உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கைத்தறி கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைத்தறி கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 23, 2010

கைத்தறி கண்காட்சி துவக்கம்


நெய்வேலி: 

            நெய்வேலி டவுன்ஷிப் கோ-ஆப்டெக்ஸ் கோடை கால கைத்தறி கண்காட்சி துவக்க விழா நடந்தது.
 
                  நெய்வேலி டவுன்ஷிப், மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா கடந்த 16ம் தேதி நடந்தது. கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை குறிஞ்சிப்பாடி உதவி கல்வி அலுவலர் செலின்மேரி மற்றும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் தென்றல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். இந்த ஆண்டு கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை முன்னிட்டு புதிய ரக பட்டு, அனைத்து ரக கைத்தறி சேலைகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் திரைச் சீலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ஜெயபால், விற்பனை மேலாளர் சோமசுந்தரம் மற்றும் மேலாளர்கள் கல்யாணசுந்தரம், தேவராசன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 22, 2010

சிதம்பரம் கோ- ஆப்டெக்சில் கோடை விற்பனை கண்காட்சி


சிதம்பரம் : 

                  சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் கோடை கால விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது.
 
            சிதம்பரம் மேலவீதியில் கோ-ஆப் டெக்ஸ் துணி விற்பனை நிலையத்தில் பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை கால விற்பனை மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது. அண்ணாமலை பல்கலைக்கழக பி.ஆர்.ஓ., செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
                  இந்த ஆண்டு கோடை காலத்திற் கென தோப்பூர், வனவாசி, கோயமுத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை போன்ற புகழ்மிக்க கைத்தறி சேலைகள், புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சாமுத் திரிகா பட்டு சேலைகளும் இடம் பெற்றுள்ளது. அதே போன்று ஆண்களுக்கான காட்டன் ரெடிமேட் சட்டை புதிய டிசைன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சிதம்பரம் கோ-ஆப்டெக்சின் இந்த ஆண்டு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு வைக்கப் பட்டுள்ளது என வட்டார மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் விற்பனை நிலைய மேலாளர் தில்லை மதிவாணன், கவுரி கடலூர் மண்டல உற்பத்தி மேலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதன், மார்ச் 10, 2010

சிதம்பரத்தில் கைத்தறி கண்காட்சி

சிதம்பரம்:

              சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் இந்தியன் கல்சுரல் கிராஃப்ட் சார்பில் அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வருகிற மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெய்ப்பூர் பட்டியாலா, அனார்கலி சுடிதார்கள், மதுரை சுங்குடி புடவைகள், மங்கல்கிரி போச்சம்பள்ளி, ஒரிசா பெங்கால் காட்டன் புடவைகள் ஜெய்ப்பூர் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஹைதராபாத் முத்து, பவளம், ராசிகற்கள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.கைத்தறி பொருள்களுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

கைத்தறி கண்காட்சி

நெய்வேலி:

                      நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கைத்தறியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட இக் கண்காட்சியில் தமிழக அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தாரின் விதவிதமான சேலை ரகங்கள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், வேஷ்டிகள், துண்டுகள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான கைத்தறி துணிகளை வாங்கிச் சென்றனர். முன்னதாக, கண்காட்சியை கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பி.குப்புராஜ் திறந்துவைத்தார். முதல்வர் அரங்கராசன் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஜி. தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior