உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சி.என்.பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சி.என்.பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 18, 2010

குறுவட்ட விளையாட்டுப் போட்டி சி.என்.பாளையம் மாணவி வெற்றி

நடுவீரப்பட்டு : 

                குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் கல்வி மாவட்ட மகளிர் உடற்திறன் கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடந்தது. 14 வயதுதிற்குட்பட்ட  மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தேவி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடம்: பன்னீர்செல்வம்

நடுவீரப்பட்டு: 

         அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலாவதாக உள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

சி.என். பாளையத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது :

                சி.என். பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக  நானே முன் வந்து தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்தேன். 1996ம் ஆண்டு நெல்லிக் குப்பம் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது தொகுதி முழுவதும் 15 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன. அதில் சி.என். பாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் பணிகள் நடந்தன.நமது முதல்வர் கிராம பகுதிகள் மற்றும் நகரங்களில் பாலம் கட்டி மக்கள் மனதில் இடம் பெற வைத்துள்ளனர். இந்த பாலம் இரண்டு ஊராட்சியை இணைக்கும் பாலம் என்பதால் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.  

                  கொள்ளிடத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பிலும், நொச்சிக்காடு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும்  பாலம் கட்டப்பட்டு வருகிறது.கருணாநிதி ஆட்சியில் சாதனைகள் பல நடந்து வருகின்றது. ஜெ., ஆட்சியில் சி.என்.பாளையம் ஊராட்சியில் ஏதாவது நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதா என எண்ணிப் பாருங்கள். இந்த அரசு சொன்னதை செய்யும் என பேசினார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

நரியன் ஓடை மண் கரையிலேயே கொட்டப்பட்ட அவலம்

நடுவீரப்பட்டு: 

          நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கரையில் மண் கொட்டியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

            நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடை ஆழப்படுத்தும் பணி நடந்தது. சி.என்.பாளையம் யாதவர் வீதி வழியாகத்தான் இந்த ஓடையில் இறங்கி சி.என்.பாளையம் நடுத்தெரு, யாதவர் தெரு, சொக்கநாதன் பேட்டை, காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் மற்றும் மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த ஓடையை தற்போது ஆழப்படுத்தி தோண்டப்பட்ட மண் அனைத்தையும் அங்கேயே கொட்டி கரையை மலை போல் உயர்த்தி விட்டனர். 

                    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மண் கரைந்து மீண்டும் ஓடைக்கே வரும் நிலை உள்ளது.மண் மேட்டை அகற்றி நடை பாதைக்கு வழி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

செவ்வாய், ஜூன் 22, 2010

சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு

நடுவீரப்பட்டு : 

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில், "தற்போது கால்நடைகளுக்கு புல் அதிகளவு கிடைக்காமல் கால் நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதில் வளர்க்க கூடிய குறைந்த நாட்களில் வளரக்கூடிய ரகங்களான கோ 3, கினியா ஆகிய ரக புல்கள் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மாதிரிக்காக வளர்க்கப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் வளர்த்து பயன் பெறலாம்' என கூறினார்.

 

Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நடுவீரப்பட்டு : 

                  பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Read more »

சனி, ஜூன் 12, 2010

கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

 உங்களால் முடிந்தால் உதவுங்கள் 
 
 
அனுப்புநர்:
S. நூர் முஹம்மது (டைலர்),
197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, 
கடலூர் மாவட்டம்.
அலைபேசி எண்: (+91) 9786453164
 
            அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
               நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!!  நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...
 
                   S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...
 
                 என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics)  படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.
 
                 மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.
 
                     இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
 
                    காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.
 
                  படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.
 
நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.
 
கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.
 
கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.
 
அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...
 
1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)
2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)
3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.
 
இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.
 
எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.
 
இப்படிக்கு,
தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...
எஸ். நூர் முஹம்மது (டைலர்)

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):
 
S. Noor Mohamed,
A/C # 6655, Indian Overseas Bank,
Naduveerapattu Branch (280),
Cuddalore District, Pin code – 607102.
 Mobile: (+91) 9786453164

Educational Help - Noor Md.pdf    


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior