உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குறிஞ்சிப்பாடி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 22, 2011

வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் : கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு லாரிகளில் திரண்டு வந்த கிராம மக்கள்

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் முடிவில் கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி ராமர் வெற்றி பெற்றதாக மைக் மூலம் அறிவிக்கப்பட்டது.

             அதன்பிறகு சிறிது நேரத்தில் பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக மினாட்சி பழனிவேல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜெயலட்சுமிராமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.  மறு எண்ணிக்கை நடத்த கோரியும் பலனில்லை.   இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி ராமர் மற்றும் அந்த பகுதி கிராமமக்கள் சுமார் 200 பேர் இன்று 2 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்றனர்.

              வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுப்போம். அதற்கு மறுத்தால் நாங்கள் கொண்டு வந்துள்ள எங்களுடைய ரேசன்கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

            அதேபோல் கடலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கண்ணாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு அரண் பிரசாத் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு தனக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என அருண்பிரசாத் குற்றம் சுமத்தினார்.   
            அதைத்தொடர்ந்து இன்று காலையில் அருண்பிரசாத் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேர் இன்று 6 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் தங்களுடைய ரேசன் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை வைத்திரந்தனர். கண்ணாடி ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் ரேசன்கார்டுகள் மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

வடக்குத்து ஊராட்சியில் புதிய பள்ளி:கிராம மக்கள் அரசுக்கு நன்றி


நெய்வேலி:
           
              வடக்குத்து ஊராட்சியில் அரசு சார்பில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங் கப்பட்டதையடுத்து கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

           குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட வடக்குத்து கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி துவங்கப்பட வேண்டுமென அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் பரிந்துரையின் பேரில் வடக்குத்து கிராமத்தின் கிழக்கு பகுதியில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.  இந்தப் பள்ளிக் கென சொந்தமாக கட்டடம் அரசு செலவில் கட்டப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கூடம் வாடகை கட்டடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. அதுபோலவே வடக்குத்தை அடுத்துள்ள சந்தைவெளிப்பேட்டையில் இயங்கி வந்த ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

Read more »

வெள்ளி, ஜூன் 25, 2010

குறிஞ்சிப்பாடி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து வடலூரில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி:

                 குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேட்டினை கண்டித்து அ.தி.மு.க.,வினர் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

             குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேடு, பேரூராட்சி ன்றியங்களில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். வடலூர் பேரூராட்சி செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ம.தி.மு.க., ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, தண்டபாணி, நமச்சிவாயம், ராமலிங்கம், செல்வராணி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துக் கொண்டனர். அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு, சிவசுப்ரமணியம், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராமலிங்கம், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெங்கடாஜலபதி, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ரஜினி, அம்பு, முத்துலிங்கம், பொது குழு உறுப்பினர் காமராஜ், சவுந்தரராஜ், உதயராஜ், தொழில் சங்க மணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Read more »

புதன், ஜூன் 16, 2010

குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம்

கடலூர்:

                    குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஜூன் 16) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்:

காலை 9 மணி - பூண்டியாங்குப்பம் நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
மாலை 3 மணி: கருப்பஞ்சாவடி நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
3-30 மணி: வழுதலம்பட்டு இலவச கலர் டிவி வழங்கும் விழா. 
மாலை 4 மணி: கள்ளையங்குப்பம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. 4-30 மணி: குண்டியமல்லூர் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. மாலை 5 மணி: கொத்தவாச்சேரி இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior