உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுத்துக்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுத்துக்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1ee4a85d-bc68-4108-9bd5-fd1167de57dc_S_secvpf.gif
 
கடலூர்:

          கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

             அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரமகுருவுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் பரமகுரு அனுமதிக்கப்பட்டார். டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரமகுரு இறந்து போனார். பரமகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக கருதி ஆத்திரம் அடைந்த பரமகுருவின் உறவினர்கள் நோயாளிகள் பரிசோதனை அறை மற்றும் மருந்து-மாத்திரை வழங்கப்படும் அறை ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

              மேலும் டாக்டர் அறையில் இருந்த மேஜை-நாற்காலிகளை தூக்கி வீசி சூறையாடினார்கள். மேலும் டாக்டர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பிடுங்கி வீசினர்.   இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.  இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. வன்முறை கும்பல் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை கைகளால் உடைத்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது.  

              இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.    மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 

Read more »

திங்கள், நவம்பர் 22, 2010

கடலூர் அருகே வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாலையில் நாற்று நடும் போராட்டம்


சுத்துக்குளம் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாய் கிடப்பதைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்தும், இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர்
 
கடலூர்:
 
           இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூர் அருகே பாலம் கட்டாததால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும், சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் நாற்று நட்டும் போராட்டங்கள் நடத்தி தங்களின் எதிர்ப்பை ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தினர்.
 
                 கடலூரை அடுத்த சுத்துக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுத்தெரு, புதுத்தெரு பிரதானச் சாலையை சீரமைக்க வேண்டும். நாரை குளத்தில் இருந்து வெளியேறும் நீரால் போக்கு வரத்து பாதிப்பைத் தடுக்க, தரைப்பாலம் கட்ட வேண்டும். முதுநகர் ரயில்வே கேட் அருகே பெரியார் நகரில் தரைப்பாலம் கட்ட வேண்டும். சான்றோர் பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களைச் சரி செய்ய வேண்டும். 
 
               பீமாராவ் நகர் பகுதியில் தெருக்களைச் சீரமைக்க வேண்டும். மணக்குப்பத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் பழுதடைந்து சேறும் சகதியுமாக உள்ள சுத்துக்குளம் சாலையில் நாற்று நட்டும், மணக்குப்பம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும் போராட்டம் நடத்தினர்.
 
                     போராட்டங்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.மணிவண்ணன், சுரேஷ், ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் நேதாஜி, சிவானந்தம், வேல்முருகன், பி.தனுசு, காமராஜ், சந்திரசேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

புதன், ஜூன் 23, 2010

கடலூர் அருகே தொழிலாளி மர்மச்சாவு

கடலூர்:

             கடலூர் அருகே தொழிலாளி முருகதாஸ் (38) மர்மமான முறையில் இறந்து கிடந்தது, செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.  கடலூர் அருகே சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குருவி என்ற முருகதாஸ். கட்டுமானத் தொழிலில் கம்பி ஃபிட்டராகப் பணிபுரிந்தார். திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்ற முருகதாஸ் இரவு வீடு திரும்பவில்லை. 

                செவ்வாய்க்கிழமை காலையில் பார்த்தபோது, அவர் சுத்துக்குளம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தை கடலூர் முதுநகர் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முருகதாஸின் தம்பி கண்ணன் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இறந்துபோன முருகதாசுக்கு சாந்தி (30) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தகவல் அறிந்ததும் கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்று, முருகதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
 

Read more »

திங்கள், பிப்ரவரி 15, 2010

சுத்துக்குளத்தில்நிகும்பலா யாகம்

கடலூர்:

            சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கடலூர் முதுநகர் சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை யொட்டி "நிகும்பலா யாகம்' நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் முத்துக்குமாரசாமி செய்திருந்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior