உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுற்றுச்சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 02, 2012

தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் மாணவர் எம்.குருவிஷ்ணு

சிதம்பரம்:

           தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் பள்ளி மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

       தென்கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.  இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் மெமோரியல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணு (10) பங்கேற்று உரையாற்றினார்.  

           புவிவெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்தரங்கில் அவர் பேசினார். இக்கருத்தரங்கை சாம்சங் இன்ஜினியரிங், டுன்சா எக்கோ ஜெனரேஷன், கொரியா கிரீன் பௌண்டேஷன், கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் என்வயர்மென்டல் ஸ்டேடிஸ், சியோல் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.  இம்மாநாட்டில் உலகிலுள்ள மற்ற நாடுகளிலிருந்து 400 பேரும், கொரியாவில் இருந்து 350 மாணவர்களும் பங்கேற்றனர். உலகளவில் 7 நாடுகளில் இருந்து 5 மாணவர்கள் அவர்களது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள், கட்டுரைப்போட்டி மற்றும் டுன்சா எக்கோ ஜெனரேஷன் வளைதளத்தில் எழுதியதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

      டுன்சா எக்கோ ஜெனரேஷனின் 7-வது ஆசிய பசுபிக் இளம் தூதுவரான குருவிஷ்ணு தேர்வு செய்யப்பட்டவர்களில் வயதில் மிகவும் சிறியவராவார்.  உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றித் திரும்பிய மாணவரையும், அவரது பெற்றோர்கள் கே.மதிவாணன், ஏ.தரணி ஆகியோரையும் பள்ளித் தாளாளர் கீதாஅகோரம், முதல்வர் கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
















Read more »

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

 கடலூர்:

            சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்க, அரசு அறிவிக்கும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

 இதுகுறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது பூஜித்த விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் பிளாஸ்டர் ஆப் பாரிஸôல் தயாரிக்கப்பட்டு, இரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடும்.  எனவே பொதுமக்களுக்கு பின்வரும் வேண்டுகோள் விடப்படுகிறது:  களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத எவ்வித ரசாயனக் கலவை அற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

               இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்.  ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல், கடலுக்குள் 500 மீட்டர் தூரம் எடுத்துச்சென்று, அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டும் கரைக்கும்படி கேட்டுகொள்ளப் படுகிறார்கள். கடலூர் மாவட்டத்திóல் தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  

            விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, கொண்டாடும் படியும், சமய நல்லிணக்கத்தையும் வழுவாது பேணிக்காக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

சனி, ஜூன் 25, 2011

கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

கடலூர்:

           கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
  
வியாழக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தலைமையில் நடந்த, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தெரிவித்த கருத்துகள்:

              கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரசாயனக் கழிவுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வடிகால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீரை மாசுக் கட்டுபாடு வாரியம் அடிக்கடி சோதனையிட வேண்டும். 

             அத்தகைய வடிகால்களை, பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு, 2 ஆயிரம் மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.எனவே புற்றுநோய் ஆய்வில் ஈடுபடும் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இப்பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

             பல தொழிற்சாலைகள் ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்களை அனுப்பி வைக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.எனவே ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். ஆபத்தான ஆலைகள் பட்டியலில் உள்ள பல ரசாயனத் தொழிற்சாலைகள், பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றன. அனுமதி பெறாத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் ரசாயனப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டாங்கர் லாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

              ரசாயன தொழிற்சாலைகளில் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சிப்காட் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு, தனியாக வேலி அமைத்து மரங்களை வளர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்ட, காற்றில் பரவும் ரசாயனங்கள் குறித்த ஆய்வு விவரங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.




Read more »

வியாழன், ஜூன் 16, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

கடலூர்:

          கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு. திருமாறன் அண்மையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:

               கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களைக் கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாடு வாரியம் தவறிவிட்டது. சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் கொண்ட கண்கணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். சிப்காட் தொழிற்சாலை முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கட்டுப்படுத்த  வேண்டும்.  

              போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், கடலூர் அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் வசதிக்காக சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.  கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த, நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதைச் சரிசெய்து இலவச மனைப் பட்டாக்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை, முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். 

             ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தையும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.  தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாளர் திருமார்பன், மாநில நிதிச்செயலாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர்




Read more »

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:
            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன ஆலைகளை அகற்றக் கோரி, கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மூடப்பட்ட அந்த ஆலை, ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.சிப்காட் ரசாயன ஆலைகள் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமலும், விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்று முறையாகக் அதிகாரிகளால்  கண்காணிக்கப் படாததாலும், இந்த ரசாயன ஆலைகளால் கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் சுற்றுச்சூழல், வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
                  எனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ரசாயன ஆலைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குடிகாடு ரவி, வீரமணி, ராஜு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

புதன், பிப்ரவரி 02, 2011

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு: மதுரை கே.வி., மாணவிக்கு தேசிய விருது



        சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.

             மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

                இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.

சத்யப்ரியா கூறியதாவது:

           "ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். 

                 வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. 

              குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior