உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சூரசம்ஹார விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரசம்ஹார விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் சூரசம்ஹார விழா

கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசாமி கோயிலில் வியாழக்கிழமை, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
கடலூர்:
                கடலூர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கந்தசஷ்டி விழா முருகன் கோயில்களில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
                   கடலூரில் புருகீஸ்பேட்டை முருகன் கோயில், புது வண்டிப்பாளையம் சுப்பிமணியசாமி கோயில், புதுப்பாளையம் முருகன் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) முருகன் திருக்கல்யாண வைபவம் முருகன் கோயில்களில் நடக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior