உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என கோரி சாலை மறியல்

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தில் உணவு பாத்திரத்துடன் சாலையில் அமர்ந்து அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட் டில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் விடுதியில் சமைத்த உணவை பாத்திரத்துடன் எடுத்து வந்த மாணவர்கள் விருத்தாசலம்- ஆலடி ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் சையத் ஜாபர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 10 நாட்களாக விடுதியில் உணவு சரிவர வழங்கப்படவில்லை என்றும், சமைத்த உணவுகளில் பூச்சி இருந்ததாகவும், இது குறித்து வார்டனிடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என்றும், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும் மாணவர் கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் சையத் ஜாபர் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றன

Read more »

வியாழன், டிசம்பர் 20, 2012

கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்

விருத்தாசலம்:

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், என்.எஸ்.எஸ்., திட்டம், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் (பொறுப்பு) சந்திரகுமார், கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணன், தாசில்தார் காந்தி, சித்த மருத்துவர் தவமணி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ராஜசேகர் வரவேற்றார். ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.நிகழ்ச்சியில், சித்த மருத்துவர் செல்லையா, திட்ட அலுவலர் சிவக்குமார், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், நவம்பர் 08, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில்விலங்கியல் மன்றம் துவக்க விழா

விருத்தாசலம்:

       விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், விலங்கியல் மன்றம் துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விலங்கியல் மன்ற துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கோவிந்தன் தலைமை தாங்கினார். விலங்கியல்துறைத் தலைவர் முனைவர் சாந்திஜெயரதி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சுந்தரசெல்வன் வரவேற்றார்.

       கல்லூரியில் 92ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் சாட்டை சினிமாஇயக்குனர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரிமுதல்வர் கோவிந்தனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.  விலங்கியல் துறை இரண்டாமாண்டு மாணவி துர்கா நன்றி கூறினார்.

Read more »

திங்கள், செப்டம்பர் 24, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்.சார்பில் செஞ்சுருள் சங்க துவக்க விழா

விருத்தாசலம்:


   விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழா மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் எல்.சி.டி., புரொஜக்டர் மூலம் செஞ்சுருள் சங்க செயல்பாடு மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தார். பேராசிரியர்கள் முத்தழகன், சிவக்குமார், துரைராசு, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜசேகர் உட்பட மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.திட்ட அலுவலர் பாலசங்கு நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம் :

       விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேர்முக பொது வாய்மொழித் தேர்வு நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு, தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வகுமாரன் தேர்வாளராகவும், திருவெண்ணெய்நல்லூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கதுரை நெறியாளராகவும் இருந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட நரிக்குறவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த நேர்முக பொது வாய்மொழித் தேர்வில் தமிழ்த்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று, கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.







Read more »

வெள்ளி, ஜூலை 06, 2012

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior