உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குறிஞ்சிப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிஞ்சிப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 24, 2012

பிளஸ் 2 தேர்வில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி : 

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் 389 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி சவுமியா

தமிழ் பாடத்தில் 188 மதிப்பெண்கள், 
ஆங்கிலம் 174, 
இயற்பியல்192, 
வேதியியல் 189,
உயிரியல் 166, 
கணிதம் 197 
மதிப்பெண்களுடன்1200க்கு 1106 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

மாணவர் நிர்மல் 
வேதியியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண், 
கணிதம் 199, 
இயற்பியல் 195 மதிப்பெண்களுடன்
1200க்கு 1098 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.


மாணவர் யுவராஜ் 1200க்கு 1082 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.

வணிகவியல் பாடத்தில் மாணவி பாக்கியலட்சுமி 200க்கு 200 பெற்றார். 
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர், பெற்றோருக்கு பள்ளி செயலர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.



Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா

குறிஞ்சிப்பாடி :

      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

       தமிழ்த்துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி பேராசிரியர் முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் முனைவர் அகரமுதல்வன் கட்டுரை, கவிதை, கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினர். விளையாட்டு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் முனைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றி கல்லூரில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

       விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பி.பி. எ., பிரிவு மாணவர்களும், இரண்டாவது இடத்தை பி.காம்., பிரிவு மாணவர்களும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மேலாளர் சிவராஜ், உதவிப் பேராசிரியர் வேல்முருகன், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.





Read more »

வியாழன், பிப்ரவரி 09, 2012

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/6b576a00-aa1b-42bb-927f-547ccadfd448_S_secvpf.gif
 
குறிஞ்சிப்பாடி:
 
          குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் அண்மையில்  நடைபெற்றது.
 
        தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.  
 
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியது:-
 
         இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.
 
         இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
 
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது 
 
          தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
             மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கியது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேரமான், வணிகவியல் துறைத் தலைவர் சிவசங்கரன், பேராசிரியர் தினேஷ்பாபு செய்திருந்தனர்.



Read more »

புதன், ஜூலை 27, 2011

கடலூர் புலியூர் காட்டுசாகையில் பா.ம.க - தே.மு.தி.கவினர் மோதல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/92c9f6d1-b114-42ed-8426-055f70799da5_S_secvpf.gif
 
கடலூர்:

             குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் அருள்ஜோதி (வயது 38). தே.மு.தி.க. மாவட்ட தொண்டரணி தலைவராக உள்ளார். 
 
             இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரான திருமால்வளவனுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அருள்ஜோதியின் தந்தை ரங்கநாதன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் தகராறு செய்து ரங்கநாதனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தடுக்க முயன்ற தே.மு.தி.க.வை சேர்ந்த குமார், முருகன் ஆகியோரையும் அவர்கள் கத்தியால் குத்தினார்கள்.

             இதில் காயமடைந்த ரங்கநாதன், குமார், முருகன் ஆகியோர் கடலூர் அர2 மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தொகுதி எம்.எல். ஏ. சிவக்கொழுந்து நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது கடலூர் நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் வைத்திய நாதன், கடலூர் நகர துணை செயலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 

 

Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

குறிஞ்சிப்பாடி : 

           குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. 

              கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வணங்காமுடி, அரசு கல்லூரி பேராசிரியர் தமிழ்செல்வன், அறிவழகன், முன்னாள் மாணவர் விஷ்ணுதாஸ் அகியோர் பேசினர். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக உறுப்பினர் ராமலிங்கம், வைத்தியலிங்கம், சுந்தரமூர்த்தி, மோகன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior