உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குடும்ப அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்ப அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 01, 2012

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3 வரை ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், மார்ச் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை, 1-1-2012 முதல் 31-12-2012 வரை, மேலும் ஓராண்டிற்கு நீடித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. 30-12-2011 அன்று புயல் வீசிய காரணத்தால் கடலூர் மாவட்டத்தில், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து, குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாத காரணத்தால், 10-3-2012 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. 

            எனவே இதுவரை குடும்ப அட்டைகளை புதுப்பிக்காதவர்கள், 10-3-2012-க்குள் தங்களது குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-3-2012-க்குள் புதுப்பிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








Read more »

புதன், பிப்ரவரி 29, 2012

இணையத்தளத்தில் குடும்ப அட்டை புதுப்பிக்கலாம்

        தமிழகத்தில் குடும்ப அlட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், 

          தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

         மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


 அதன்படி பொதுமக்கள்


     

      ன்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.  

           ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.

முகவரி


http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do



Read more »

வியாழன், டிசம்பர் 29, 2011

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்




தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


           தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்,  ஓராண்டிற்கு  நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின்  மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

              குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை  குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.  எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து  இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி சனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

             எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.   அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

            குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சனி, டிசம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம்

கடலூர்:
 
          போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

           கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ.1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம் வழங்கப்படும்.  தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.  

தகவல் தெரிவிக்கும் அதிகாரிகளின் செல்போன் எண்கள்: 

மாவட்ட விநியோக அலுவலர் 9445000209. 

வட்ட வழங்கல் அலுவலர்கள்: 

கடலூர் 9005000210. 
சிதம்பரம்: 9445000211. 
காட்டுமன்னார்கோயில் 9445000212.
திட்டக்குடி 9445000214. 
விருத்தாசலம் 9445000213. 
பண்ருட்டி 9445000215. 
குறிஞ்சிப்பாடி 9445796405.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior