உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுப்ரமணியபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப்ரமணியபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். 

                       பள்ளியின் செயலாளர் திருவடி துவக்கி வைத்தார். கண்காட்சியில் காற்று மற்றும் நீர் மாசுபடுத்தல் பற்றியும், இயற்கை உணவுகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். மேலும் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு தலைப்பின் கீழ் செயற்கைக்கோள் இயக் கத்திற்கு ஏற்ப பூமியின் அன்றாட நிகழ்வுகள் நடப்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் வீட்டில் திருட்டை தடுக்கும் வகையில் மதில் சுவரில் மின் இணைப்பு அலாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டும் மண்ணெண்ணெய்

கடலூர்: 

        குள்ளஞ்சாவடி அடுத்த பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட் டும் மண்ணெண்ணெய் வழங்குவதால் காலை 6 மணி முதல் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் அவலம் உள்ளது.

              குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் கிளை பொட்டவெளி ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் நாகம்மாள்பேட்டை, எஸ்.என்.நகர், சுப்ரமணியபுரம், தொண்டமாநத்தம், அக்ராவரம், பள்ளித் தெரு, எஸ்.புதுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,050 ரேஷன் கார்டுகள் உள்ளது. ரேஷன் கடையில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே மண்ணெண் ணெய் போடப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் பொது மக்கள் ரேஷன் கடையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், 

            "பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. எந்த நாள் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது என பொது மக்களுக்கு யாரும் தகவல் தெரிவிப்பதில்லை. ரேஷன் கடைவழியாக வருவோரிடம்  கேட்டறிந்து மண்ணெண்ணெய் வாங்க வரவேண்டியுள்ளது. மேலும் அரிசியும் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் வந்து வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டிற்கு அந்த மாதம் மண்ணணெண்ணெய், அரிசி வழங்கமாட்டார்கள்.  இதனாலேயே மண்ணெண்ணெய் வாங்குவதற்கு  பொது மக்கள் அதிகாலை 6 மணி முதலே வந்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்க வேண்டியுள்ளது' என்றனர்.

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

போக்குவரத்து மாற்றத்தால் அவதி! பொதுமக்கள் மறியல் செய்ய முடிவு

கடலூர்: 

                       கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

                          கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 7ம் தேதி முதல் சாலை தடை செய்யப்பட்டதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட் டது. அதன்படி கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலை வழியாக சென்று ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி சாலையை அடைகிறது. அதே போல் விருத்தாசலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியாக சிதம்பரம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் டவுன் பஸ்கள் மட்டுமே காரைக்காடு வழியாக இயக்கப்படுகிறது.

                    இந்நிலையில் காரைக்காடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அதிகளவில் தங்கள் பகுதியில் வாகனங்கள் செல்வதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கனரக வாகனங்கள் குள்ளஞ்சாவடி வழியாக திருப்பி விடப்பட்டது. போதிய பஸ் வசதி இல்லாததால் குள்ளஞ்சாவடியில் இருந்து முதுநகர் வரையுள்ள தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், சேடப்பாளையம், அன்னவல்லி, கண்ணாரப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கிராம பொதுமக்களும் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து சேடப்பாளையம், சுப்ரமணியபுரம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம்

 கடலூர்: 

                             அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம் கடலூர் அடுத்த சுப்பரமணியபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சுப்ரமணியபுரம் ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியன், வளையமாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், துணை தலைவர் உமாதேவன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிவபூஷ்ணம் வரவேற்றார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கும், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தமைக்காக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ஜெயவீரபாண்டியன், மோகன், மணிக்கண்ணன், சாம்பசிவம், மணிகண்டன், பாண்டுரங்கள், பழனிவேலு, சேதுமாதவன் உள்ளிட்டோர் கல்வி வளர்ச்சிக்காக அரசின் திட்டங்களை விளக்கி பேசினர்.

downlaod this page as pdf

Read more »

செவ்வாய், மார்ச் 23, 2010

உலக தண்ணீர் தினம் ஓவிய கண்காட்சி


கடலூர்:

                    உலக தண்ணீர் தினத்தையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூரில் ஓவிய கண்காட்சி நடந்தது.உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஓவிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் சுப்ரமணியபுரம் ஸ்ரீ ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தண் ணீரின் அவசியம் குறித்து வரைந்த 100 ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். தொண்டு நிறுவன செயலாளர் ஆறுமுகம், குமார், உமாதேவி, வக்கீல் தேசிகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior