உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கூட்டுறவு மருந்துக் கடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டுறவு மருந்துக் கடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கடலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து விற்பனை நிலையம்

கடலூர் : 

         கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 50 மருந்து கடைகளை புதியதாக திறக்கவேண்டுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் ஒரு பிரிவும், புதுப்பாளையத்தில் மற்றொரு மருந்து பிரிவும் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

               புதிய மருந்து பிரிவை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இணைப்பதிவாளர் வெங்கடேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு அதிகாரி மிருணாளினி உட்பட பண்டகசாலை ஊழியர்கள் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களின் நலன்கருதி இப்பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read more »

வியாழன், நவம்பர் 18, 2010

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் மருந்துகள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:
                  கடலூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை (மார்க்கெட்டிங் சொசைட்டி) சங்கங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                57-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது. 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியது:

                    கடலூர் மாவட்டத்தில் 2007-08-ம் ஆண்டில் 400 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடியும், 2008-09ம் ஆண்டில் 8,300 குழுக்களுக்கு ரூ.72 கோடியும், 2009-10ம் ஆண்டில் 12,462 குழுக்களுக்கு ரூ.106.5 கோடியும் சுழல்நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.130 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 6 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

                கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டியில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து உருக்குலைந்து கிடந்தன. அவற்றுக்கு ரூ.42 கோடி மானியம் வழங்கப்பட்டது இந்த ஆட்சியில் என்றார் பன்னீர்செல்வம். 

                விழாவுக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்ஸிஸ் மேரி ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

                    கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் எஸ்.ஆர். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் ந.மிருணாளினி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் 

                          முன்னதாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்கர்கள், பூசாரிகள் 399 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கராஜ், துணை ஆணையர் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள்: கோ.சி. மணி


       தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 

சென்னை பெசன்ட் நகரில் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்து கோ.சி. மணி கூறியதாவது: 

             கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்து கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்குகின்றன. இதே போல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், பூங்காநகர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம், பாடி ஆகிய இடங்களிலும் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

               இந்த கூட்டுறவு மருந்தகங்களில் சித்தா, யுனானி, ஆங்கில மருந்துகள் உள்பட அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும். இந்த மருந்துக் கடைகளில் அனைத்து விதமான மருந்துகளும் தரமாகவும், ஏழை மக்களின் வசதிக்காக குறைவான விலையிலும் கிடைக்கும். மேலும் இதில், தேனாம்பேட்டை மருந்துக் கடை 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. மற்ற கடைகள் காலை 9  மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

           இந்த மருந்துக் கடைகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, கூட்டுறவு மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்றார் அவர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஸ்வரன் சிங், இந்திய முறை மருத்துவர்களின் கூட்டுறவு மருந்தக (இம்ப்காப்ஸ்) தலைவர் டாக்டர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior