உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சமத்துவபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமத்துவபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

            கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், வழங்காத உறுதிமொழிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். 

           கடலூர் அருகே வண்டிக்குப்பம் கிராமத்தில் சமத்துவபுரத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடியில் அமையவுள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். அந்த விழாவில் 2 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, 400 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். மேலும் ரூ. 32.88 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

         அத்துடன் ரூ. 133.15 கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 25.29 கோடிக்கான அரசு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இவ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது: 

            பல அரசு விழாக்களில் நல திட்ட உதவிகளை முழுமையாக வழங்குவதில்லை. சிலருக்கு வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ள செய்வார்கள். அதுதான் மரபாக இருந்துவருகிறது. ஆனால் நான் நல திட்ட உதவிகள் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டுவந்தேன். நல திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்கிவிட்டு, அதன் பின்னரே மேடையைவிட்டு இறங்குகிறேன்.  தற்போது இங்கு நல திட்ட உதவிகள் வாங்குவோர், அவற்றை வாங்கும்போதே புகைப்படம் எடுத்து, அவர்கள் மீண்டும் இருக்கையில் சென்று அமரும்போது அந்த புகைப்படம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    இவ்வாறு பல மணி நேரம் நின்று நல திட்ட உதவிகளை வழங்குவதன் காரணம்,  நல திட்ட உதவிகளைப் பெறும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். 

          திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைகிறது என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படுகிறது. இதுவரை மொத்தம் 125 மணி நேரம் செலவிட்டு நல திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது.  1996-ல் பெரியார் சமத்துவபுர திட்டம் தொடங்கப்பட்டது. 2001 வரை 148 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமத்துவபுரங்கள் கட்டப்படவில்லை. 2006-க்கு பின்பு மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

           95 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.   இங்கே இந்த விழாவில் ஆண்கள் இடம்தர மறுத்ததால் பெண்கள் பின்னால் அமர்ந்து இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலின்போது அளித்த, அளிக்காத உறுதிமொழிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார் ஸ்டாலின். விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்றார். 

              மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், துரை.ரவிக்குமார், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்பாராஜ் ஆகியோர் பேசினர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

அடிப்படை வசதிகள் இல்லாத பெரியார் நினைவு சமத்துவபுரம்


சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர்.
பண்ருட்டி:

            பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என அப் பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் ஊராட்சியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் ரு.158 லட்சம் செலவில், 100 வீடுகள், விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளிட்டவைகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெறாத நிலையில் திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டதால் அவசரக் கோலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.9.2009-ல் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்று 9 மாதங்களே ஆன நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள்  பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.

              சமத்துவபுரத்தில் உள்ள வீதிகளின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் வெட்டப்பட்டுள்ளதே தவிர கால்வாய் கட்டப்படவில்லை. இதில் மண் சரிந்தும், செடிகள் முளைந்தும் உள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரூ5.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இன்றி அதில் உள்ள மின் விளக்குகள் கழன்று தொங்கிக் கொண்டுள்ளது. முந்திரிக் காடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த குடியிருப்பு வீதிகளில் ஓரிரு விளக்குகளைத் தவிர மீதமுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தெரு விளக்கும், குடியிருப்புகளைச் சுற்றிலும் சுற்றுச் சுவரும் அமைத்துக் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த மக்கள் கூறினர்.

இது குறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண்குமாரிடம் கேட்டதற்கு, 

             ""வீதிகள் ஓரம் வெட்டப்பட்டுள்ள பள்ளம் மழை நீர் வழிந்தோட தான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் கால்வாய் கட்டும் திட்டமில்லை. தெரு விளக்கு, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். தமிழக முதல்வரின் கனவு திட்டமான சமத்துவபுரத்தில் இப்படி சில குறைகள் இருப்பது ஆட்சியாளருக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் கவலை தருவதாகும் என அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறினர்.

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கட்ட இடம்: டி.ஆர்.ஓ., நடராஜன் பார்வை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்ய உள்ள இடங்களை டி.ஆர்.ஓ., பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இடம் சமத்துவபுரம் கட்ட போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தன்மை மற்றும் வளம் குறித்து டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வெங்கடாசலம், மயில்வாகணன், ஷாஜகான், தேத்தாம் பட்டு ஊராட்சி தலைவர் காந்தி செல்வராஜன் உடன் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு பணிகளை உடனே துவங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Read more »

திங்கள், ஜூன் 07, 2010

சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு! சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: 

                    விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்தை அறிய நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் தீர்வு ஏற்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.

                   விருத்தாசலம் அடுத்து உள்ளது இருப்பு ஊராட்சி. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த இந்த ஊராட்சிக்கு உட்பட்டு வடக்கிருப்பு, தெற்கிருப்பு, கிழக்கிருப்பு, அதியமான்குப்பம், கோவிலாங்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி சுமார் 2,500 குடும்பங்களையும், சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட பெரிய ஊராட்சியாகும்.
 
                    இருப்பு ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் தரிசு நிலம்(சர்வே எண் 157/1,2,3) உள்ளது. அதில் 40 ஏக்கர் முந்திரி தோப்பும், மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் பள்ளி, கோவில் உள்ளது. இதில் கோவிலின் எதிரே உள்ள 25 ஏக்கர் ( சர்வே எண் 157/1) காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் சமத்துவபுரம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு ஊராட்சி தலைவர் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினர்.
 
                    அதனையேற்று வருவாய் துறை அதிகாரிகள் 12 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தை கலெக்டர் மற்றும் திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சமத்துவபுரம் கட்டுவதற்கான பூர் வாங்க பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருப்பு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் இங்கு சமத்துவபுரம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி மக்களின் கருத்தை அறியுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இருப்பு ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பத்மா, கவுன்சிலர் முருகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் மணி, ஒன்றிய சேர்மன் செல்வராசு, மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ்மேரி, பி.டி.ஓ., தமிழரசி, வி.ஏ.ஓ., ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் மக்களிடம் கருத்துகளை கேட்டு வாக்கெடுப்பு நடத்தினர்.

இதுகுறித்து கம்மாபுரம் பி.டி.ஓ., தமிழரசி கூறுகையில், 

                      கூட்டத்தில் கலந்து கொண்ட 500 நபர்களில் சமத்துவபுரம் வேண்டாம் என 137 நபர்களும், வேண் டும் என 58 நபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நடுநிலை வகித்துள்ளனர். மக்களின் கருத்து குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இங்கு சமத்துவபுரம் அமைப்பதா? இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றார்.

ஊராட்சி தலைவர் பத்மா கூறுகையில், 

                       அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சமத்துவபுரம் அமைந்தால் நாம் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்பதால் சிலர் மக்களை தூண்டிவிட்டு இப்படி செய்கின்றனர். 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட் சியில் 100 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதல் தெரிகிறது என்றார்.
 
இருப்பு கிராமத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகவேல் கூறுகையில், 

                             இங்கு சமத்துவபுரம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. பொது இடத்தை ஆக்கிரமித்து வரும் சிலர் மக்களை தூண்டி விட்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எதிர்ப்பு தெரிவித்த சக்திவேல் கூறுகையில்:

                        பொது இடத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவான இந்த இடத்தில் மருத்துவமனை, பள்ளி, மாணவர் விடுதி உள்ளிட்ட ஊருக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காகதான் தடுக்கிறோம். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு பொது இடம் கிடையாது. மேலும் இங்கு நடைபெறும் அரசியம்மன் கோவில் திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது வாகனங்களை நிறுத்தவும், வேறு சில பயன்பாட்டிற்காக இந்த இடத்தை பயன்படுத்துவோம். பொதுமக்கள் நலன் கருதியே எதிர்ப்பதாக கூறினார். அரசின் திட்டமான சமத்துவபுரம் அமைக்க கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இருப்பு கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Read more »

ஞாயிறு, மே 02, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை



ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டு வருகிறது.இதில் கண்டியங் குப்பம், தேத்தாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் சமத்துவபுரம் அமைக்க முன்மொழிவு செய்யப் பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் வருகை தந்தார். கண்டியங்குப்பம் மற்றும் தேத்தாம் பட்டு கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை பார்வையிட்டார்.
                   
                மாவட்டத்தில் இந்த அண்டு ஒரு சமத்துவபுரம் அமைக்கப்படும். இதில் பார்வையிட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள இருப்பு, தேத்தாம்பட்டு, கண்டியங்குப்பம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை சமத்துவபுரம் அமைக்க இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என கூறினார். இதில் சிதம்பரம் ஆர். டி.ஓ., ராமராஜி, தாசில்தார் வீரபாண்டியன், மண் டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ. சுந்தரம் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior