உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சமுட்டிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுட்டிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 18, 2011

நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் மறுவாக்குப் பதிவு

கடலூர் மாவட்டம், நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது வரிசையில் நின்று வாக்களித்தவர்கள்
நெய்வேலி:

           வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் மறுவாக்குப் பதிவு நடந்த சமுட்டிக்குப்பம் கிராமத்தில் 83 சதவீத வாக்குகள் பதிவாயின. கடலூர் மாவட்டம், நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரத்தால் 55, 56 எண் வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டது. 

               வாக்குப் பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக சமுட்டிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பூவராகமூர்த்தி உட்பட 47 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.இதையடுத்து சமுட்டிக்குப்பம் வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என நெய்வேலித் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கந்தசாமி தெரிவித்தார். இதையடுத்து சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அமைதியான முறையில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

                 வாக்குப் பதிவை முன்னிட்டு சமுட்டிக்குப்பம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவின்போது விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. பிற்பகல் மதிய உணவு வேளையின் சற்று மந்தமாக இருந்த வாக்குப் பதிவு மாலை 3 மணிக்கு மேல் விறுவிறுப்பாகக் காணப்பட்டது. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாக்காளர்கள் இதுபோன்ற சம்பவங்கள் இத்தனை ஆண்டு காலத்தில் நடைபெற்றதில்லை. முதன்முறையாக மறுதேர்தல் நடைபெறுகிறது. இ

               துபோன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்பதை மனதில் கொண்டு வாக்களித்திருக்கிறோம் என்றனர் வாக்காளர்கள்.வாக்குப் பதிவு தொடங்கியது முதல் முடியும வரை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், தலைமை தேர்தல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், நெய்வேலித் தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் டி.டி.அந்தோணி, செலவு கண்காணிப்பு பாவையாளர் தினேஷ்சிங், மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் வாக்குப்பதிவு நடைபெறும் மையம் அருகே முகாமிட்டு இருந்தனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு விவரம் குறித்து ஆட்சியர் பெ.சீதாராமன் கூறியது. 

               வாக்குச்சாவடி 55, 56-ல் உள்ள மொத்த வாக்காளர்கள் 2,098.இதில் மறுவாக்குப் பதிவின் போது 1752 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இது சதவீத அடிப்படையில் 83 சதவீதமாகும்.13-ம் தேதி நடந்த வாக்குப் பதிவின் போது 88 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் ஆண்களைவிட பெண்கள் கூடுதலாக கலந்து கொண்டு வாக்களித்தனர்.



Read more »

வெள்ளி, ஜனவரி 14, 2011

பண்ருட்டி பகுதில் பன்னீர் கரும்பு விலை வீழ்ச்சி!


விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்டுள்ள பன்னீர்கரும்புகள்.
பண்ருட்டி:
            பன்னீர்கரும்பின் விலை வீழ்ச்சி அடைந்ததால் கரும்பு ஒன்று (கழி) ரூ.7 முதல் ரூ.9 வரை நிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

            பொங்கல் பண்டிகை என்றாலே பன்னீர்கரும்பு, மண்பானை, மஞ்சள் கொத்து ஆகியன மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  பண்ருட்டி வட்டாரப் பகுதியில் பன்னீர்கரும்பு, மஞ்சள் செழித்து வளர்ந்து வருகிறது. அதே போல் மண்பாண்டத் தொழில் செய்பவர்களும் அதிக அளவில் உள்ளனர்.  இப் பகுதியில் பத்திரக்கோட்டை, சத்திரம், திருவந்திபுரம், சமுட்டிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பன்னீர்கரும்பு அதிக அளவு பயிரிடப்படுகிறது. தற்போது பன்னீர்கரும்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இது குறித்து திரைப்படத் துறையைச் சேர்ந்த தங்கர்பச்சானின் சகோதரர் விவசாயி ப.தேவராசு  கூறியது:  

           சட்டிப் பானை, பன்னீர்கரும்பு வைத்து பொங்கல் கொண்டாடுவது ஐதீகம். தற்போது கலாசார மாற்றத்தால் பானையை தவிர்த்து உலோக பாத்திரத்துக்கு மாறிவிட்டனர். அதேபோல் பன்னீர்கரும்பு வாங்கி சுவைப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இக்காலத்தில் பன்னீர்கரும்பு விற்பனை என்பது இருநாள்கள்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் 400 ஏக்கர் பரப்பளவில் பன்னீர்கரும்பு பயிரிட்டிருந்தோம். தற்போது 200 ஏக்கர் பரப்பில்தான் பயிரிட்டுள்ளோம்.  

           இங்கு விளையும் கரும்பு பெங்களூர், சென்னை, ஆரணி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது. வியாபாரிகள் நிலத்திலேயே வந்து வாங்கி செல்வர். கடந்த ஆண்டு ரூ.12-க்கு மேல் விற்பனையான கரும்பு தற்போது ரூ.7 முதல் ரூ.9 வரைதான் விலை போகிறது.  இதனால் பாடுபட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ப.தேவராசு கூறினார். 

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 50 பேர் படுகாயம்

கடலூர் : 

                  கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

             கடலூர் அடுத்த சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். குறவன்பாளையத்தில் உள்ள இவரது உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நேற்று நடந்தது. விசேஷத்தில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீரப்பன் மற்றும் சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட் டோர் மினி லாரியில் குறவன்பாளையம் சென்றனர். லாரியை குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். ஒதியடிக்குப்பம் அருகே வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் மினி லாரியில் பயணம் செய்த சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சவுந்தலா (50), அஞ்சம்மாள் (40), தேவசுந்தரி (50), காந்திமதி (35), அம்சவள்ளி (27), இளஞ்சியம்(55), கல்பனா (25), செல்வராணி (45), பாக்கியம், ஆரியமாலா, காந்திமதி, புஷ்பா உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த கலெக்டர் சீத்தாராமன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன், தாசில்தார் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 

அமைச்சர் சார்பில் ஆறுதல்: 

                     அமைச்சர் சார்பில் அவரது உதவியாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior