர் குஞ்சுபாண்டியன்,         பேரூராட்சி இணை செயலாளர் கலாவதி, 11-வது வார்டு செயலாளர் நடராஜன், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், பொருளாளர் லோகநாதன், 12-வது வார்டு செயலாளர் ஜெயராமன். பெண்ணாடம் பேரூராட்சி பாபு ராஜேந்திரன், கெங்கைகொண்டான் பேரூராட்சி அவை தலைவர் பிரபு. ஆகியோர் இன்று முதல் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, செப்டம்பர் 17, 2011

சிதம்பரத்தில் 100 பேருக்கு சுயஉதவிக் கடன்

சிதம்பரம்:

            சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விஜயவாசம் பொது நல அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சிண்டிகேட் வங்கி மூலமாக தொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரம் வீதம் சுயஉதவிக்கடன் வழங்கப்பட்டது. கீரப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை மேலாளர் திருப்பணிநத்தம் எஸ்.சகாதேவன் தலைமை வகித்தார்.  அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கவிதா நிகழ்ச்சியில் பங்கேற்று மகளிருக்கு சுயஉதவிக்கடன்களை வழங்கினார்.







Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிய ஊராட்சி தொடக்கப்பள்ளி திறப்பு விழா

சிதம்பரம் : 

              சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார்  துவக்கி வைத்தார்.  

               புவனகிரி ஒன்றியம் அம்பாள்புரத்தில்  தொடக்கப் பள்ளி இல்லாததால்  இளங் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கல்விக்குழு உறுப்பினர் துரைமணிராஜன், அமைச்சர்  பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை வைத்தார். அப்பகுதிக்கு புதிய பள்ளி அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து புதிதாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி துவக்க விழாவில் புவனகிரி சேர்மன் தனலட்சுமி கலை வாணன் தலைமை தாங்கினார். 

                   கல்வித்துறை அதிகாரிகள் சவரிமுத்து, பிரான்சிஸ்ஜெயராஜ், குணபாரி முன்னிலை வகித்தனர்.  கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து முதல் வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  முன்னாள் சேர்மன் மதியழகன், ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் வரதராஜன், செல்வராசு,சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊராட்சித் தலைவர் ஆனந்திகுமார் நன்றி கூறினார்.

Read more »

புதன், ஜூலை 28, 2010

சிதம்பரம் அருகே சுகாதார சீர்கேட்டுடன் ஊர் பொதுக்குளம்


சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் ஊர் பொதுக்குளம் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

            சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளம் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இப்பகுதி  மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், கால்நடை கழுவுவதற்கும் பயன்படுத்தும் விதமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊர் பொதுக்குளம் உள்ளது.

             இக்குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் தூர்ந்தும், ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியும் சுகாதார சீர்கேட்டுடன் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருகிறது. இருந்தும் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் குளத்து நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி குளத்தை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Read more »

வியாழன், ஜூலை 15, 2010

சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் இலவச காஸ் அடுப்பு வழங்கல்

சிதம்பரம்: 

                சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் அரசு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலவச காஸ் அடுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, நகர அவைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் பன்னீர் செல்வம், பாலசுப்ரமணியன், பிரதிநிதிகள் ராஜ், ரமேஷ், புரு‌ஷோத்தமன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், ஜூலை 01, 2010

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிலை பரிதாபம்! படிக்கும் நேரத்தில் மாடுகள் விரட்டும் அவலம்

புவனகிரி : 

                 கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியில்லை, பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மாணவர்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி விடுகிறது.

                 சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கீரப்பாளையம், வயலூர், சிலுவைபுரம், எண்ணாநகரம், செட்டிக்குளம், கண்ணங்குடி, வடஹரிராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப் பள்ளியில் கடந்த எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர் வில் 75 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். கல்வித்தரம் உயர்ந்துவரும் நிலையில் பாதுகாப் பாற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் எந்த நேரத்திலும் மாடுகள் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு கூட்டம், கூட் டமாக வருவதால் மாணவர்கள் புத்தக பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதே வேலையாக உள்ளது. மாடுகள் மட்டுமின்றி நாய்கள் கூட்டம் கூட்டாக பள்ளிகளில் புகுந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. தினமும் காலையில் மரத்தடியில் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். மாடுகள் வருவதால், அந்த மாணவர்கள் எந்த நேரத்திலும் ஓட்டம் பிடிக்கும் நிலையில் உஷாராக உட்கார்ந்து படிக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட பலான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

                     காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் பிராந்தி பாட்டில்களை பார்த்து முகம் சுளித்து அவற்றை அவர்களே அப்புறப்படுத்துவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சிறுநீர் கழிக்கவும், இயற்கை உபாதைக்காகவும் ஊராட்சி நிர்வாகம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது. காலப் போக்கில் தண்ணீர் பிரச்னை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளிக்குள் குடித்து விட்டு கும்மாளமிடும் சமூக விரோதிகள் கழிவறையை நாசம் செய்ததோடு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைக்காக முட்புதர்கள் போன்ற மறைவிடங்களை தேடிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதில் மாணவிகள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. 2007-08ம் ஆண்டு அரசு மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளியில் பல லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

                  கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட தனித்தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு தளங்கள் அமைக்கப்பட்டன. அவைகளை பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது விளையாட்டு மைதானத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடைப்பந்து மைதானம் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்த காட்டிற்கு நடுவே வெறும் கம்பி மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது. மற்ற விளையாட்டு இடங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. சுடுகாட்டிற்கு பாதுகாப்பான சுற்றுச் சுவர், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசு மாணவர்களின் நலன் கருதி கீரப்பாளையம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தான் பதில் சொல்ல வேண்டும்.


Read more »

திங்கள், மே 31, 2010

இலவச நாடி மருத்துவ முகாம்

புவனகிரி: 

                     புவனகிரியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் இலவச நாடி மருத்துவ முகாம் நடந்தது. புவனகிரியில் இறைவழி மருத்துவ ஆராய்ச்சி அருட்பெருஞ்ஜோதி மருத்துவ மையம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் இணைந்து முதல் முறையாக இலவச நாடி மருத்துவ முகாம் நடந் தது. புவனகிரியை சுற்றியுள்ள பெருமாத்தூர், பூதவராயன்பேட்டை, அழிச்சிக்குடி, உடையூர், கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், தெற்கு திட்டை, வடக்கு திட்டை, சாத்தப்பாடி, தம்பிக்கு நல்லான்பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 250 பேர் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு இறைவழி மருத்துவர் குமார் தலைமையில் நாடி பரிசோதனை மூலம் உடல் உள்ளுருப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிந்தும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக்க ஆலோசனைகளும் வழங்கப் பட்டது. புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்ற காப்பாளர் சுப்ரமணியன், மன்ற தலைவர் சஞ்சீவராயர் உள்ளிட்டவர்கள் பயனாளிகளுக்கு மோர், பிஸ்கெட் வழங்கினர்.

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

இந்தியாவின் முன்னோடி கிராமமான கீரப்பாளையத்தில் முடங்கியது வளர்ச்சித் திட்டங்கள்

 கீரப்பாளையம்:

              சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரடியாக வந்து சென்ற பெருமைக்குரிய கீரப் பாளையம் ஊராட்சியில் தற்போது அனைத்து வளர்ச் சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி இந்தியாவில் முன் னோடி கிராமமாக தேர்வு செய் யப்பட்டு, தூய் மையான கிராமம் என அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங் கினார். கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டும் சென் றார். அத்தனை பெருமைக்குரிய ஊராட்சியில் இன்று அனைத்தும் தலைகீழாக காணப்படுகிறது.   கீரப்பாளையம் ஊராட்சியில் 2005ம் ஆண்டு அரசு மூலம் 35 லட்சம் ரூபாய்  செலவில் விறகிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் திட்டத்தை அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மாஜி அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.
 
                 இத்திட்டத்தை  நிர்வகிக்கும் பொறுப்பு அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுனரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் மூலம் கிடைத்த மின்சாரம் கீழகீரப்பாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற் றும்  தெருவிளக்கு எரிய பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் ஆறுமாதம் கூட நிறைவடையாத நிலையில்  முறையான பராமரிப்பின்றி திட்டம் செயலிழந்தது. இதே போன்று ஜவகர் வேலை வாய்ப்புத் திட் டத் தில் 1997-98ல் கட்டப் பட்ட சமுதாய கழிவறை, குளியலறை கட்டடங்கள் மற்றும் அதனை பொதுமக்கள் பயன் படுத்துவதற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் போடப் பட்ட  கைப்பம்பு என அனைத்தும் பாழானது.
 
                        ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் பொதுமக்கள் பயனடைய நவீன கட்டண கழிவறைகள் கட்டப்பட்டன. தற்போது அருகே உள்ள செப்டிக் டேங்க்கிலிருந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அக் ட்டடம் அருகே இயங்கி வரும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு தினசரி சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகளுக்காக வரும் பொதுமக்கள் மூக்கைப் பிடித் துச் செல்லும் அவல நிலையும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி, கீழகீரப் பாளையம் பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்கள் பயனடையும் வகையில் 1996ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்தது.  இதனால் பொதுமக்ளுக்கு குடிநீர் வழங்குவது கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடும் செய்து தராததால் பொதுமக்கள் குடிநீருக்கு அல்லாட வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கையால் இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சிக்கான ஜனாதிபதி விருது வாங்கிய கீரப்பாளையம் இன்று திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால் முற்றிலும் முடங்கியது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சனி, ஏப்ரல் 24, 2010

டில்லியில் உள்ளாட்சி விழா ஊராட்சி தலைவர் பங்கேற்பு


புவனகிரி:

            டில்லியில் நடக்கும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் பங் கேற்கிறார்.
 
                  கீரப்பாளையம் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராஜன். ஒருங்கிணைந்த முழு ஊரக சுகாதார திட்டத்தை நன்கு செயல்படுத்தியதற் காக கடந்த 2007ம் ஆண்டு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ஒரத் தூர் ஊராட்சியில் செலவினங்களை குறைத்து வருவாய் பெருக்கம் செய்தமைக்ககாகவும், பதிவேடுகள் மற்றும் கணக்குகள் சரியாக பராமரித்தமைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நன்கு செயல்படுத்தியமைக்காகவும் மாவட்ட நிர்வாகம் ஒரத்தூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்தனர். அதனையொட்டி திட்ட அலுவலர் ராஜஸ்ரீ பரிந்துரையின் பேரில் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் டில்லியில் இன்று (24ந் தேதி) நடைபெறும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஊராட்சி தலைவர் செல்வராஜன் பங்கேற்கிறார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

விருத்தாசலம், சிதம்பரத்தில் மின் தடை நேரம் மாற்றம்


விருத்தாசலம் : 

          விருத்தாசலம் பஸ் நிலையப் பகுதியில் இன்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                விருத்தாசலம் நகர எல் லைக்குட்பட்ட வயலூர், புதுக்குப்பம், காலேஜ் ரோடு, சரோஜினி நகர், பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, புதுப்பேட்டை, பூதாமூர், சிதம்பரம் ரோடு, கடை வீதி, சேலம் ரோடு, மணலூர், காந்தி நகர், கம்பர் தெரு, பெண்ணாடம் ரோடு, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கான மின் தடை நேரம் இன்று (19 ம் தேதி) முதல் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம்: 

                   சிதம்பரம் மற்றும் பு.முட்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், அண்ணாமலை நகர், மாரியப்பா நகர்  புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (19ம் தேதி) முதல் காலை 9மணியில் இருந்து 12 வரையிலும்,  காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரையிலும், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

downlaod this page as pdf

Read more »

திங்கள், ஏப்ரல் 12, 2010

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

 சிதம்பரம் : 

              அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் பள்ளி செல்ல குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்தது.
 
           பரங்கிப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவசண்முகம் பணியை துவக்கி வைத்தார். சம்மந்தம் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, கவுன்சிலர் ரங்கன் பங்கேற்றனர். 

               கீரப்பாளையம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்பார்வையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 15ம் தேதி வரை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
 
விருத்தாசலம்: 

                       புலியூர் ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் பள்ளி செல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் சுரேஷ், தேவராஜன் ஆகியோர் 14 வயதிற் குட்பட்ட பள்ளி செல்லா மாணவர்களை கணக்கெடுத்தனர்.

downlaod this page as pdf

Read more »

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 3 நாள் நிதி நிலை விளக்க கூட்டங்கள்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் 3 நாட்கள் நடக்கிறது. 

இது குறித்து தி.மு.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: 

                     2010-2011ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங் கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் கீழ்கண்ட விவரப்படி நடக்கிறது. மங்களூர் ஒன்றியத்தில் 10ம் தேதியும், கம்மாபுரத்தில் 11ம் தேதியும், குறிஞ்சிப்பாடியில் 12ம் தேதியும் நடக்கும். கூட்டத்தில் டாக்டர் காஞ்சனா கமலநாதன் பேசுகிறார். புவனகிரி, கீரப்பாளையம், பண்ருட்டி நகரம் முறையே 10, 11, 12 தேதிகளில் செங்கை சந்தானம் பேசுகிறார். விருத்தாசலம் ஒன்றியம், நல்லூர், விருத்தாசலம் நகரம் 10, 11, 12ம் தேதிகளில் கோவை சம்பத் பேசுகிறார். பண்ருட்டி ஒன்றியம், அண்ணாகிராமம், கடலூர் ஒன்றியத்தில் முறையே 10, 11, 12 தேதிகளில் தமிழ் பேரின்பன் பேசுகிறார். பரங்கிப்பேட்டை ஒன்றியம், குமராட்சி ஒன்றியம், கடலூர் நகரம் ஆகிய இடங்களில் முறையே 10, 11, 12 தேதிகளில் தாம்பரம் ஏகாம்பரம் பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


downlaod this page as pdf

Read more »

வியாழன், ஏப்ரல் 01, 2010

புவனகிரியில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்


புவனகிரி :  

                  கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி திட்டத் தில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக் கான பயிற்சி முகாம் நடந்தது.
 
                      வேளங்கிப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணாபுரம் பாலகணபதி, கீரப்பாளையம் தமிழ்மணி தேசிய இடைநிலை கல்விக்குழு நிதியினை கையாளுதல், கணக்குகளை பராமரித்தல், எஸ்.எம்.டி.சி.மூலம் பள்ளியில் நடைபெற வேண்டிய செயல்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டபணிகள் குறித்து விளக்கினர். முன்னாள் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் மக்களின் பங்கு குறித்து பேசினார். சிதம்பரம் சுற்றியுள்ள 11 பள்ளிகளிலிருந்து தலா ஐந்து பேர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், மார்ச் 18, 2010

சேத்தியாத்தோப்பை தாலுகாவாக பிரிக்க வேண்டும்: தே.மு.தி.க.,

சேத்தியாத்தோப்பு:

               சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவா பிரிக்க வேண்டும் என தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்தில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தே.மு. தி.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளார் லூர்துசாமி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சபா சசிகுமார், மாலை செயற்குழு உறுப்பினர் ராமையன், மாவட்ட அமைப்பாளர் லட்சுமிகாந்தன், இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் சீனு உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் கீரப்பாளையம் ஒன்றியம் சார்பில் 10 பேர் சென்று தேர்தல் பணியாற்றுவது, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் அமைத்து தே.மு.தி.க., கொடியேற்று விழா நடத்துவது, சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 16, 2010

மாற்று திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

புவனகிரி: 
 
                   கீரப்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாற்று திறனுடைய மாணவர்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மணிவாசகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மாற்று திறனுடைய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சுமதி, பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன் பங்கேற்றனர். சிறப்பு ஆசிரியை கல்பனா நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 09, 2010

ஒரு மாதமாக மினி பஸ் இயங்காததால் டி.புதுப்பாளையம் மாணவர்கள் அவதி

கடலூர் :

                   டி.புதுப்பாளையத்திற்கு செல்லும் மினி பஸ்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளதால் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பஸ்சிற்காக மூன்று கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.
 
                         கடலூர்-டி.புதுப்பாளையத்திற்கு நான்கு மினி பஸ்கள் இயங்கி வந்தன. இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக் கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னை காரணமாக இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரண்டு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்த பஸ்களும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், பொதுமக்கள் கடலூருக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் தினமும் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி மாணவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து, டி.புதுப்பாளையத்திற்கு பஸ் இயக்க வேண்டும். ஏற்கனவே கடலூரிலிருந்து டி.புதுப்பாளையம் வழியாக கீரப்பாளையம் வரை சென்று வந்த அரசு பஸ்சை மீண் டும் இயக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.

Read more »

சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

கீரப்பாளையம் ஒன்றியத்தில் ரூ.26 லட்சம் திருமண உதவி


சேத்தியாத்தோப்பு : 

             கீரப்பாளையம் ஒன்றியத்தில் 26 லட்ச ரூபாய் திருமண உதவி திட்ட நிதியை சேர்மன் செந்தில்குமார் வழங்கினார்.
 
            தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் கீரப்பாளையம் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி வரவேற்றார். விழாவில் 132 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் 26 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலைகளை ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் வழங்கினார். விழாவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலு, தி.மு.க., மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சபா நாயகம், தி.மு.க., பரதூர் அமைப்பாளர் பாலு, ஆயிப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராமன் நன்றி கூறினார்.

Read more »

புதன், பிப்ரவரி 24, 2010

மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

புவனகிரி: 

          கீரப்பாளையம் வட்டாரத்தில் உளுந்து விதை மற் றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                        சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம், நந்தீஸ்வரமங்கலம் வேளாண் விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உளுந்து "டி9' சான்று விதைகள் கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிங்சல்பேட், நுண்ணுரம் 50 சதவீத மானியத்திலும், ஐசோபோம் எண்ணைவித்து, தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் ஜிப்சம் 50சதவீத மானிய விலையிலும் வழங்கப்படுகிறது என கூறப்பட் டுள்ளது.

Read more »

திங்கள், பிப்ரவரி 22, 2010

மணிலாவில் நல்ல மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் உரம்

சிதம்பரம் : 

           மணிலா பயிரில் நல்ல மகசூல் பெற 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம் உரம் விற்பனை செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு

             சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்களில் விவசாயிகள் நலனுக்காக ஜிப்சம் 50 சதவீத மானிய விலையில் கீரப்பாளையம் நந்தீஸ்வரம் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணை வித்து பயிருக்கு எக்டேருக்கு 200 கிலோவும், பயறு வகைகளுக்கு 110 கிலோவும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மணிலாவுக்கு இடுவதால் மணிலாவில் விழுதுகள்  நன்கு உருவாகவும், காய்கள் திரட்சியாகவும் இருக்கும். எனவே மணிலாவில் ஜிப்சம் போட்டு அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior